பரிசுத்த ஆவியின் அபிஷேகம்
58-0928M

1.கடந்த இரவு நான் உங்களை நள்ளிரவு மட்டும் பிடித்து வைத்திருந்த பிறகும், இன்றிரவு அநேகரைக் காண்பது நிச்சயமாகவே மிகுந்த மகிழ்ச்சியாயுள்ளது. நீங்கள் எல்லோருமே இன்றைக்கும் இருப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை, ஆனால் நீங்கள் ஞாயிறு வேதபாட பள்ளியிலிருந்து வருவது போன்று காணப்படுகிறது, அது மிகவும் நன்றாயுள்ளது.
2 இப்பொழுது நாம் இந்த சபை உபதேசத்தின் பேரில் நம்முடைய நேரத்தை எடுத்து ஆய்ந்து படிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். நான் அதைப் போதிக்கிறேன். இப்பொழுது எனக்குத் தெரியாத சில அந்நியர்கள் இங்கே நம்மோடிருக்கலாம். இச்சபையின் அங்கத்தினர்கள் யார் என்று அறிந்துகொள்ளக் கூட நான் போதிய நேரம் கூடாரத்தில் இருப்பதில்லை. ஆனால் இந்த செய்தி சபையின் அங்கத்தினர்களுக்கு மாத்திரமே என்று நான் அறிவித்திருந்தேன். காரணம் வெளியே ஜனங்கள் பல்வேறு வித்தியாசமான உபதேசங்களை உடையவர்களாயிருக்கிறார்கள். அவர்கள் அந்தக் காரியங்களை விசுவாசிக்கிறார்கள். அவைகளை விசுவாசிக்க அவர்கள் கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள். நீங்கள் மற்றொரு சபைக்கு வரும்போது, அந்த சபையானது ஏதோ ஒரு காரியத்தை மிகவும் முரண்பட்டதாய் போதிக்கலாம். அப்பொழுது அவர்கள், “நான் அதனோடு இணங்குவதில்லை” என்று கருதுகிறார்கள். பாருங்கள்? பாருங்கள், நாம் மூர்க்கத்தனமாக இருக்க வேண்டுமென்றோ அல்லது எவருக்கேனும் தீங்கிழைக்க வேண்டுமென்று கருதியோ நாம் இதைச் செய்கிறதில்லை. இப்பொழுது நீங்கள் விரும்பிகிற எந்தக் காரியத்தையும் நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். ஆனால் நாங்கள்…நான் இதை ஒழுங்குபடுத்தி, உண்மையாகவே பலப்படுத்தியாக வேண்டும், ஏனென்றால் நாங்கள் இதை வலியுறுத்திக் கூறியாக வேண்டும். அதற்காகத்தான் இந்தக் கூடாரம் நிற்கிறது, பாருங்கள், நாங்களும் அதற்காகத்தான் நிற்கிறோம். எனவே நாங்கள் அந்தவிதமாக உங்கள் மனதைப் புண்படுத்த விரும்பமாட்டோம். நாங்கள் உங்களை உங்களுடைய நம்பிகைக்கு ஊறுவிளைவிக்கவோ அல்லது அதுபோன்ற எந்தக் காரியத்தையும் செய்யவோ முயற்சித்துக்கொண்டிருக்கவில்லை என்றே கருதுகிறோம். அந்த நோக்கத்திற்காக அல்ல. இது ஒரு…
3 நாங்கள் இதைக் குறித்து ஏறக்குறைய இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நாங்கள் எதன்பேரில், எந்த உபதேசத்திற்காக நிற்கிறோம் என்று விவரமாக எடுத்துரைக்கிறோம். என்னத்திற்காக, ஏன் இதை விசுவாசிக்கிறோம் என்று கூறுகிறோம். ஆகவே இச்சபையின் அங்கத்தினராயில்லாத அந்நியர்கள் எவரேனும் இங்கிருந்தால், இந்தக் காலையில் மற்றும் இரவும் கூட இந்தக் காரியத்தை ஆய்ந்து பேசுவதன் பேரில் உங்களுக்கு அதைத் தெரிவிக்க நாங்கள் நிச்சயமாகவே மகிழ்ச்சியடைகிறோம்.
4 அதன்பின்னர் புதன்கிழமை இங்கே வழக்கமான கூட்டம் துவங்க உள்ளது. நான் இங்கே கூடாரத்தில் நடைபெறுவதையே குறிப்பிட்டுக் கூறுகிறேன். நான் ஒரு சிறு இளைப்பாறுதலுக்காக கொஞ்ச நாளாக சற்று தூரமாய்த் தங்கியிருந்தேன். நான் உண்மையாகவே களைப்புற்றிருந்தபடியால், கொஞ்சக்காலம் ஓய்வெடுக்க சற்று தூரமாக செல்ல வேண்டியதாயிருந்தது. எனவே நான் இப்பொழுது திரும்ப வந்தபோது அருமையான, அற்புதமான உணர்வினைப் பெற்றேன். ஆகையால் இந்தக் கூட்டம் முடிவுற்றவுடன் நான் மீண்டும் சென்று, ஜனவரி மாதம் வரை திரும்பி வரமாட்டேன். நான் வேறெந்த கூட்டங்களுக்கும் செல்லப்போவதில்லை; ஆனால் நான் தொடர்ந்து இளைப்பாறும்படியாகவேப் போகிறேன்.
5 ஆனால் நாங்கள் உள்ளே நுழைந்தபோது, சபையானது ஒருவிதமாக அங்கும் இங்கும் சற்று நிலைகுலைந்து காணப்படுகிறதையும், அங்கத்தினர்களில் சிலர் ஒருவிதமாக வெதுவெதுப்பாகத் துவங்கி, குற்றங்கூறிக்கொண்டும், ஒருவருக்கொருவர் பகைமை உணர்வோடு இருப்பதையுங் கண்டோம். எனவே நாங்கள் இந்த எல்லாவற்றையும் சரிப்படுத்த ஒவ்வொருவரிடமும் சென்றோம். அது இப்பொழுது சரியாயுள்ளது. பார்த்தீர்களா?
6 இப்பொழுது எந்தக் காரியமும் தவறாயில்லை. எந்த அங்கத்தினர்களிடமும் எவ்வித தவறும் காணப்படவில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் அருமையானப் புருஷரும், ஸ்திரீகளுமாயிருக்கிறார்கள். ஜனங்களிடையே காணப்படுகிற அந்தக் காரியம் பிசாசு என்பதை அவர்களால் அறிந்துகொள்ள முடிந்திருந்தால் நலமாயிருக்கும். அது முற்றிலும் உண்மை. அது ஜனங்கள் அல்ல. உங்களால் அதை ஒரு சகோதரனிடத்தில் காண முடிந்தால், அப்பொழுது அவர் அந்த நபருக்கு எதிராக பகைமை கொண்டிருக்கமாட்டார். அவர்……அவர் மோசமாக உணருவார். அவர் அந்தவிதமாக உணரும்போது, “நல்லது, அதாவது…நான் என்னுடைய சகோதரனுக்காக வருந்துகிறேன்” என்பார். பாருங்கள், அவர் தவறே செய்திருந்தாலும், ஏன், அது அந்த சகோதரன் செய்யவில்லை. அதை செய்தது பிசாசாகும்.
7 நீங்கள், “நல்லது, இந்த நபர் இன்ன, இன்ன காரியத்தைச் செய்தார்” என்று கூறுகிறீர்கள். உங்களுடைய சகோதரன் அதைச் செய்யவில்லை. உங்களுடைய சகோதரி அதைச் செய்யவில்லை. அதைச் செய்ததோ அவர்களுக்குள்ளிருந்தப் பிசாசாகும். ஆகையால் அந்தச் சகோதரனையோ, அந்தச் சகோதரியையோ குற்றப்படுத்தாமல், அந்தப் பிசாசைக் குற்றப்படுத்துங்கள். அதைச் செய்யக் காரணமாயிருந்தவன் அவன்தான்.
8 ஆகையால் இப்பொழுது இந்தச் சபை உபதேசங்கள், உங்களுக்கு அவைகள் மிகவும் விநோதமாகத் தென்படலாம். நீங்கள் அவைகளோடு இணங்காமலிருக்கலாம். ஆனால் நாங்கள்…அந்தவிதமாகத்தான் நாங்கள் விசுவாசிக்கிறோம். அது வேதாகமத்தில் இருக்கின்ற காரணத்தால் நாங்கள் அதை விசுவாசிக்கிறோம். நாங்கள் அந்த விதமாகவே அதைப் போதிக்கிறோம்.
9 இப்பொழுது, கடந்த இரவு என்னுடையப் பாடப்பொருள்; “நாம் ஏன் ஒரு ஸ்தாபனமல்ல?” என்பதாயிருந்தது. இப்பொழுது நாம் ஓர் அமைப்பாயிருக்கிறோம், ஏனென்றால் நாம் ஒரு சபையாய் இருக்கிறோம். ஆனால் நாம் ஒரு ஸ்தாபனமல்ல. எனவே அப்பொழுது நாம் ஏன் ஒரு ஸ்தாபனமல்ல என்பதற்கானக் காரணங்களை நான் கூறிக்கொண்டிருந்தேன்.
10 இப்பொழுது நாம் இக்காலையில் இந்த ஆய்வினைத் துவங்கும்போது, நாம் இதைச் செய்வதற்கு முன்னர், நாம் ஜெபம் செய்வோமாக.
11 அன்புள்ள தேவனே, நாங்கள் மீண்டும் உம்முடைய பரிசுத்த பிரசன்னத்திற்கு வந்திருக்கையில், நீர் உம்முடைய சொந்த மகிமைக்கென்று, நீர் கிரியைச் செய்யும்படியான கருவியாய் நாங்கள் எங்களை உம்மிடம் சமர்ப்பிக்கும்படியாய் நீர் எங்களுடைய சொந்த சிந்தனைகளையும், எங்கள் ஆத்துமாக்களையும் சுத்திகரிக்கும்படி வேண்டிக் கொள்கிறோம். பிதாவே என்னுடைய சிந்தனைகளை, என் மனதை, நான் பேசுவதை சுத்திகரியும். அது நான் பேசப்போதவதாய் இல்லாதிருப்பதாக. ஆனால் பரிசுத்த ஆவியானவர் களிமண்ணான என் உதடுகளை அபிஷேகிக்க, அது சர்வ வல்லமையுள்ள தேவன் தம்முடைய சபை அறிந்துகொள்ள வேண்டிய சத்தியங்களைப் பிறப்பிப்பதாக.
12 நீர் அதைச் செய்யும்படியாய் நாங்கள் வேண்டிக் கொள்கிறோம். கர்த்தாவே, நீர் அதைச் செய்வீரேயானால், அப்பொழுது எல்லாப் பிசாசின் பிரச்சனையும் பின்னிட்டுச் செல்ல, ஜனங்களிடத்திலிருந்து பகைமை, தீங்கு செய்யும் எண்ணம் போன்ற ஒவ்வொரு பிசாசும் விலக, அவர்கள் பரிசுத்த ஆவியானவர் பேசுவதைக் கேட்பார்களாக. தேவனே இந்த எங்களுடைய ஒன்று கூடுகையிலிருந்து இந்தக் காலையில் நீரே மகிமையை எடுத்துக்கொள்வீராக. நீர் எங்களிடத்தில் பேச முடியாதபடியான நிலைமையில் எங்களுடைய இருதயத்தில் எந்த ஒரு காரியமாவது காணப்பட்டால், ஓ தேவனே, கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமாய் அதை எங்களிடத்திலிருந்து எடுத்து எறிந்து போடும். ஏனென்றால் நாங்கள் தேவனுடைய சித்தத்தை மாத்திரமே செய்யும்படி அறிந்துகொள்ள விரும்புகிறோம். எனவே சபையின் பேரிலும், அதனுடைய உபதேசத்திலும், மற்றும் அது என்னத்திற்காக நிற்கவேண்டுமென்றும், அது ஏன் இங்கு நிற்க வேண்டுமென்றும் ஆராய்ந்து பேசப்போகும் இந்தக் காரியத்தில் உம்முடைய பரிசுத்த ஆவியின் மூலம் எங்களை வழிநடத்தும். நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.
13 இப்பொழுது, கடந்த மாலை நாம் ஏன் ஒரு ஸ்தாபிக்கப்பட்ட ஸ்தாபன அமைப்பாயிருக்கவில்லை என்பதைப் பற்றியக் கருத்தினைக் கூறிக்கொண்டிருந்தோம். நாம்…இதற்கான ஒரு சிறு பின்னணியாய் இது உள்ளது. காரணம் ஸ்தாபனத்தில் நாம் காண்பது என்னவெனில் அது ஒரு தடைவேலியை அமைத்து இழுக்கிறது.
14 இப்பொழுது நாம் அநேகக் காரியங்களை கலந்தாலோசித்தோம். நாம் ஏன் சபையில் பெண் ஊழியக்காரிகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை நாம் கடந்த இரவு கலந்தாராய்ந்துப் பேசினோம்.
நாம் கூடுமானால் இந்தக் காலையில் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்ற பொருளின் பேரிலும், நாம் ஏன் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தில் விசுவாசங்கொண்டுள்ளோம் என்றும், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் எப்படி வருகிறது என்றும், அது என்ன செய்கிறது என்றும், அது உங்களை அதற்குப் பின்னர் எப்படி செயல்படச் செய்கிறது என்றும் பேச விரும்புகிறோம்.
15 அதன் பின்னர் இன்றிரவு கர்த்த்தருக்குச் சித்தமானால், “சர்ப்பத்தின் வித்து, இந்த நாளில் உள்ள இதைக் குறித்த” இந்தப் பொருளின் பேரில் நான் பேச விரும்புகிறேன். இப்பொழுது ஜனங்கள் சர்ப்பத்தின் வித்தை விசுவாசிப்பதில்லை, ஆனால் அது வேதப்பூர்வமானதாயுள்ளது. பார்த்தீர்களா? இப்பொழுது அதைப் பொருட்படுத்தாதைக் குறித்து…
16 இப்பொழுது, இது, நான் இதைக் கடுமையாகக் கூறுவதாயிருந்தால், நான் அதை இப்பொழுது அருமையான ஜனங்களாகிய உங்களிடத்தில் வேண்டுமென்றே கூறவில்லை. நான் அதை உங்களுக்குப் புரியும்படிச் செய்ய மாத்திரமே முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். நாங்கள் அதை சற்று கரடு முரடாகப் பேசப் போவதாயிருக்கலாம், பாருங்கள், சில சமயத்தில் நீங்கள் கூட இந்தவிதமாய்க் கடினமாய்ப் பேச வேண்டியதாயுள்ளது…அதாவது நீங்கள், “ஜானி போய் உட்காரு” என்று கூற, அவரோ அதற்கு செவிகொடாமலிருக்கலாம். ஆனாலும் நீங்கள், “ஜானி, உட்காரு!” என்று கூற வேண்டியதாயிருக்கும். அதே சமயத்தில் ஜானியோ அதற்கு அதிகக் கவனம் செலுத்துவான். ஆகையால் இந்தக் காலையில் நாம், “ஜானி, உட்காரு” என்று சத்தமிடுவது போன்றிருக்கும். புரிகிறதா? சரி. எனவே நாங்கள் எதைப்பொருட்படுத்திக் கூறுகிறோம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளும்படியாய் நான் இதைப் பேச விரும்புகிறேன். புரிகிறதா?
17 உங்களுடைய சிந்தைகளுக்கு, உங்களுடைய நம்பிக்கைக்கு முரண்பட்ட ஏதோ ஒரு காரியத்தை நாங்கள் கூறுவோமேயானால், நாங்கள் ஒரு காரியத்தை…உடையவர்களாயில்லை, நினைவிருக்கட்டும், அதாவது, இந்தச் சபை ஒரு ஸ்தாபன பாகுபாடற்ற சபையாய் உள்ளது. ஒருவர் பாப்டிஸ்டாகவோ, மெத்தோடிஸ்டாகவோ, பிரஸ்பிடேரியனாகவோ, லூத்தரனாகவோ, கத்தோலிக்கராகவோ, பிராட்டெஸ்டன்டாகவோ, யூதராகவோ, அவர் என்னவாயிருந்தாலும், அவர் ஒரு சகோதரனாயிருக்கும் வரையில், அவர் எந்த ஸ்தாபனத்தை சார்ந்தவராயிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, அவர் எங்களுடைய சகோதரன் என்றே நாங்கள் விசுவாசிக்கிறோம். அவ்வளவுதான். அவர் ஒரு ஸ்தாபனத்தில் இருப்பதற்காக தேவன் அவருக்கு எதிராக ஒருபோதும் குற்றம்பிடிக்கமாட்டார்.
18 ஆனால் ஸ்தாபனங்கள் இருப்பதற்கு காரணம் உண்டு. இப்பொழுது இப்படித்தான் ஸ்தாபனங்கள் துவங்குகின்றன. தேவன் ஒரு சிறு காரியத்தை யாரோ ஒருவருக்கு வெளிப்படுத்தும்போது, அவர்கள் தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் பேரில் ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொள்ளுகிறார்கள். அப்பொழுது தேவனால் அதற்குபின் அவர்களிடத்தில் அசைவாட முடிவதில்லை.
19 கிருபையின் இரண்டாம் கிரியையைத் தவிர வேறெந்தக் காரியத்தையாவது எப்போதாவது மெத்தோடிஸ்டுகளால் ஏற்றுக்கொள்ள முடிந்ததா? அவர்கள் அதற்கு கீழேத் தங்களை ஸ்தாபனமாக்கிக்கொண்டனர். பாப்டிஸ்டுகளாலும்…வேறெதையாகிலும் எப்போதாவது விசுவாசிக்க முடிந்ததா…“நீதிமான்…” இல்லை, சரியாகக் கூறினால், லூத்தரன்கள், “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” என்பதை மட்டுமே ஏற்றுக்கொண்டனர். அதன் கீழே அவர்கள் தங்களை ஸ்தாபனமாக்கிக் கொண்டனர். அவர்கள் விசுவாசித்ததைப் பார்க்கிலும் பாப்டிஸ்டுகளால் எப்படி அதிகமாக விசுவாசிக்க முடிந்தது? “ஏன், நீங்கள் விசுவாசிக்கும்போது, நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்கிறீர்கள். தண்ணீரில் முழுக்கு ஞானஸ்நானம், அதுவே அதற்கு தீர்வாகிறது” என்றனர். ஏன்? அதன் அடிப்படையில் அவர்கள் ஸ்தாபனமாக்கப்பட்டிருக்கின்றனர். பார்த்தீர்களா? பெந்தேகோஸ்தேயினரோ, “நீங்கள் அன்னிய பாஷையில் பேசும்போது, நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுகிறீர்கள். அதுவே இதற்கு தீர்வாகிறதல்லவா?” என்று கூறுகின்றனர். ஏனென்றால் அவர்கள் அதன் கீழே ஸ்தாபனமாக்கப்பட்டிருக்கின்றனர். சகோதரரே அவர்களுடையக் காரியங்கள், அவர்கள் ஒவ்வொருவரும் அப்படியிருக்கலாம், சரி, ஆனால் தேவன் எந்த ஸ்தாபனத்திலும் கட்டப்பட்டிருக்கவில்லை. அவர் முழு காரியத்தையும் பிரசங்கிக்கச் செய்கிறார். அவ்வளவுதான். நாம் அதை விசுவாசிக்கிறோம்.
20 அந்தக் காரணத்தினால்தான் நாம் ஒருபோதும் ஒரு ஸ்தாபனமாகவில்லை. இந்த சிறு சபை பல்வேறுபட்ட ஸ்தாபனங்களால் ஒன்றுசேரும் தருணத்தைக் கர்த்தர் நமக்கு அளித்திருந்தாலும், நாம் ஒரு ஸ்தாபனமாகிவிடவில்லை. ஏனென்றால் இது இயேசு கிறிஸ்துவின் ஆளுகையின் கீழும், தலைமைத்துவத்தின் கீழும் தரித்திருக்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன். அது உண்மை. அவர் நமக்கு என்ன வெளிப்படுத்தினாலும், நாம் அது சத்தியமாயுள்ளதா என்றும், அது அவருடைய வார்த்தையோடு இணைந்துள்ளதா என்றும், வேதாகமம் முழுவதுமே அதைப் பார்த்து, அது சத்தியம் தான் என்று கண்டு, ஆவியானவர் அதன் பேரில் இணங்கும்போது, நான் அதனை ஏற்றுக்கொள்ளாதபடி நம்மை தடுத்து நிறுத்த நமக்கு எந்த ஸ்தாபன தடைகளுமே கிடையாது. எனவே நாம் அதனை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து முன்செல்கிறோம்.
21 கிறிஸ்துவின் சபை என்று பெயரிட்டு அழைக்கப்படுகின்ற ஸ்தாபன சபை, அவர்கள் ஸ்தாபனத்தின் கீழே இருந்துகொண்டு, “அற்புதங்களின் நாட்களின் கடந்துவிட்டன என்பது போன்ற மற்றக் காரியங்களையும் கூறுகின்றனர்.” ஏன், நீங்கள் அதை வேதத்தில் எங்காவது கண்டறிவீர்களா? ஆனால் அவர்களால் அதைக் குறித்த ஒன்றையுமே கண்டறிய முடியாது. அவர்கள் ஏதோ ஒரு காரியத்தின் கீழே ஸ்தாபனமாக்கப்பட்டிருக்கின்றனர். பாருங்கள், ஆகையால் உங்களால் அதைக் குறித்து ஒன்றுமே செய்ய முடியாது.
ஆனால் நாமோ சுயாதீனமாயிருக்க விரும்புகிறோம். ஆவியானவர் நம் மீது அசைவாடுகிற ஆழ்ந்த ஆழத்திலும், உயரிய உயரத்திலும் நம்மால் அசைவாட முடிகிறது. எனவே அவர் எங்கே தொடர்ந்து அசைவாடுகிறாரோ அங்கே நாமும் தொடர்ந்து அசைவாடிக்கொண்டேயிருக்கிறோம்.
22 ஆனால் இப்பொழுது நாம் எந்த மூடபக்தி வைராக்கியத்தையும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். எனவே நாங்கள் அங்கே ஓர் எல்லைக்கோட்டை வரைந்துவிடுகிறோம். யாரோ ஒருவர் கர்த்தர் அவருக்கு ஏதோ ஒரு சிறு காரியத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் என்று கூற, அதுவோ இந்த வேதாகமத்தோடு ஒத்துப்போகாதிருந்தால், ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை அது சரிவர ஒத்துப்போகவில்லையென்றாலும், அது ஒரு போதகமாகிவிட்டால் அப்பொழுது நாங்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டோம். புரிகிறதா? அது வேதாகமத்திலிருந்து வரவேண்டும். அது வேறு யாரோ ஒருவருடைய வெளிப்பாடாயிருக்க முடியாது. வெளிப்பாடு வார்த்தையோடு சரியாகப் பொருந்தினால் சரியே.
23 கொஞ்ச காலத்திற்கு முன்னர் ஒரு மனிதன் என்னிடத்தில் வந்தார். அவர், “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, நான் அமெரிக்க ஐக்கியநாடுகளிருந்து வருகிறேன்” என்றார். மேலும் அவர், “நான் ஒரு கிறிஸ்தவ சகோதரியோடு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தேன். இந்த கிறிஸ்தவ சகோதரியோ மிக அருமையான ஸ்திரீகளில் ஒருத்தியாய் இருந்தாள். ஆனால் அவள் மூன்று அல்லது நான்கு கணவன்மார்களைக் கொண்டிருந்ததாகக் கண்டறிந்து கூறினர். நான் அவளை அறிந்துகொண்ட மூன்று மாதங்களிலியே அவள் தான் விவாவகம் செய்திருந்த ஒருவனை விட்டுவிட்டு மற்றொருவனை விவாகம் செய்தாள். அதே சமயத்தில் அவள் பரிசுத்த ஆவியைப் பெற்று, அந்நிய பாஷையில் எல்லா நேரத்திலும் பேசி, வழக்கம்போல தீர்க்கதரிசனங்களை உரைத்து, வெளிப்பாட்டைப் பிரசங்கித்தாள். அவள் உண்மையாகவே ஆவியினால் நிரப்பப்பட்ட ஒரு சகோதரியாய் இருந்தாள். அவள் ஒரு பெண் ஊழியக்காரியாயிருந்தாள்” என்று கூறினார். “எனவே அவர் கர்த்தரிடத்தில், ‘ஏன் இப்படிப்பட்ட—இப்படிப்பட்ட காரியங்கள் இருக்கின்றன? என்றும், ஏன் இந்த ஸ்திரீயால் இதைப் போன்ற காரியத்தை செய்ய முடிந்தது?’” என்றும் கேட்டாராம். அப்பொழுது அவர், “நான் என்னுடைய மனைவியைக் குறித்து ஒரு சொப்பனத்தைக் கண்டேன். என்னுடைய மனைவி மற்றொரு மனிதனோடு ஒழுக்கங்கெட்ட முறையில் தொடர்பு வைத்துக்கொண்டிருந்தாள்” என்றார். மேலும் அவர், “அவள் ஒருநாள் என் பாதத்தண்டை வந்து முழங்காற்படியிட்டு, ‘நான் செய்துள்ள காரியத்திற்காக நீர் என்னை மன்னிப்பீரா?’” என்று கேட்டதாகக் கூறினார். அப்பொழுது இவர், “‘நிச்சயமாகவே நான் உன்னை மன்னிக்கிறேன்’ என்றாராம். அதற்கு அவர் மனைவியோ, ‘நீர் ஏன் என்னை இப்படி தாராளமாய் மன்னிக்கிறீர்?’ என்று கேட்க, இவரோ, ‘நான் உன்னை நேசிப்பதுதான் காரணம்’ என்று கூறினாராம்” மேலும் அவர் என்னிடம், “கர்த்தர் சொப்பனத்தில் என்னிடத்தில் பேசி, அவளை மன்னிக்கும்படி கூறினக் காரணத்தால் நான் அவளை மன்னித்தேன், ஏனென்றால் நான் அவளை நேசிக்கிறேன்” என்று கூறினார்.
24 அப்பொழுது நான், “ஐயா, உங்களுடைய சொப்பனம் மிகவும் இனிமையாயிருந்தது. அது மிகவும் அருமையாய் இருந்தது. ஆனால் கர்த்தர் அந்தச் சொப்பனத்தை உங்களுக்கு ஒருபோதும் அளிக்கவில்லை. ஏனென்றால் அது அவருடைய வார்த்தையோடு ஒவ்விப்போகவில்லை” என்றேன். அது உண்மை. அது அவருடைய வார்த்தையோடு கிரியை செய்யாது. அது எவ்வளவு உண்மையாகத் தென்பட்டாலும் கவலைப்பட வேண்டியதில்லை. அது வார்த்தையிலிருந்து வந்திருக்க வேண்டும்.
25 பழைய ஏற்பாட்டில் அவர்கள் ஒரு செய்தியை அறிந்துகொள்ள மூன்று வழிகள் உண்டாயிருந்தன. முதலாவது நியாயப்பிரமாணத்தின் மூலம் அறிந்துகொள்வதாயும், அதற்கு அடுத்தபடியாக ஒரு தீர்க்கதரிசியின் மூலம் அறிந்துகொள்வதாயும், அதற்கு அடுத்ததோ ஒரு சொப்பனக்காரன் மூலமாக அறிந்துகொள்வதாயுமிருந்தது. இப்பொழுது, நியாயப்பிரமாணம் கற்பலகைகளில் எழுதப்பட்டு உடன்படிக்கைப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது, அது கற்பனைகளாய், நியாயப்பிரமாண கற்பனைகளாயிருந்தது. அப்பொழுது ஒரு தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரைக்க முடிந்தது அல்லது ஒரு சொப்பனக்காரனால் சொப்பனம் காணமுடிந்தது அதாவது தேவன் இரண்டு வழிகளில், தீர்க்கதரிசிகளோடும், சொப்பனங்களோடும் ஈடுபடுகிறார். “உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடு பேசுவேன். அவன் கூறுகிறது நிறைவேறினால், அப்பொழுது அவனுக்கு செவிகொடுங்கள், ஏனென்றால் நான் அவனோடு இருக்கிறேன். அவன் கூறினது நிறைவேறவில்லையென்றால், அப்பொழுது அவனுக்கு செவிகொடுக்க வேண்டாம்.”
26 இப்பொழுது, தீர்க்கதரிசனம் உரைப்பவனோ, ஒரு தீர்க்கதரிசியோ, அல்லது ஒரு சொப்பனக்காரனோ ஒரு சொப்பனத்தையோ அல்லது தீர்க்கதரிசனத்தையோ உரைத்தால், அவர்கள் அது உண்மையா அல்லது இல்லையா என்பதைக் கண்டறிய அதைக் கூறுபவனை ஊரீம் தும்மீம் என்று அழைக்கப்பட்டதினண்டை கொண்டு சென்றனர்.
27 இப்பொழுது உங்களில் சிலருக்கு இது சற்று கடினமான வார்த்தையாயிருக்கலாம் என்பதை நான் அறிவேன். ஆனால் அது உண்மையாகவே என்னவாயிருந்ததென்றால்…இஸ்ரவேலின் பன்னிரெண்டு கோத்திரங்கள் மேலும் ஆரோன் பிரதான ஆசாரியனாய் இருந்தான். அவன் இரு பக்கங்களைக் கொண்ட அதன் ஒவ்வொரு பக்கத்திலும் ஆறு கற்களைக் கொண்ட ஒரு மார்ப்பதக்கத்தை உடையவனாயிருந்தான். ஒவ்வொரு கல்லும் ஒவ்வொரு கோத்திரத்தின் பிறப்புக் கல்லாயிருந்தது, அதாவது யூதாக் கோத்திரம், காத் கோத்திரம், ரூபன் கோத்திரம், பென்யமீன் கோத்திரம் போன்றதேயாகும். ஒவ்வொரு கோத்திரமும் ஒரு பிறப்புக்கல்லை உடையதாயிருந்தது. அப்பொழுது அந்தப் பிறப்புக்கல்……இது சபையில் உள்ள ஒரு தூணின் மார்ப்பதக்கத்தில் பதிக்கப்பட்டு தொங்கிக் கொண்டிருக்கும். அப்பொழுது கர்த்தர் குறிப்பிட்டக் காரியத்தைச் செய்யப்போகிறார் என்று தீர்க்கதரிசனமுரைத்திருந்த ஒரு தீர்க்கதரிசியை அவர்கள் அதற்கு முன்பாக கொண்டு வருவர். அப்பொழுது அவர்கள் அங்கே அவனைக் கொண்டுவரும்போது, அவன் தன்னுடைய தீர்க்கதரிசனத்தைக் கூறுவான் அல்லது அவன் தன்னுடைய சொப்பனத்தைக் கூறுவான். இப்பொழுது தேவன் அந்த சொப்பனத்தில் இருந்தால் அல்லது அந்தத் தீர்க்கதரிசனத்தில் இருந்தால், அந்த கற்களின் ஒளிகள் பிரகாசித்து ஒன்றாய் கலந்து வானவில்லைப் போன்ற ஒரு நிறத்தைப் பிரதிபலிக்கும், அதுவே இயற்கைக்கு மேம்பட்ட பதிலாகும். புரிகிறதா? அது உண்மை. அங்குள்ள ஒவ்வொரு கல்லின் சம்மதத்தோடு, ஒவ்வொரு கல்லின் பாகமும் ஒன்று சேர்ந்து அந்த நிறத்தைத் தேவனுடையப் பதிலாகப் பிரதிபலித்தன, அதாவது “அந்த மனிதன் ஒரு தீர்க்கதரிசியாயிருக்கிறான். அவன் உண்மையைக் கூறிக்கொண்டிருக்கிறான்”, அல்லது “அந்தச் சொப்பனம் என்னால் அனுப்பப்பட்டது” என்பதாகும். ஆனால் அது அசையாமல் செயலற்று, ஒளியைப் பிரதிபலிக்கவில்லையென்றால், அப்பொழுது அது எவ்வளவுதான் உண்மையாகத் தென்பட்டாலும் எனக்குக் கவலையில்லை, அது தவறானதாகும். அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமலிருந்தனர்.
28 இன்றைக்கு அது என்ன ஓர் அழகான எடுத்துக்காட்டாயுள்ளது. இப்பொழுது பழைய ஏற்பாடின் ஊரீம் தும்மிம் போய்விட்டது, ஏனென்றால் ஆசாரியத்துவம் மாற்றப்பட்டுவிட்டது. இப்பொழுது ஊரீம் தும்மீம் தேவனுடைய வார்த்தையாய், வேதாகமமாய் உள்ளது. ஆம் ஐயா. இங்கே வேதம், “தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன்” என்றே உரைத்துள்ளது. ஒரு மனிதன் ஒரு காரியத்தைக் கூறிக்கொண்டிருக்கும்போது, அல்லது அவனுடைய சொப்பனம் உண்மையாய் இருப்பதுபோன்று எவ்வளவுதான் தென்பட்டாலும் அல்லது அவனுடைய வெளிப்பாடு உண்மையாய் இருப்பதுபோன்று தென்பட்டாலும் அது ஒரு பொருட்டல்ல, ஆனால் அது வேதாகமத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்திலும், முழு வேதாகமத்தையும் பிரதிபலிக்கவில்லையென்றால் அது உண்மையல்ல, அதை விட்டுவிடுங்கள், அதை அப்படியே விட்டுவிடுங்கள்.
29 இப்பொழுது உங்களால் இங்கே ஒரு சிறு வேத வசனத்தின் பகுதியை எடுத்துக்கொண்டு, “இயேசு இன்னின்னதைச் செய்தால், எனவே நாமும் அதையே செய்ய வேண்டும்” என்று கூற முடியும். நீங்கள் கூற விரும்புகிற எந்தக் காரியத்தையும் உங்களால் கூற முடியும். ஆனால் அது தேவனுடைய வார்த்தையோடு பரிபூரணமாய் எல்லாவிதத்திலும் இசைந்து வரவேண்டியதாயுள்ளது. அப்பொழுதே அது சரியானது, அது தேவன் அவ்வண்ணமாய்க் கூறுகிறதாயுள்ளது. இதுவே அவருடைய ஊரீம் தும்மீமாயுள்ளது.
30 ஆகையால் தேவன் எந்த காலத்திலும் ஸ்தாபன சபைகளை ஒருபோதும் வைத்திருந்ததேயில்லை. எப்பொழுதாவது வைத்திருந்தால் அதை நீங்கள் எனக்குச் சொல்லுங்கள். இப்பொழுது, கடைசி சீஷன் மரித்து முந்நூற்றருபது வருடங்கள் வரையிலும் எந்த ஒரு ஸ்தாபனமும் உண்டாகவேயில்லை. அதன்பின்னர் உண்டானதுதான் ரோமன் கத்தோலிக்க சபையாகும். ரோமன் கத்தோலிக்க சபையை, தேவன் அவளை வேதத்தில் உள்ள வெளிப்படுத்தின விசேஷம் 17-ம் அதிகாரத்தில், “ஒரு வேசி” என்றே அழைத்தார். அதாவது கற்பொழுக்கங்கெட்ட ஸ்திரீ. அதிலிருந்து அவளுக்கு குமாரத்திகள் தோன்றினர். அந்த குமாரத்திகளும் வேசிகளாய் அவளைப் போன்றே கற்பொழுக்கங்கெட்ட ஸ்திரீகளாய் இருந்தனர். அந்தவிதமாகத்தான் வேதம் உரைத்துள்ளது. ரோமன் கத்தோலிக்க சபை எல்லா பிராட்டெஸ்டென்டு கொள்கையையும் பிறப்பித்தது. எனவே பிராட்டெஸ்டென்டுகளும் அவள் செய்த அதேக் காரியத்தைச் செய்து திரும்பிச் சென்றுவிட்டனர்.
31 அந்தக் காரணத்தினால்தான் அவள் கற்பொழுக்கங்கெட்டவளாயிருந்து, அவள் தன்னுடையக் கையில் கோட்பாடுகளைக்கொண்ட ஒரு பாத்திரத்தை தன்னுடைய வேசித்தனங்களால் நிறைந்த அவளுடையக் கோபாக்கினை என்னும் மதுவை ஒரு பாத்திரத்தில் பிடித்திருந்தாள். அவள் அதை பூமியின் இராஜாக்களுக்குக் கொடுத்தாள். அவள் திரளான தண்ணீர்கள் மேல் உட்கார்ந்திருந்து, பூமியின் அதிபதிகள் மேல் ஆளுகை செய்தாள். நாம் அதை அவ்வண்ணமே வேதத்தில் கண்டறிந்தோம். அவள் ஏழு மலைகளின்மேல் உட்கார்ந்துகொண்டிருக்கிற ஒரு சபை என்பதை நாம் கண்டறிந்தோம். நாம் அதைக் கண்டறிந்தோம். அவள் மூன்று கிரீடங்களால் முடிசூட்டப்பட்டிருந்தாள் என்றும் நாம் கண்டோம். அதாவது நரகம், பரலோகம் மற்றும் பாவவிமோசன ஸ்தலத்தின் மேல் அதிகாரம். உண்மை. ஒரு மனிதன் அதை ஆளுகை செய்பவனாயிருந்தான். அவன்தான் அந்திக்கிறிஸ்து, அவன் தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பித்து பூமியிலே பாவங்களை மன்னிக்கிறவனாயிருந்தான். நாம் இவை எல்லாவற்றையும் ஆராய்ந்து அது உண்மை என்பதைக் கண்டோம்.
32 வேதத்தில், “ஞானமுள்ள மனம் இதிலே விளங்கும்” என்று கூறப்பட்டுள்ளது. ஆவியானவர், “ஞானமுள்ளவன்; புத்தியுள்ளவன்; பல்வேறுபட்ட ஆவிகள், வரங்கள்” போன்றவற்றை வெளிப்படையாய் தொடர்ந்து கூறியுள்ளதை நாம் கண்டறிகிறோம். இந்தக் கடைசி நாட்களில் உள்ள அந்தச் சபையில் தேவன் அசைவாடுவதை உங்களால் காணமுடியவில்லையா? முழுமையான ஆவிக்குரிய வரங்களையும், உண்மையானத் தேவனுடைய வரங்களையுங்கொண்ட ஒரு சபை எழும்ப வேண்டும். “இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு”. எனவே அது எங்கே இருந்தது என்பதை நாம் சரியாகக் கண்டறிந்தோம். அது மிகச் சரியாக பொருந்துகிறதல்லவா? அதை நீங்களே எழுதிப் பார்த்துக்கொள்ளுங்கள், “Vicarivs” என்ற லத்தீன் எழுத்துக்களின் அர்த்தம் என்னவெனில் “கிறிஸ்துவின் பிரதிகுரு” என்றும், ‘filii’ என்பதற்கு தேவனுக்குப் பதிலாக என்று பொருளாம். எனவே “VICARIVS FILII DEI” என்ற இலத்தீன் எழுத்துக்களில் காணப்படும் ரோம எழுத்துக்களின் எண்ணிக்கையை நீங்கள் கூட்டிப்பார்த்தால் அறுநூற்றறுபத்தாறு என்ற எண் உங்களுக்கு கிடைக்கிறதா என்று பாருங்கள். உங்களுக்கு சந்தேகத்தை அளிக்கும் இதன் பேரில் அல்லது அதன் பேரில் உங்கள் நம்பிக்கையை வைக்காமல், வேதம் கூறுவதன் பேரிலேயே சரியாக நம்பிக்கை வைத்தால் அதுவே தீர்வாக அமையும்.
33 இங்கேதான் பிராட்டெஸ்டென்டுகளாகிய நாம் வெளிப்படுகிறோம். இப்பொழுது கத்தோலிக்க சபை வெளிக்கொண்டு வந்துள்ள உபதேசத்தையே நாம் பிராட்டெஸ்டென்டு சபையில் இங்கே ஏற்றுக்கொண்டு, அதை வெளிக்கொண்டு வந்து நிலைநாட்ட இன்றைக்கு நாம் முயற்சித்துக்கொண்டிருக்கிறோம். நாம் ஜனங்களுக்கு கத்தோலிக்க சபை அளிக்கிற அதே ஆவிக்குரிய வேசித்தனத்தை அதேக் கண்ணாடிப் பாத்திரத்தில் அளித்துக்கொண்டிருக்கிறோம். காரணம் அவைகள் வேதப்பிரகாரமானவைகள் அல்ல. அவைகள் மனிதனால் உண்டாக்கப்பட்டவை. அது கள்ளத் தீர்க்கதரிசனமாய் உள்ளது. அது ஒரு பொய்யாயுள்ளது. அது பிசாசினால் உண்டானது.
34 நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலத்தை எடுத்துக்காட்ட ஒரு சிறு பின்னணியை நாம் எடுத்துக் கூறினோம். கடந்த இரவு அதைப் பார்த்தோம். அதாவது ஒரு வேசிப்பிள்ளை, முறைதவறிப் பிறந்த பிள்ளை பதினான்கு தலைமுறைகளுக்கு கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது. அது நானூறு வருடங்களாகும். ஒரு தலைமுறைக்கு நாற்பது வருடங்கள். பாவம் எவ்வளவு பயங்கரமானதாயிருந்தது. அது எவ்வளவு பயங்கரமாயிருந்தது என்பது அல்ல, அது இப்பொழுது எவ்வளவு பயங்கரமாயுள்ளது என்பதேயாகும். அது நியாயப்பிரமாணத்தின் கீழே அவ்வாறு இருந்ததனால்…
35 கிறிஸ்து நியாயப்பிரமாணத்தை மிகைப்படுத்தவே வந்தார். அவர் “‘கொலை செய்யாதிருப்பாயாக’ என்று பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான், அதாவது அவனை ஏற்கனவே கொன்றுவிட்டான்” என்றார். அதை மிகைப்படுத்தினார். “விபச்சாரம் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்’. அது ஒரு செய்கையாயிருந்தது; ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபச்சாரஞ்செய்தாயிற்று”, என்று கூறினார். அதை கோடிக்கணக்கான மடங்கு மிகைப்படுத்தினார். அப்படியானால் நியாயப்பிரமாணத்தில் அதை மறையச் செய்ய பதினான்கு தலைமுறைகள் தேவைப்பட்டதானால், அப்பொழுது தேவனுடைய பெரிதுபடுத்திக் காட்டும் கண்ணாடியின் மேல் அதை வைத்துப் பார்த்தால் என்னவாயிருக்கும்?
36 இன்றைக்கு ஜனங்கள், உயர்நிலைப் பள்ளியில் உள்ள பதினெட்டு வயதிற்குட்பட்ட பருவத்தினர் மதுபான விருந்துகளில் கலந்து, குடித்து வெறித்து…இளம் பெண்பிள்ளைகள் விபச்சாரத்தில் வாழ்கின்றனர், இளம் பையன்களும் அத்தகையக் காரியங்களையேச் செய்கின்றனர். இதற்கு அடுத்து எந்தவிதமான ஒரு தலைமுறையை அது உருவாக்கிக்கொண்டிருக்கிறது? இந்த இளம் பெண்பிள்ளைகளை இந்தவிதமாகச் செயல்படச் செய்கிறது எது? அவர்களுடையத் தாயார் ஒரு துடுக்காக சுற்றித்திரியும் ஒரு பெண்ணாக இருந்திருப்பாள், அவர்களுடையப் பாட்டியோ ஒரு கோஷ்டி கானக் குழுப் பெண்ணாய் இருந்திருப்பாள், அவர் பிதாக்களுடைய அக்கிரமத்தை பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும், மூன்றாம், நான்காம் தலைமுறை மட்டும் விசாரிப்பேன் என்று அவர் கூறினார். இதற்குமேல் வேறெதை நீங்கள் எதிர்ப்பார்க்க முடியும்?
37 முழுக் காரியங்களும் கசிந்து வெளிப்படத் துவங்கும்போது, நீதியுள்ள வித்தோ உறுதியற்றுக்கொண்டே போகிறது. துன்மார்க்கரோ செழித்து, மிகுந்த பக்தியுள்ளவர்களைப்போல காண்பித்துக்கொண்டு, தொடர்ந்து பொல்லாங்கினைச் செய்துகொண்டே அதிக துன்மார்க்கராகிக்கொண்டேப் போகின்றனர். எனவே ஜலப்பிரளய அழிவின்போது அவர் செய்தது போன்றே அழிப்பதைத் தவிர வேறொன்றையும் செய்ய முடியாது. மனிதனுடைய ஒவ்வொரு சிந்தனையும் நித்தமும் பாவம் நிறைந்ததாவே காணப்படுகிறது. மனிதனுடையக் காரியம் இன்றைக்கு மதுபானப் புட்டியைக் குறித்ததாய், அல்லது ஏதோ ஒரு பெண்ணைக் குறித்ததாய், அல்லது இங்கும் அங்கும் ஓடுவதைக் குறித்ததாய்க் காணப்பட்டு, தங்களுடைய மனைவிமார்களோடு உண்மையாய் வாழ முடியாதவர்களாயிருக்கின்றனர். பையன்களும் தங்களுடையப் பெண் சிநேசிதர்களுக்கு உண்மையாக வாழ முடியவில்லை. பெண்பிள்ளைகளும் அவ்வாறு பையன்களுக்கு உண்மையாய் வாழ முடியவில்லை. ஏன்? அவர்கள் பொல்லாத ஆவிகளினால் பீடிக்கப்பட்டு, பிசாசினால் அவர்கள் அப்படிப்பட்ட நிலையில் கட்டப்பட்டுள்ளனர். முழு காரியமும் பாவத்தின் கதம்பக் கூளமாகியுள்ளது. அந்தக் காரணத்தினால்தான் நாம் இப்படிப்பட்ட நாளில் இருக்கிறோம். அந்தக் காரணத்தினால்தான் ருஷியா தேவனுடையக் கரங்களில் இந்தக் காரியத்தை இங்கிருந்து அகற்றிப் போடும்படிக்கு பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. வேதம் அவ்வண்ணமாகக் கூறுகிறது. நிச்சயமாக, தேவன் கம்யூனிஸத்தைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். அவர் அதைப் பயன்படுத்துவார். வேதவாக்கியத்தின்படி கம்யூனிஸம் முழுக் காரியத்தையும் அழித்துப் போடும். நாம் அந்தநாளில்தான் இருக்கிறோம்.
38 இப்பொழுது இந்தக் காரியங்களைத் தெளிவுபடுத்தும்போது கவனியுங்கள். ஜனங்களே நீங்கள் இதை சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை கவனித்துப் பாருங்கள். நீங்கள், இதை……இது உங்களுடைய நித்திய இலக்கினை தீர்மானிக்கிறது. ஆகையால் இதை ஏதோ ஒரு சாதாரணக் காரியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அது ஊரீம் தும்மீம்மை பாதித்துக்கொண்டிருப்பதைப் பாருங்கள். அது எப்படியாய் வேத வார்த்தைகளைப் பாதிப்புள்ளாக்கிக் கொண்டிருக்கிறது.
39 இப்பொழுது நாம் இந்தக் காரியங்களைக் குறித்து பேசிக்கொண்டிருக்கும்போது, அவைகள் வேதாகமத்துடன் ஒத்துப்போகிறதா என்று பாருங்கள். அவைகள் வேதம் கூறியுள்ளதோடு பொருந்தியுள்ளதா என்று பாருங்கள்.
40 இப்பொழுது நீங்கள், “நான் ஒரு கிறிஸ்தவன்” என்று கூறும்போது, ஒவ்வொரு சபையும், “நீங்கள் எந்த ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்?” என்றே கேட்கின்றனர். அவர் எந்த ஸ்தாபனத்தைச் சார்ந்தவராயிருந்தாலும், அது என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணப் போகிறது? ஸ்தாபனத்திற்கு தேவனுடைய வேதாகமத்தோடு எந்த ஒரு சம்மந்தமுமில்லை என்பதை நாம் அறிந்துகொள்கிறோம். எல்லா பிராட்டெஸ்டென்ட் ஸ்தாபனங்களுமே வேசிகளாயிருக்கின்றன. உங்களுடைய வேதம் அவ்வண்ணம் கூறியுள்ளதே. நீங்கள் ஒரு மெத்தோடிஸ்டு என்று கூறும்போது, நீங்கள் ஒரு மெத்தோடிஸ்டு வேசியாயிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு பாப்டிஸ்டு என்று கூறும்போது, நீங்கள் ஒரு பாப்டிஸ்டு வேசியாயிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு பெந்தேகோஸ்தேயினர் என்று கூறும்போது, நீங்கள் ஒரு பெந்தேகோஸ்தே ஸ்தாபன வேசியாயிருக்கிறீர்கள். அப்படித்தான் வேதம் உரைத்துள்ளது. ஆகையால் அவள், “வேசிகளுக்குத் தாயாக” இருக்கிறாள். இப்பொழுது, நீங்கள் பெற்றுள்ளதெல்லாம்…
41 இப்பொழுது நீங்கள் இந்த ஸ்தாபனத்தில் ஐக்கியங்கொண்டிருந்து, அதே சமயத்தில் ஒரு கிறிஸ்தவராயிருந்தால், அப்பொழுது நீங்கள் ஒரு கிறிஸ்தவராயிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு மெத்தோடிஸ்டு அல்ல, நீங்கள் ஒரு பாப்டிஸ்டு அல்ல, நீங்கள் ஒரு பெந்தேகோஸ்தேயினர் அல்ல, நீங்கள் ஒரு கிறிஸ்தவராயிருக்கிறீர்கள். இல்லையென்றால், ஏன்…
42 நான் இந்தக் காலையில் சபைக்கு வர ஆயத்தமாகிக்கொண்டிருந்தபோது, லூயிவில்லில் நடைப்பெற்ற இந்தக் கிறிஸ்தவ வட்டமேஜை விவாதத்தை வானொலியில் கேட்டேன். சபைகளோ தங்களுடையப் பிள்ளைகளின் தற்கால மதுபானப் போதக நிகழ்ச்சி நிரலை ஏற்றுக்கொண்டுள்ளதாம்.
எந்தவிதமான ஒரு கூட்ட முட்டாள்களை நாம் தோற்றுவிக்கப்போகிறோம்? அது ஏன்? மேய்ச்சல் தொழில் கொண்ட தென் ஆப்பிரிக்க நாடோடி இனத்தவருக்கு எப்படி எகிப்திய இரவுக் கதைகள் தெரிந்திருக்காதோ, அதுபோலவே அவர்களுடைய தாயாருக்கும், தகப்பனுக்கும் தேவனைக் குறித்து ஒன்றுமே அறியாதிருப்பதே அதற்குக் காரணமாகும். அந்த முழுக் காரியத்திலுமிருந்தும் விலகியிருங்கள். நீங்கள் உங்களை நவநாகரீகமுள்ளவர்களாக ஆக்கிக்கொள்ள…வேண்டியதில்லை. நீங்கள் அதைச் செய்யும்போது, உங்களை மட்டுமீறிய மதுபான போதைக்குட்பட்டவராக்கிக் கொள்ளுகிறீர்கள். “ஓ, நாம் அவளை அதைச் செய்ய அனுமதிப்போம், அவனை இதைச் செய்ய விடுவோம்,” என்று அந்தவிதமாகக் கூறுகிறோம். நீங்கள் எதை எதிர்ப்பார்க்க முடியும்? நாம் மற்றொரு தலைமுறைக்குச் செல்லமுடியாது. நாம் அதைச் செய்ய முடியாது. நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம்.
43 ஆகையால் நீங்கள் என்னை ஒருவிதமான போலி என்று பெயரிட்டு அழைக்க நான் விரும்பவில்லை. நான் அவ்வாறு அழைக்கப்படலாம். நான் அவ்வாறு அழைக்கப்பட்டாலும்…அதைக் குறித்து ஒன்றும் அறியாதவனாயிருக்க விரும்புகிறேன்.
44 அங்கு அமர்ந்துள்ள என் மனைவியினிடத்தில் நான் கூறினேன். நான், “மேடா, நான் மூடபக்தி வைராக்கியங்கொண்ட மதவெறியனாய் மாறிவிட்டேனோ? நான் என்னுடைய சிந்தையை இழந்துவிட்டேனோ? இல்லையென்றால் அந்தக் காரியங்களை சகிக்க முடியாமல் கூக்குரலிட்டுக்கொண்டிருக்கிறத் தேவனுடைய ஆவியா அது? என்னுடைய சொந்த சிந்தனைக்கும், என்னுடைய சொந்த விருப்பத்திற்கும், எதிராக என்னைத் தூண்டிவிடுகிற ஏதோ ஒரு காரியமா அது?” என்று கேட்டேன். அப்பொழுது நான், “அது இந்த மூன்று காரியங்களில் ஒன்றாய் மாத்திரமே இருக்க முடியும். அது என்னுடைய சிந்தையை நான் இழந்துவிட்ட ஒன்றாகத்தான் இருக்க முடியும்……” என்றேன். நான் அவ்வாறு இழந்துவிட்டேனோ என்று எனக்குத் தெரியவில்லை. நான் நரம்புத்தளர்வுற்று, நிலைகுலைந்த நபராய் இருக்கிறேன். அது என்னுடைய சுபாவமாயிருக்கிறது. நான் ஓர் ஊழியக்காரனாயிருக்கிறபடியால் என்னுடைய வரம் அவ்வாறு செய்கிறது. ஆனால் நான்—நான்…“நான் என்னுடைய சிந்தையை இழந்திருக்க வேண்டும், அல்லது நான் ஒரு மூடமதாபிமானியாயிருக்க வேண்டும் அல்லது அது தேவனுடைய ஆவியாய் இருக்க வேண்டும்.” அது அந்தக் காரியங்களில் ஒன்றாயிருக்க வேண்டும்.
45 ஆனால் என்னால் அந்தக் காரியங்களைக் கண்டு சகிக்கமுடியவில்லை, எனக்குள்ளாக இருக்கிற ஏதோ ஒன்று சத்தமிடுகிறது. அதே சமயத்தில் அது வேதத்தின்படியாய் உள்ளது என்பதை நான் அறிவேன். எனவே அது சம்பவித்தாக வேண்டும். அப்படியானால் அவ்வாறு சத்தமிடச் செய்வதனால் என்ன பயன்? தேவன் நியாயத்தீர்ப்பைக் கொண்டுவரும்படி அதற்கு விரோதமாக ஒரு சத்தத்தைக் கூக்குரலிடச் செய்யாமலிருந்தால், எப்படி அவர் நியாயத்தீர்ப்பில் நின்று இங்குள்ள இந்தச் சந்ததியின்மேல் பழியைச் சுமத்தப்போகிறார்? யோவான் வனாந்திரத்திலிருந்து சத்தமிடாதிருந்திருந்தால், பரிசேயர் என்னவாயிருந்திருப்பார்கள்? நான், “அவர்கள் இதைச் செய்யக் கூடாது, இதைச் செய்ய வேண்டாம், இதை செய்யக்கூடாது, நீங்கள் இதைச் செய்யக் கூடாது என்று கூறும்போது, அது என்ன நன்மையைச் செய்யப்போகிறது? நீங்கள் ஆவியினால் நிரப்பப்பட்டிருக்க வேண்டுமல்லவா?”
அவர்கள் நடந்து சென்று, “அவனுக்கு மூளைக்கோளாறு, பைத்தியம். ஏதோ ஒன்று அவனுக்கு சம்பவித்துவிட்டது!” என்பார்கள்.
அப்படியானால் அதைச் செய்வதனால் என்ன பயன்? ஏனென்றால் தேவன் ஒரு சத்தத்தை உடையவராயிருக்க வேண்டியதாயுள்ளது. எப்படியாவது அதை அவர் கூறியேத் தீர வேண்டும். அப்பொழுதே அவர், “அது அங்கே இருந்தது. நீங்களோ அதைக் குறித்து ஒன்றுமே அறியாமலிருந்தீர்கள்” என்று கூறி நியாயத்தீர்ப்பைக் கொண்டுவர முடியும். அது உண்மை. நீங்கள் அதற்கு எதிராகக் கூக்குரலிடாமலிருந்தால், அவர் என்ன செய்யப் போகிறார்? உங்களுக்குள்ளிருந்து ஏதோ ஒன்று கூக்குரலிடுகிறதாயுள்ளது. உங்களால் அதைத் தடுக்க முடியாது.
46 இப்பொழுது, நாம் இங்கு விளக்கிக் கூறும்படி வைத்துள்ள அடுத்த பொருள் என்னவெனில், நாம் ஒரு ஸ்தாபன பாகுபாடற்றவர்களாயிருக்கிறோம் என்ற காரணத்தை நாம் கண்டறிகிறோம். மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், பெந்தேகோஸ்தே இன்னும் வேறென்னவாயினும் அதில் மீண்டும் பிறந்த கிறிஸ்தர்கள், பரிசுத்தமாக்கப்பட்ட ஜனங்கள் உண்டு என்றே நாம் விசுவாசிக்கிறோம். நாம் கடந்த இரவு பேசினதன் மூலம் தேவனுடைய சபை என்ற வித்து இந்த ஸ்தாபன பிரிவுகளினூடாகக் கலந்துள்ளது என்று நாம் நம்புகிறோம். எனவே நாம் முன்குறித்தல் என்பதை மேலும் சற்று ஆராய்ந்துப் பார்ப்போம். தேவன் எந்தக் காரியம் எப்படி இருக்க வேண்டும் என்று முன்குறிக்காமல், அவர் எல்லாக் காரியங்களையும் அறிந்திருக்கிறபடியால், அவரால் முன்னறிதலின் மூலமாக முன்குறிக்க முடியும்.
47 இன்றிரவைப் போன்று, கடந்த இரவு யாருமே இரட்சிக்கப்படவில்லையென்றும், அவர்களுடையப் பெயர்கள் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தன என்றும் நாம் கண்டறிந்தோம். உங்களுடையப் பெயர் உலகத்தோற்றத்துக்கு முன்பே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் இல்லையென்றால் அது ஒருபோதும் அங்கிருக்காது அல்லது இனிமேலும் ஒரு போதும் இராது; உலகத்தோற்றத்திற்கு முன்பே தேவன் ஆட்டுக்குட்டியானவரை அடித்தபோது, நீங்களும் உங்களுடைய ஆட்டுக்குட்டியோடே அடிக்கப்பட்டீர்கள். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இன்னும் ஒரு நிமிடத்தில் அதைக் கண்டறிவோம்.
48 நாம் வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்திற்குத் திருப்புவோம். வெளிப்படுத்தின விசேஷம் 17-ம் இல்லை…வெளிப்படுத்தின விசேஷம் 13;8-ல், அதாவது ஆட்டுக்குட்டியானவர் அடிக்கப்பட்டார் என்பதைக் குறித்து வேதம் என்னக் கூறுகிறது என்பதை நாம் இங்கே கண்டறிவோம். ஆட்டுக்குட்டியானவர் கி.பி. 33-ல் இல்லை கி.பி.33-ல் அடிக்கப்பட்டாரா அல்லது…எப்பொழுது அவர் அடிக்கப்பட்டார் என்பதைப் பார்ப்போம். சரி. இப்பொழுது இது உண்மையாகவே இங்கே அமெரிக்க ஐக்கிய நாடுகளைக் குறித்தத் தீர்க்கதரிசனமாயுள்ளது. நாம் இப்பொழுது இதை வாசிப்போம்.
உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் (என்ன? அந்த மிருகத்தை) யாவரும் அதை வணங்குவார்கள்.
49 எப்பொழுது ஆட்டுக்குட்டியானவர் அடிக்கப்பட்டார்? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பா? ஒருவேளை கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருக்கலாம். உலகத்தின் அஸ்திபாரம் உருவாக்கப்படுவதற்கு முன்பே இயேசு கிறிஸ்து நம்முடையப் பாவங்களுக்காக மரித்தார். ஓ, ஆனால் இப்பொழுது நான் பக்திப்பரவசமடைகிறேன். உலகம் என்ற ஒன்று உண்டாவற்கு முன்பே இயேசு அதை இரட்சிக்க மரித்தார்.
50 அப்படியானால் நீங்களோ, “முடிவற்ற தேவன் ஏன் பாவத்தை அனுமதித்தார்?” என்று கேட்கலாம்.
தேவனுக்குள்ளாகத் தன்மைகள் இருந்தன என்பதை நீங்கள் அறிவீர்கள். தேவன் சாத்தானை ஒருபோதும் அனுமதிக்காமலேயிருந்தால்…அவர் அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியைச் சிருஷ்டித்தபோதே, அவன் இந்த உலகத்தை கெடுத்துப்போட வேண்டிய ஒருவனாய் இருந்தான் என்பதை அவர் அறிந்திருந்தார். ஓ, நம்முடைய தேவன் சிறிதான ஏதோ ஒன்றாய் ஒரு மூலையில் தள்ளிவைக்கப்பட்டிருக்கவில்லை, ஆனால் அவரோ ஒருபோதும் துவக்கம் என்ற ஒன்றோ அல்லது ஒரு முடிவு என்ற ஒன்றோ இல்லாத முடிவுற்ற தேவனாயிருக்கிறார். அவருக்குள், அவர் தம்முடைய தன்மைகளைக் கொண்டிருந்தார். அவர் ஓர் இரட்சகராய் இருக்கிறார். இரட்சிப்பதற்கென்று எந்த ஓர்காரியமும் இல்லாதிருந்தால், அவர் எப்படி ஓர் இரட்சகராக அறியப்பட்டிருக்க முடிந்திருக்கும்? நாம் எப்படி…அறிந்திருப்போம்…
51 எது முதலில் இருந்தது? நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். முதலில் இருந்தது இரட்சகரா அல்லது ஒரு பாவியா, யார்? அப்படியானால் இரட்சகர்தான் முதலில் இருந்தாரென்றால், பாவியைக் காட்டிலும் இரட்சகரே உயர்ந்தவராயிருக்கிறார். எப்படிப் பாவி இருந்திருக்க முடியும்? ஆனால் ஓர் பாவியே இல்லாமலிருந்தால், அவர் ஒருபோதும் ஓர் இரட்சகராக அறிந்துகொள்ளப்பட்டிருந்திருக்கவேமாட்டார். எது மிகுந்த வல்லமையுள்ளது, ஒரு சுகமளிப்பவரா அல்லது ஒரு சுகவீனமான மனிதனா? சுகமளிப்பவரே சுகவீனத்தை எடுத்து, அதை அழித்துப்போடுகிறார். முதலில் இருந்தது தேவனோ அல்லது புற்றுநோயா? ஏன்? முதலில் இருந்தவர் தேவனே. அப்படியானால் அவர் வியாதியை ஏன் அனுமதித்தார்? ஏனென்றால் அவரால் அதை இப்பொழுது அழிக்க முடியுமென்றால், அவர் அது உண்டாகமலேயே இருக்கும்படிக்கு செய்திருக்க முடியும்? அவர் முடிவுற்றவராய் இருப்பாரெனில், அது நிகழும் என்பதை அவர் அறிந்திருப்பார். ஆனால் அப்படி அது தோன்ற அவர் அனுமதிக்காதிருந்திருந்தால், வியாதி என்ற ஒன்றே இல்லாமலிருந்தால், அவர் ஒரு சுகமளிப்பவராகவே ஒருபோதும் அறியப்பட்டிருந்திருக்கமாட்டார். ஆனால் அவர் ஒரு சுகமளிப்பவராயிருக்கின்றபடியால், வியாதி என்ற ஒன்று இருக்க வேண்டியதாயிருந்தது. நான் என்ன கூறுகிறேன் என்பதை நீங்கள் புரிந்துகொண்டீர்களா? இப்பொழுது, அவர் எல்லாக் காரியங்களையும் அறிந்திருந்தார்.
52 இப்பொழுது வெளிப்படுத்தல் 13;8-ல் உள்ள வசனத்தைக் கவனியுங்கள். “ஆட்டுக்குட்டியானவர் அடிக்கப்பட்டார்” (எப்பொழுது?) “உலகத்தோற்றத்துக்கு முன்னே”. தேவன் தம்முடைய முடிவற்ற சிந்தனையினூடாகக் காலத்தின் கண்ணோட்டத்தைக் கண்டார். எனவே அவர் என்ன சம்பவிக்கும் என்றும், எப்படி அவர் சிருஷ்டித்து காலத்தின் இடைவெளிக்குள் அதை விழச் செய்து, பின்னர் எப்படி அதை இழுக்க வேண்டும் என்பதை உண்மையாய் அறிந்திருந்தார்.
53 வாலிபராகிய நீங்கள் ஏன்…மனைவியையுடைய வாலிபப் புருஷரே ஒரு ஸ்திரீயை சோதித்துப் பாருங்கள், அப்பொழுது அவள் எதினால் உண்டானவள் என்பதை நீங்கள் காண்பீர்கள். அது உண்மை. ஒரு மனிதனை சோதித்துப் பாருங்கள், அதாவது அவன் ஒரு மதுபானப் பிரியனாயிருந்திருந்தால், ஒரு மதுபானப்புட்டியை அவனுடைய வாய்க்குக் கீழே குலுக்கிப் பாருங்கள். அப்பொழுது அதிலிருந்து அவன் இரட்சிக்கப்பட்டிருக்கிறானா அல்லது இல்லையா என்பதை நான் உங்களுக்கு சொல்லிவிடுவேன். அவன் ஒரு போக்கிரியாயிருந்தால், சுற்றித் திரிந்து, ஓர் அசுத்தமான வேட்டை நாயைப்போல மற்ற புருஷருடைய வீடுகளை கலைப்பவனாயிருந்தால், அலங்கோலமான ஆடைகளை அணிந்த ஒரு பெண்ணை அவன் முன் நிறுத்தினால், அப்பொழுது அவன் எதினால் உண்டானவன் என்பதை அது தெரிவித்துவிடும். அது உண்மை. நிச்சயமாக.
54 தேவன் தம்முடைய வல்லமையை காண்பிக்க, அவர் யார் என்பதை காண்பிக்க, அவர் ஓர் இரட்சகர் என்பதைக் காண்பிக்கவே அவர் ஒரு பாவியை இங்கு இருக்கும்படி அனுமதித்தார்.
55 நான் கூறியிருப்பது போல, மீட்பு என்பதன் பொருள் என்ன என்றே தூதர்கள் அறியாமலிருக்கும்போது, அவர்கள் எப்படி மீட்பின் சம்பவங்களைப் பாடுவார்கள்? ஆனால் நம்மால் அதைப் பாட முடியும். இழக்கப்படுதல் என்பதன் பொருள் என்ன என்பதையும், மீண்டும் கண்டுபிடிக்கப்படுதல் என்பதன் பொருள் என்ன என்பதையும் நாம் அறிவோம். நீங்கள் ஒருபோதும் இழக்கப்படாமலிருந்தால், அப்பொழுது மீண்டும் கண்டுபிடிக்கப்படுதல் என்பதன் பொருள் என்ன என்பதையே நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள். இழக்கப்பட்டவர்கள் அதன் பொருள் என்ன என்பதை அறிந்திருக்கிறார்கள். சுகவீனமாயிருந்தவர்களுக்கு, ஆரோக்கியமான சுகம் திரும்ப வரும்போது, அதை எப்படி அனுபவித்து மகிழ வேண்டும் என்பதை அறிந்திருப்பார். வீதியில் நடந்துகொண்டிருந்த ஒரு இழிவான நபருக்கு, ஒருபோதும் ஒரு சிநேகிதனே இல்லாமலிருந்தவனுக்கு, தன்மீது கரங்களைப்போட யாருமேயில்லாதவனுக்கு, அவனைப் பார்த்துப் பேச ஒருபோதும் யாருமே இல்லாமலிருந்தவனுக்கு, கலந்தாலோசிக்க யாருமே இல்லாமலிருந்தவனுக்குத் தன்மீது கரத்தைப் போட்டுப் பேசும் ஒரு உண்மையான நண்பன் எதைப் பொருட்படுத்துகிறது என்பதை அந்த நபர் அறிந்திருப்பான். நிச்சயமாக நீங்கள் அதனை அறிந்துகொள்ள வேண்டும்.
56 இரவு என்ற ஒன்றே இல்லாமலிருந்தால், நாம் இந்த சூரிய வெளிச்சத்தைப் பாராட்ட வேண்டும் என்பதை எப்படி நாம் அறிந்திருப்போம்? மந்தார மேகமூட்டமான ஒரு நாளே இல்லாமலிருந்தால், நீங்கள் எப்படி அழகான, பிரகாசமான ஒரு நாளை மெச்சிக்கொள்ள முடியும்? குளிர்காலம் என்ற ஒன்றே இல்லாமலிருந்தால், எப்படி உங்களால் கோடைக்கால சூரிய வெளிச்சத்தின் கதகதப்பை மெச்சிக்கொள்ள முடியும்? எனவே நியாயப்பிரமாணமும் இருபக்கங்களைக் கொண்டது. நான் பிரசங்கிக்க வேண்டிய பொருளிலிருந்து விலகிச் சென்று கொண்டிருக்கிறேன். நான் அவ்வாறு செய்ய வேண்டும் என்று கருதி செய்யவில்லை. சரி.
57 இப்பொழுது நாம் எடுத்துக் காண்பிக்கும்படியாக வெளிப்படுத்தின விசேஷம் 17:8-ஐ ஒரு நிமிடம் எடுத்துக்கொள்வோம். எப்பொழுது ஆட்டுக்குட்டியானவர் அடிக்கப்பட்டார்? “உலகத்தோற்றத்துக்கு முன்னே.” சரி. வெளிப்படுத்தின விசேஷம் 17:8
நீ கண்ட மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறிவந்து, நாசமடையப் போகிறது. உலகத்தோற்றமுதல் ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள், (எப்பொழுது) இருந்ததும், இராமற்போனதும், இனி இருப்பதுமாயிருக்கிற மிருகத்தைப் பார்த்து ஆச்சாரியப்படுவார்கள்.
58 எப்பொழுது உங்களுடைய பெயர் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டது? கடந்த இரவு ஒரு மனிதன் எழுதினப் பாடலை நான் கூறினதுபோல, அதாவது, “மகிமையில் ஒரு புதிய நாமம் எழுதப்பட்டிருக்கிறது, அது என்னுடையது, அது என்னுடையது” என்று கூறுவது அவருக்கு சரியானப் பொருளாயிருந்தாலும், வேதப்பிரகாரமாக அவர் எழுதியது தவறாகும். நீங்கள் கிறிஸ்துவண்டை வந்த இரவு உங்கள் பெயர் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்படவில்லை.
இயேசு, “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்; என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். என்னிடத்தில் வருகிற யாவருக்கும், நான் அவர்களுக்கு நித்திய ஜீவனை அளித்து, கடைசி நாளில் அவனை எழுப்புவேன். அவர்களில் ஒருவரும் இழக்கப்பட்டுப்போவதில்லை. நான் ஒருவரையும் இழந்துபோவதில்லை, ஏனென்றால் அவர்களை எனக்கு அளித்த என் பிதாவின் கரத்திலிருந்து அவர்களை ஒருவனும் பறித்துக்கொள்ள முடியாது”. ஓ, என்னே! வ்யூ! பரிசுத்த யோவான் 5:24-ல், “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்” என்று கூறப்பட்டுள்ளது. அந்தக் காரணத்தினால்தான் இந்தச் சபையானது பரிசுத்தவான்களின் விடாமுயற்சியின் பாதுகாப்பில் நம்பிக்கைக் கொண்டுள்ளதேயன்றி, பாப்டிஸ்டு முறைமையிலோ, பிரஸ்பிடேரியன் முறைமையிலோ நம்பிக்கைக் கொண்டிராமல் வேதாகம முறைமையில் நம்பிக்கை வைத்துள்ளது.
59 அப்படியானால் நீங்களோ, “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, ஒருமுறை கிருபை என்றால் எப்பொழுதுமே கிருபைதான் என்று நான் யூகிக்கிறேன்” என்று கூறலாம். அது அதிக அவமானத்தையேக் கொண்டு வருகிறது. ஒரு மனிதனோ அல்லது ஒரு ஸ்திரீயோ தேவனுடைய ஆவியினால் பிறந்திருக்கும்போது, பழையக் காரியங்கள் கடந்துபோய், எல்லாக் காரியங்களுமே புதியதாயிருக்கின்றன. அவன் பிறப்பிக்கப்பட்டு, நித்திய தேவனால் ஆசீர்வதிக்கப்படிருக்கிறான். தேவன் அழிந்துபோக முடியாதுபோல அவர்களும் ஒருபோதும் அழிந்துபோக முடியாது.
60 முடிவற்ற தேவன் உங்களை இழந்துவிடப்போவதை அறிந்து, அவர் இறங்கி வந்து உங்களுக்கு நித்திய ஜீவனை அளிப்பார் என்று நீங்கள் பொருட்படுத்திக் கூறுகிறீர்களா? அவர் உங்களை அங்கே இழந்துபோவதை அறிந்து உங்களை இங்கே இரட்சிக்கிறாரா? அவர் எதற்காக உங்களை இரட்சித்தார்? ஏன்? அவர் தனக்கு எதிராகவே கிரியை செய்துகொண்டிருக்கிறார் என்பதாய் உள்ளதே. எனவே அவர் உங்களை ஒருமுறை இரட்சித்துவிட்டால், நீங்கள் முழுமையாகவே நித்தியமாய் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள், ஆகையால் பாதாளத்தில் உள்ள எல்லாப் பிசாசுகளுமே உங்களை நிலைகுலையச் செய்ய முடியாது.
61 இப்பொழுது துவக்கத்திலிருந்து முடிவுரை எல்லாவற்றையுமே சொல்ல முடிந்த முடிவற்ற தேவன் நீங்கள் அடுத்த வருடம் பின்மாற்றமடையப் போகிறீர்கள் என்பதை அறிந்து, இந்த வாரம் இங்கே உங்களை இரட்சித்து, பின்னர் இழந்துவிடுவாரா? அப்படியானால் என்னத்திற்காக அதைப்போன்ற ஒரு பணியை அவர் செய்துகொண்டிருக்கிறார்? அது முட்டாள்தனமாயிருக்குமே, நானே அவ்விதம் செய்யமாட்டேன். நான் இன்றைக்கு உங்களை என்னுடைய சிநேகிதனாக்கிக் கொள்வதற்கு முன்னமே, நாளை நீங்கள் எனக்கு சத்துருவாகப்போவதை அறிந்திருந்தால், நான் உங்களை சிநேகிக்கவே மாட்டேன். நான் உங்களை சிநேகியாமல் அப்படியே விட்டுவிட்டிருப்பேன். புரிகிறதா? நீங்கள் இங்கே பூமியில் தோன்றுவதற்கு முன்னமே தேவன் உங்களை அறிந்திருந்த காரணத்தால், அவர் உங்களை இன்றைக்கு அவருடைய ஊழியக்காரனாக்குகிறார். உங்களுடைய சரீரத்திற்குள்ளாக இருக்கிற கால்சியத்தை அவர் உருவாக்கிக்கொண்டிருந்தபோது, உங்களுக்குள்ளாக…இருக்கிற இயலுக ஒளியை அவர் சிருஷ்டித்தபோது, பெட்ரோலியம் மற்றுமுள்ள மூலப்பொருட்களால் நீங்கள் உண்டாக்கப்படும்போது, அவர் பூமியின் மேல் அதை சிருஷ்டித்தபோது, உங்களுடைய ஒவ்வொரு தசை நாரையும், நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதையும் அறிந்திருந்தார். இல்லையென்றால் அவர் எப்படி முடிவற்ற தேவனாயிருக்கிற முடியும்…
62 நீங்கள், “நல்லது, நான் இன்றைக்கு ஜாக்கிரதையாய் நடந்துகொள்வது மேலானது; நான் ஒருக்கால் நாளைப் பின்மாற்றமடைந்து இழக்கப்படலாம்.” என்று கூறினால் அப்பொழுது நீ ஆரம்பத்திலேயே இரட்சிக்கப்படவில்லை. நீ உணர்ச்சிவசப்படுதலின் பேரில் கிரியை செய்திருக்கலாம். நீ இரட்சிக்கப்பட்டிருக்கிறாய் என்று எண்ணியிருக்கலாம். நீ இரட்சிக்கப்பட்டிருக்கிறாய் என்பதுபோல் உணர்ந்திருக்கலாம். நீ இரட்சிக்கப்பட்டிருக்கிறாய் என்று நம்பியிருக்கலாம். நீ ஒரு சபையில் சேர்ந்திருக்கலாம். நீ ஒரு நல்ல பாப்டிஸ்டாய், மெத்தோடிஸ்டாய் அல்லது பெந்தேகோஸ்தேக்காரனாய் இருக்கலாம்.அதற்கு இதனோடு எவ்வித சம்மந்தமும் கிடையாது. உங்களுடையப் பெயர்…நீங்கள் எப்போதாவது இரட்சிக்கப்பட்டிருந்தால், உலகத்தோற்றத்திற்கு முன்பே, தேவன் அவருடைய சிந்தையில் இரட்சிக்கப்படக்கூடியவர்களைக் கண்டு, அவர்களை இரட்சிக்கும்படி இயேசுவை அனுப்பினபோதே நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள். இப்பொழுது ஒருவரும் கெட்டுப்போகக்கூடாது என்பதே அவருடைய சித்தமாயுள்ளது. அப்படி கெட்டுப்போக வேண்டுமென்று அவர் சித்தங்கொண்டிருக்கவில்லை, ஆனால் அவர் தேவனாயிருப்பதால், யார் இரட்சிக்கப்படுவார்கள் என்றும், யார் இரட்சிக்கப்படமாட்டார்கள் என்பதையும் அறிந்திருந்தார். வேதம் அவ்வண்ணமாகவே கூறுகிறது. ஆகையால் அங்குதான் உங்கள் காரியமே உள்ளது.
63 அந்தக் காரணத்தினால்தான் நாம் பாப்டிஸ்டு, மெத்தோடிஸ்டுகள், கால்வீனியர்களாகவே நினைத்து அவ்வாறு கூறிக்கொள்ளும் ஜனங்களோடும் வேறுபடுகிறோம். ஆனால் கால்வீனிய கொள்கை சரியாயிருக்கலாம்.
64 பின்னர் நாம் அர்மீனிய கொள்கையைக் குறித்துப் பார்க்கப் போகிறோம். அவர்கள் எதைப் பெற்றுக்கொண்டனர்? கிரியைகள், அது பரிசுத்தம் என்ற ஸ்தாபன குழுவினர். கிரியைகள், அதாவது, “தேவனுக்கு ஸ்தோத்திரம், நான் என்னுடைய தலைமுடியை நீளமாக வளர விடட்டும்” என்று பெண்கள் கூறுதல். அதேவிதமாக ஆண்கள், “ஓ, தேவனுக்கு ஸ்தோத்திரம், நான் குட்டையான அரைக்கைச் சட்டையைக்கூட அணியமாட்டேன்” என்று கூறுவது போன்றேயாகும். அதற்கு தேவனுடைய இராஜ்ஜியத்தோடு எந்த சம்மந்தமுமில்லை. இல்லை ஐயா. உங்களால் உங்களுடையத் தலைமுடியை நீளமாக வளரவிட முடியும். நீங்கள் விரும்புகிற ஆடையை உங்களால் உடுத்திக்கொள்ள முடியும். அல்லது உங்களால் இதைச் செய்ய முடியும், அதை அல்லது மற்றதைச் செய்ய முடியும். ஆனால் அதற்கும் தேவனுடைய இராஜ்ஜியத்திற்கும் எவ்வித சம்பந்தமுமிராது. உங்களுடைய உடைகளினிமித்தமாக நீங்கள் இரட்சிக்கப்படவில்லை. அப்படியிருந்தால், தேவன் அப்படிப்பட்ட சில மாதிரிகளை வைத்திருப்பார். எனவே இயேசுவானவர் மரித்திருந்திருக்க வேண்டியதாயிருக்காது.
கிருபையினால் தேவன் உங்களை இரட்சித்த காரணத்தால் நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள். எனவே நீங்கள் இந்தக் காரியங்களை உண்மையாயுணர்ந்து செய்கிறீர்கள். பொது நாகரீக நுண்ணறிவே அதை உங்களுக்கு கூறும். நீங்கள் உண்மையுணர்ந்தே இந்தக் காரியங்களைச் செய்கிறீர்கள். கிரியைகள் என்பது நான் தேவனுக்காக என்ன செய்கிறேன் என்பதேயாகும்.
65 நான் மற்றொரு பிரசங்கத்தை ஒருபோதும் நிகழ்த்தாமற்போனாலும், இன்னும் நூற்றைம்பது ஆண்டுகள் உயிர்வாழ்ந்தாலும், நான் அப்படியே அப்பொழுதும் இரட்சிக்கப்பட்டவனாகவேயிருக்கிறேன். நிச்சயமாகவே நான் ஒரு பிரசங்கியாயிருக்கின்ற காரணத்தால் இரட்சிக்கப்பட்டிருக்கவில்லை. தேவனுடையக் கிருபை என்னை இரட்சித்தக் காரணத்தால் நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன். அதற்குத் தகுதியாக என்னால் செய்ய முடிந்த காரியம் ஒன்றுமே இல்லை.
66 இப்பொழுது ஐந்து இலட்சம் டாலர்கள் வரி செலுத்தும்படியாக ஒரு வழக்கு எனக்கு தொடரப்பட்டுள்ளது. அவர்கள், “ஏன்? நீர் சென்ற………உம்முடைய செலவிற்கு பணம் செலுத்த நீர் அந்தப் பணத்தை அங்கிருந்து எடுத்துள்ளீர். உம்முடைய செலவிற்குப் பணத்தைச் செலுத்தும் முன்னர் அது உம்முடையதாயிருந்தது. நீர் அதை உம்முடைய சபையின் மூலமாக கொடுத்துவிட்டீர். ஆனாலும் அந்தப் பணம் முதலில் உம்முடையதாயிருந்தது” என்றனர்.
அப்பொழுது நான், “நான் அந்த பணத்திற்காக ஒர் காரியத்தையும் ஒருபோதும் செய்யவேயில்லையே” என்றேன்.
அதற்கு அவர்கள், “ஆம், நீர் செய்தீர்” என்றும், “நீர் அன்பின் காணிக்கையை எடுப்பீர் என்று நீரே அவர்களிடத்தில் கூறியிருக்கிறீர்” என்றும் கூறினர்.
அப்பொழுது நான், “எப்பொழுதும் நான் அவ்வாறு எடுத்தேன் என்பதை யாராவது ஒருவர் என்னிடம் கூற வேண்டும்” என்றேன்.
அதற்கு அவர்கள், “நீர் தபாலின் மூலம் அதை வற்புறுத்திப் பெற்றுக்கொண்டீரா?” என்று கேட்டனர்.
அதற்கும் நான், “என்னுடைய அலுவலகத்தை ஆய்வு செய்து பாருங்கள்; ஒரு பைசா கூட இருக்காதே” என்றேன்.
67 வேதம், “என்னத்தைப் பேசுவோம் என்று கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேசவேண்டுவது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்” என்று கூறியுள்ளதை நீங்கள் அறிவீர்கள். அங்கே அருகில் அமர்ந்திருந்த வழக்கறிஞர்கள் குழுவிலிருந்த ஒவ்வொருவரும் எனக்கு எதிராக ஒன்றன்பின் ஒன்றாக இதையும் அதையும் கூறிக்கொண்டிருக்க, எனக்கு ஒன்றுமே புரியாமல் இருந்தது. அந்தப் புத்தி சாதுர்யவான்களோ நீங்கள் கூற வேண்டும் என்று கருதி கூறாத காரியத்தையும் உங்களையே கூறும்படி செய்ய பயிற்றுவிக்கப்பட்டவர்கள். அப்படியானால் அப்படிப்பட்டவர்களோடு நீங்கள் எப்படி அவர்களுடைய அறிவுத்திறனுக்கு இணையாக முடியும்? அவர்கள் அப்படிப்பட்டவர்களாயிருந்தபோதிலும் என் ஆண்டவருடைய அறிவுத்திறனோடு அந்த வழக்கறிஞர் ஒருபோதும் இணையாகவே இயலாது. இந்த வேதம், “நீங்கள் ராஜாக்களுக்கும், அதிபதிகளுக்கும் முன்பாக கொண்டு செல்லப்படும்போது என்னத்தைப் பேசுவோம் என்று கவலைப்படாதிருங்கள்” என்று உரைத்துள்ளது.
நான் அங்கிருந்து எடுத்திருந்தப் பணத்தை அறிவேன், ஆனால் நான் அதை…செலவு செய்திருந்தேன்…அவர்கள் அதற்கு வாதம் செய்யவில்லை. அந்தப் பணம் சட்டப்பூர்வமாக செலவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர்களோ, “அந்தப் பணம் முதலில் உம்முடையதாயிருந்தது. அதன்பின்னரே நீர் அதை பிரான்ஹாம் கூடாரத்திற்கு மாற்றினீர்” என்றனர்.
அதற்கு நான், “ஆனால் நான் பிரான்ஹாம் கூடாரத்தின் பொருளாளராயிருக்கிறேனே” என்றேன். மேலும் இந்த…
அதற்கு நான், “அதைக் குறித்து எனக்கு ஒன்றுமேத் தெரியாது. அப்படியானால் ஏன் அந்த தர்மகர்த்தாக்கள் இதை, அதை, அந்த மற்றதைச் செய்யவில்லை?” என்றே அவர் கேட்டார். ஒன்று…
அப்பொழுது நான், “அப்படியானால் நீங்கள் என்னை நேர்மையற்றவன் என்று அழைக்கிறீர்களா?” என்று கேட்டேன்.
68 அதற்கு அவரோ, “நீர் மிகவும் நேர்மையாவனர் என்றே நாங்கள் கருதுகிறோம்” என்றார். மேலும் அந்த வழக்கறிஞர், “திரு.பிரான்ஹாம் அவர்களே, நான் உங்களுக்கு ஒரு காரியத்தைக் காண்பிக்க வேண்டும்” என்றார்.
நான் அதை இப்பொழுது தேவனுடைய மகிமைக்காக மாத்திரமே கூறிக்கொண்டிருக்கிறேன். முக்கியமாக வாலிபர்களுக்காகவும் இதைக் கூறுகிறேன். அவர், “நான் உங்களுக்குக் ஒரு காரியத்தைக் காண்பிக்க விரும்புகிறேன்…எப்படி உங்களுக்கு காண்பிப்பதென்றால்…” என்று கூறினார். நீங்கள் வேதாகமத்தின் மூலம் ஜீவித்தால், தேவன் உங்கள் மூலமாக ஜீவிப்பார். உங்களுடைய ஆவியானது தேவன் கூறுவதோடு இணங்காதிருந்தால், அப்பொழுது நீங்கள் வேதாகமத்தின் மூலம் ஜீவித்துக்கொண்டிருக்கவில்லை.
69 கடந்த இரவு நாம் பெண் பிரசங்கிமார்களைக் குறித்துப் பேசினபோது, அவர்களோ, “ஓ, பரிசுத்த ஆவியானவர் என்னை பிரசங்கிக்கும்படி அழைத்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்” என்று அந்தவிதமாகக் கூறியது நினைவிருக்கிறதா? வேதமோ, “ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், நான் உங்களுக்கு எழுதிகிறவைகள் கர்த்தருடையக் கற்பனைகளென்று அவன் ஒத்துக்கொள்ளக்கடவன். ஒருவன் அறியாதவனாயிருந்தால், அவன் அறியாதவனாயிருக்கட்டும்” என்று உரைத்துள்ளது. ஆகையால் பெண் பிரசங்கிமார்கள் உண்டு என்பதை நாங்கள் நம்புகிறோம் என்று புருஷர்கள் கூறுவதை நீங்கள் கேட்கும்போது, அவர்கள் தேவனோடு சரியாயில்லை என்பதையே அல்லது அவர்கள் சத்தியத்தையே அறிந்திருக்கவில்லை என்பதையே அது காட்டுகிறது. அது சத்தியமாயுள்ளது. வேதம் அவ்வண்ணமாகவேக் கூறுகிறது. நாம் அதை அங்கே கண்டறிந்தோம், அது வேதவாக்கியங்களினூடாக ஒத்துப்போகிறது. இப்பொழுது அது எவ்வளவுதான் உண்மையானது போன்று காணப்பட்டாலும் கவலைப்பட வேண்டியதில்லை, ஏனென்றால் அது ஒரு முரண்பாடாயுள்ளது. அது சரியல்ல.
70 இப்பொழுது நாம் இங்கு ஒரு காரியத்தைப் புரிந்துகொள்ளப்போகிறோம். கவனியுங்கள். தேவன், முடிவற்ற தேவன், வானங்களையும், பூமியையும் உண்டாக்கினவர், எல்லாக் காரியங்களையும் அறிந்தவர், உலகம் உருவாக்கப்படுவதற்கு முன்பே அதை அறிந்தவர், ஒவ்வொரு உண்ணிப் பூச்சியையும், ஒவ்வொரு ஈயையும், ஒவ்வொரு கொசுவையும், இருக்கப் போகின்ற ஒவ்வொன்றையும் அறிந்திருந்தார். நீங்கள் அவருடைய வார்த்தையின் மூலமாக ஜீவிக்க வேண்டும்.
71 அப்பொழுது அந்த வழக்குரைஞர்களுக்கு அருகில் நின்றுகொண்டிருந்தேன். இந்த வழக்கறிஞரோ நடந்து வந்து, “நாங்கள் எக்காரணத்தைக் கொண்டும் நீங்கள் நேர்மையற்றவர் என்று கூற முயற்சித்துக்கொண்டிருக்கவில்லை” என்றார். மேலும் அவர், “எவரேனும் பணத்தை உமக்கு கொடுக்கும்போது, அது முதலில் உம்முடையதாயிருக்கிறது என்ற அந்த உண்மையைக் குறித்து நீரோ அறியாமலிருந்துவிட்டீரே” என்றார். மேலும் தொடர்ந்து அவர், “கலிபோர்னியாவிலிருந்து கிறிஸ்தவ வர்த்தக புருஷருடைய முழு சுவிசேஷ ஐக்கியத்திலிருந்து ஆயிரக்கணக்கான டாலர்களுக்காக காசோலையை திரு. மைனர் ஆர்கன் பிரைட் என்பவரிடமிருந்து நீர் பெற்று கையொப்பமிட்டுள்ளீர். அன்றையத்தினமே நீர் அதை உம்முடைய வங்கியிலிருந்து எடுத்து, நான்கு இல்லை ஐந்து பயணச்சீட்டுகளைக் கடல் கடந்த பயணத்திற்காக சுமார் இருபத்தி நான்காயிரம் டாலர்களுக்கான கிரயம் செலுத்தியுள்ளீர்.”
அதற்கு நானோ, “ஆம் ஐயா” என்றேன்.
அப்பொழுது அவர், “நீர் அதன்பேரில் வருமானவரியை செலுத்த வேண்டியவராயிருக்கிறீர்” என்றார்.
அதற்கு நான், “ஏன்? நாங்கள் அதே வங்கியில் நின்றுகொண்டிருந்தபோது, அவர் அந்தக் காசோலையை எனக்கு அளித்தார். அப்பொழுது நான் அதை வங்கியில் செலுத்திவிட்டுப் பின்னர் பயணச் சீட்டுகளுக்குக் காசோலையை எழுதிக் கொடுத்தேன்” என்றேன்.
அப்பொழுது அவர், “நீர் அந்தக் காசோலையை ஒரு நிமியம் வைத்திருந்தாலும், அரை நிமிடம் மாத்திரமே வைத்திருந்தாலும் சரி, அது உம்முடையதே. நீர் அதை அரை நிமிடம் மாத்திரமே வைத்திருந்தீர். அது சபையின் சொத்தாக மாறுவதற்கு முன்னர் அந்த அரை நிமிடம் அது உம்முடைய சொத்தாயிருந்தது” என்றார். எனவே அவர், “நீர் அதன் பேரில் வருமானவரி செலுத்த கடமைப்பட்டிருக்கிறீர்” என்றார்.
மேலும் அவர், “அவர் அதை சபைக்கு அளித்தால், அவர் அதன் பேரில் வருமான வரி செலுத்தி, அவர் அதை சபைக்கு அளிக்க வேண்டும். ஆனால் அவர் இதை உங்களுக்குக் கொடுத்தார்” என்றார்.
அப்பொழுது நான், “நீங்கள் அதன் பேரில் வருமானவரி செலுத்தச் சொல்லுகிறீர்கள். அது சபைக்குப் போய் சேருகிறது. அப்படியானால் அதற்கு வரிவிலக்குள்ளதே” என்றேன்.
அதற்கு அவரோ, “நாங்கள் உங்களுடைய சபைக்கு வரிபோட்டுக் கொண்டிருக்கவில்லை. நாங்கள் உங்களுக்குத்தான் வரிபோட்டுக்கொண்டிருக்கிறோம்” என்றார்.
அதற்கு நான், அப்பொழுது, “ஏன்?” என்று கேட்டு, மேலும் நான், “தன்னுடையப் பெயரைக் கையொப்பமிட்ட அந்த அரசாங்க வருமானவரித் துறையை சார்ந்தவரே என்னிடத்தில் இதை இந்தவிதமாகச் செய்யும்படி கூறினாரே” என்றேன்.
அப்பொழுது அவர், “அவர் அரசாங்கத்தில் இப்பொழுது இல்லையே” என்றார்.
அப்பொழுது நான், “அந்த அரசாங்க அமைப்பில் அதை எழுதினவர்களே அரசாங்கத்தில் சம்மந்தப்பட்டிருக்கவில்லையென்றால், இது மாத்திரம் இன்னமும் சம்மந்தப்பட்டிருக்கிறதா?” என்று கேட்டேன். மேலும் நான், “என்றோ ஒருநாள் நீரும் அரசாங்கத்துறையில் இருக்கமாட்டீர். அப்பொழுது நீர் என்ன கூறப்போகிறீர்?” என்று கேட்டேன். நான், “அப்படியானால் நாம் எந்தவிதமான ஓர் அரசாங்கத்தைச் சேவித்துக் கொண்டிருக்கிறோம்?” என்று கேட்டேன். நிச்சயமாகவே.
ஆனால் அப்பொழுது மற்றொரு மனிதன், “திரு.பிரான்ஹாம் அவர்களே, நீர் ஒவ்வொரு பைசாவையும் எங்கு செலவு செய்திருக்கிறீர் என்பதை நாங்கள் அறிவோம் என்பதை உம்மிடத்தில் நான் கூறமுடியும், நாங்கள் இங்கே அதைக் கண்டறிந்துள்ளோம்” என்றார்.
அதற்கு நான், “சரி” என்றேன்.
அப்பொழுது அவர், “நீர் கனடாவில் உள்ள அல்பர்டா என்ற ஒரு இடத்தில் அங்கே கூட்டம் நடத்திக்கொண்டிருந்தபோது, அங்கே உமக்கு மூவாயிரம் டாலர்கள் அன்பின் காணிக்கை வழக்கப்பட்டுள்ளது” என்றார்.
அதற்கு நான், “ஆம் ஐயா” என்றேன்.
அப்பொழுது அவர், “வரப்போகின்ற…சரியாகக் கூறினால் முந்தின ஞாயிறு நீர் வெளியே சென்று, அங்கிருந்தப் பழைய சபையைக் கண்டறிந்து, அவர்கள் அந்த சபையில் மேற்கூரையே இல்லாமல் ஆராதித்துக் கொண்டிருந்ததைக் கண்டீர். எனவே நீர் அவர்களுக்கு மூவாயிரம் டாலர்களை ஒரு சபையைக் கட்டிக்கொள்ளும்படிக்கு கொடுத்தீர்” என்று கூறினார்.
அதற்கு நான், “அது உண்மை” என்றேன்.
அப்பொழுது அவர், “ஆனால் நீர் அதன்பேரில் வருமான வரியைக் கட்ட வேண்டும்” என்றார். மேலும், “நீர் அதை சபைக்குத்தான் கொடுத்தீர், ஆனால் பாருங்கள், அது சபையினுடையப் பணமாக மாறுவதற்கு முன்பு, அது உம்முடையதாயிருந்தது” என்றார்.
மீண்டும் அவர், “அது உண்மையல்லவா? அந்தக் குறிப்பிட்ட மனிதன்…” என்றார். என்னால் அவரை பெயரிட்டுக்கூற முடியாது, ஏனென்றால் உங்களில் அநேகருக்கு அவரைத் தெரியும். “இங்கே தேசத்தில் இருந்த அவருடைய வீடு எரிந்துவிட்டது. அப்பொழுது நீர் உம்முடைய கூட்டத்திலிருந்து வந்து, ஆயிரத்து ஐநூறு டாலர்களை கொடுத்திருந்தீர்.” இப்பொழுது உங்களைப் போன்ற ஒருவருக்கு அது மிக அதிகப்படியான பணமாய் தென்படலாம். ஆனால் எனக்கு பதினைந்து நாள் சாதாரணமாக ஆகும் செலவாய் அல்லது மற்ற காரியத்திற்கும் ஆகும் செலவு ஆகும். எனக்கு ஒரு நாளைக்கு நூறு டாலர்கள் செலவாகிறது. நான் பிரசங்கித்தாலும் அல்லது பிரசங்கிக்காவிட்டாலும், நான் அலுவலகத்தையும் மற்றக் காரியங்களையும் கவனிக்க வேண்டும். மேலும், “நீர் ஆயிரத்து ஐநூறு டாலர்கள் கொடுத்துள்ளீர். அந்த மனிதனுடைய வீடு…எரிந்து போய்விட்டது. அவருக்கு கிட்டத்தட்ட ஆறுபிள்ளைகள் இருந்தனர். நீர் அவருக்கு ஆயிரத்து ஐநூறு டாலர்களைக் கொடுத்துவிட்டீர்” என்றனர். நிச்சயமாகவே, அவர்கள் என்னுடையக் காசோலையை அங்கே வைத்திருந்தனர்.
அப்பொழுது நான், “அது உண்மைதான்” என்றேன். மேலும் நான், “ஐந்து பிள்ளைகளோடு ஒரு கூடாரத்தில் பூஜ்ஜிய பாகை நிலையில் கடுங்குளிரும், தரையில் பனியும் இருக்க வசிக்கும் ஒரு மனிதன் என்ன செய்வான்? ஒரு நடுத்தரமான ஏற்புடைய வீட்டில் என்னால் குடியிருக்க இயலும்போது, அந்த மனிதனோ தன் பிள்ளைகளோடுக் குளிரில் விரைத்துப்போய் சரியான ஆடையில்லாதிருப்பதை அறியும்போது, இந்தப் பணம் அவருக்கு உதவியாயிருந்திருக்க முடியும் என்று நீங்கள் எண்ணிப் பார்க்கவில்லையா?” என்று கேட்டேன்.
அதற்கு அவர், “ஒரு மனிதன் இங்கே சிறு நடைபாதையிலேயே மரித்துப் போனார் என்பது உண்மைதான் அல்லவா? அவர் கென்டக்கியிலிருந்து வந்திருந்தார். அவர் தன்னுடைய சவ அடக்கத்திற்குக் கூட பணம் வைத்திருக்கவில்லை. ஆனால் நீர் அந்த மனிதனை அடக்கம் செய்தீர். பின்னர் நீரும், உமது மனைவியும் பணம் எடுத்துக்கொண்டு J.C. பென்னி என்ற கடைக்குச் சென்று, அந்தப் பிள்ளைகளுக்கான துணிமணிகளுக்கு இருநூறு டாலர் பணத்தை நீர் காசோலை மூலம் செலவு செய்துள்ளீர்” என்றார்.
அதற்கு நான், “அது உண்மைதான்” என்றேன்.
அவர், “இந்தக் குறிப்பிட்டப் பட்டிணத்தில்…ஒரு வயோதிக பெண்மணி இருந்தது உண்மைதானே? அவள் நியூ ஆல்பனியில் வசிக்கிறாள். அவளுடைய கடன் தொகையின் நிமித்தமாக அவர்கள் மேலும் பொருட்களை கடனாகத் தர மறுத்துவிட்டிருந்தபோது, நீர் அவளுடைய மளிகை சாமான்களுக்காக முந்நூறு டாலர்களுக்கும் சற்று கூடுதலாகவேப் பணம் கொடுத்துள்ளீர். குளிர் காலத்தில் அவர்கள் அவளை வெளியே அனுப்பிவிடப் போகிறார்கள் என்று நினைத்து, நீர் கிட்டத்தட்ட ஐந்நூறு டாலர்களை அவளுடைய வாடகைக்காக செலுத்துயிருக்கிறீர். நீர் அவளுக்கு வருகின்ற ஜீன் மாதம் வரையில் வாடகைப் பணம் செலுத்துவிட்டு, அவள் கட்ட முடியாமல் குவிந்துபோயிருந்த அவளுடைய மளிகை சாமான்களின் கட்டணத்திற்காக ஆயிரத்து நானூறு இல்லை ஆயிரத்து ஐநூறு டாலர்கள் பணத்தை மீண்டும் செலுத்தியிருக்கிறீர்” என்றார்.
அப்பொழுது நான், “அந்தக் காரியம் எனக்கு நன்கு நினைவிருக்கிறது. எண்பது வயதுடைய ஒரு வயோதிகத் தாய் தன் மகனோடு துன்பத்தை அனுபவிக்க, ஜார்ஜியாவில் பிரசங்கியாயிருக்கும் ஒரு மகன் வாதரோகத்தினால் அவதியுற்று படுத்தப் படுக்கையாய் கிடக்கிறான். எனவே அவர்களுக்கு வேறு உதவியேக் கிடையாதே. அப்படியிருக்கும்போது நீங்கள் அதைக் குறித்து என்ன செய்வீர்கள்?” என்று கேட்டேன். பின்னர் நான், “ஆம், நான் உதவி செய்தேன்தான்?” என்றேன்.
அதற்கு அவர், “இது உங்களுடையத் தர்மகர்த்தா குழுவிற்குத் தெரியுமா?” என்று கேட்டார்.
நானோ அதற்கு, “இல்லை ஐயா, அவர்களுக்குத் தெரியாது” என்றேன்.
மேலும் அவர், “உம்முடைய மனைவிக்கு இது தெரியுமா?” என்று கேட்டார்.
அதற்கு நான், “இல்லை ஐயா, அவளுக்கும் தெரியாது” என்றேன்.
அப்பொழுது அவர், “அப்படியானால் நீர் ஏன் அதைச் செய்தீர்?” என்று கேட்டார்.
72 அதற்கு நானோ, “என் கர்த்தர் கூறினக் காரணத்தால், அதாவது ‘உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது’ என்று உள்ளதே” என்றேன். மேலும் நான், “தேவனுடையப் பிரமாணங்களைப் பார்க்கிலும் மேலானப் பிரமாணத்தை நீங்கள் வைத்துள்ளீர்களா?” என்று கேட்டேன்.
அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் என்னைத் தப்புவிக்க வந்து, அவ்வளவு அழகாக அவர் அதை அந்தவிதமாகச் செய்தார். நீங்கள் ஞாபகத்தெளிவில்லாமல் காரியங்களைக் கூறுவீர்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களைப் பேச அனுமதித்தால், நீங்கள் அறியாமலேயே பேசிக்கொண்டிருப்பீர்கள்.
மேலும், நான், “சரி, சரி, நல்லது, நான் அதற்கு வரிப்பணம் செலுத்த வேண்டும் என்று நீர் உரிமை கோரினால், என்னால் முடிந்தளவு நான் அதைக் கட்டித் தீர்த்துவிடுவேன்” என்றேன். நான், “இப்பொழுது நான் ஒரு சிறு பையன் அல்ல, எனவே நான் அதை என்னால் கட்ட முடிந்தளவு கட்டித் தீர்த்துவிடுவேன்” என்றேன். நான், “எனக்குத் தெரிந்த மட்டில், அதற்காக யாரும் கடனாக எதையும் எனக்கு செலுத்த வேண்டாம். நானே முடிந்தளவு கட்ட முயற்சிப்பேன். நான் ஏற்கனவே ஆயிரக்கணக்கான டாலர்கள் கடனை ஒரு வாரத்திற்கு நூறு டாலர்கள் என கட்டி முடித்துள்ளேன். ஆனால் தேவனுடையக் கிருபையினால் நான் அதை செலுத்திவிட்டேன்” என்றேன். மேலும் நான், “நான் அந்த ஜனங்களுக்குப் பண உதவி செய்ததற்கு நான் அப்பணத்திற்காக வரியை செலுத்த வேண்டும் என்று உரிமைக்கோரி நிரூபித்தால்…” என்றேன். அப்பொழுது கடந்த பத்து வருடங்களில் நான் அந்தவிதமாகக் கொடுத்துள்ளது கிட்டத்தட்ட இருபதாயிரம் டாலர்கள் என்று காண்பிக்க முன்வந்தனர்.
ஆனாலும் அவர், “தர்மகர்த்தாக்கள் இதைக் குறித்து ஒன்றுமே அறிந்திருக்கவில்லையே” என்றார்.
அதற்கு நான், “அவர்கள் அதை அறிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை” என்றேன். எனவே அவர் சொன்னார்…இருக்கட்டும், அப்படியானால் அவர்…கூறினால்…
73 அப்பொழுது நான், “அந்த ஏழ்மையான வயோதிக விதவைகள் மற்றும் அநாதைகளுமான அவர்கள் எல்லோருமே அதற்கான வரிப்பணத்தைச் செலுத்தியாக வேண்டும் அல்லது மரிக்க வேண்டும், ஏனென்றால் அவர்கள் அரசாங்கத்திற்குக் கடனாளியாயிருக்கிறார்கள் என்று அறியும்போது அது என்னைப் புண்படுத்துகிறது” என்று கூறினேன். ஆயினும் நான் என்ன கூறிக்கொண்டிருந்தேன் என்பதை அறியாமலிருந்தேன். அது பிதாவானவர் பேசிக்கொண்டிருந்ததாயிருந்தது. நான் அதை அறிந்திருக்கவில்லை.
அதற்கு அவரோ, “ஓ, இல்லை, அவர்கள் அதன் பேரில் வருமான வரி கட்ட வேண்டியதில்லையே” என்றார்.
அப்பொழுது நான், “அவர்கள் ஏன் அதன்பேரில் வரிப்பணம் செலுத்த வேண்டியதில்லை?” என்று கேட்டேன்.
அதற்கு அவர், “நீங்கள் பாருங்கள், அது வற்புறுத்தி வேண்டி கேட்கப்படாத வெகுமதியாயிருந்தது” என்றார்.
அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் என்னை விழிப்பூட்டினார். “ஓ,” நான், “அப்படியானால் வற்புறுத்தி வேண்டி கேட்கப்படாத ஒரு வெகுமதி வரிவிலக்கற்றதா?” என்று கேட்டேன்.
அதற்கு அவர், “அது உண்மையாகவே அப்படித்தான்” என்றார்.
அப்பொழுது நான், “அப்படியானால் நான் அரசாங்கத்திற்கு எதையுமே செலுத்த வேண்டியக் கடனாளியில்லையே, ஏனென்றால் நான் என் வாழ்க்கையில் ஒருபோதும் காணிக்கை எடுத்ததேயில்லையே” என்றேன்.
அப்பொழுது என்னுடைய வழக்குரைஞர் எழுப்பி, “திரு.பிரான்ஹாம் அவர்களே, உங்களால்…முடியுமா…” என்று கேட்டார்.
அதற்கு நான், “அவ்வாறு செய்யவில்லை என்று நிரூபிக்க வாஷிங்டனில் இருபது இலட்சம் கடிதங்களை உங்களுக்குப் பெற்றுத் தர என்னால் முடியும்” என்றேன். மேலும் நான், “நான் ஒருபோதும் காணிக்கை எடுத்ததேயில்லை” என்றேன்.
அப்பொழுது அவரோ, “ஆனால் நீர் இந்தக் கூட்டங்களுக்கு செல்லும்போது, இந்த ஊழியக்காரர்கள் மூலம் இந்தப் பணம் காணிக்கையாக எடுக்கப்பட்டு, இது செலுத்தப்படுகிறது. எனவே நீர் ஏதோ ஒரு குறிப்பிட்டத் தொகையைப் பெற்றுக்கொள்ளப்போகிறீர் என்ற ஒருவிதமான உடன்பாடு உமக்கு இதில் உண்டு” என்றார்.
அதற்கு நான், “அப்படி ஒரு காரியமுமில்லை” என்றேன்.
அப்பொழுது அவர், “அப்படியானால், இருக்கட்டும், நீர் தபாலில் கடிதம் மூலமாகவும் வற்புறுத்திக் கேட்டதில்லையா?” என்று கேட்டார்.
அதற்கு நான், “அப்படி ஒரு காரியத்தைச் செய்ததேயில்லை” என்றேன்.
அதற்கு அவர், “அப்படியானால் நீர் எப்படி உம்முடையப் பணத்தைப் பெற்றுக்கொள்கிறீர்?” என்று கேட்டார்.
74 அப்பொழுது நான், “ஜனங்கள் எனக்கு என்ன அனுப்புகிறார்களோ அதையேப் பெற்றுக்கொள்கிறேன்” என்றேன். ஜனங்கள் எனக்குத் தொடர்ந்து அனுப்புகிற தசமபாகப் பணத்தையே நான் காத்திருந்து பெற்றுக்கொள்கிறேன். நான் அதையும் அவர்களிடத்தில் ஒருபோதும் கேட்டதேயில்லை. அவர்களாகவே அதை அனுப்பி வைக்கிறார்கள். அதுதான் பரிசுத்த ஆவியானவர். அவரால் தமக்கு சொந்தமானவர்களை கவனமாய்க் கண்காணித்துக் கொள்ள முடியும்.
அவர் தொடர்ந்து, “பாருங்கள், அப்படியானால், திரு. பிரான்ஹாம்” அவர்களே, “உம்மால் அதை நிரூபித்துக் காட்ட முடியுமா? நீர் குறைந்த பட்சம் கடந்த எட்டு அல்லது பத்து வருடங்களுக்காவது எந்த வற்புறுத்தி வேண்டுதலுமில்லாமலேயே காணிகையைப் பெற்று வந்துள்ளேன் என்று கடிதங்களைப் பெற்று எனக்குத் தர முடியுமா?” என்று கேட்டார்.
அதற்கு நான் “உங்களுக்கு எத்தனை வேண்டுமானாலும் பெற்றுத் தர முடியும்” என்றேன்.
அப்பொழுது அவர், “அப்படியானால் ஒவ்வொரு வருடத்திற்கும் மூன்று கடிதங்கள் எனக்கு வேண்டும்” என்றார்.
அதற்கு நான் “சரி, நான் அவைகளை உமக்குத் தருவேன்” என்றேன்.
மேலும் அவர், “அப்படியானால் நீர் உம்முடைய தபால் பெட்டியினுடையத் திறவுகோலை என்னிடத்தில் கொடுத்துவிடும், நான்…உங்களுடையக் கடிதங்கள் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஒன்று சேர்ந்த பிறகு, நானே சென்று அதைத் திறந்து எடுத்துக்கொள்ளலாமா?” என்று கேட்டார்.
அதற்கு நான், “நீங்கள் செய்ய விரும்புகி எந்தக் காரியத்தையும் நீங்கள் செய்யலாம். நீர் என்னுடைய அலுவலகத்திற்கு கூட வரலாம்” என்றேன்.
உடனே, அவர், “நீர் எந்தவிதமான ஒரு வேண்டுகோளை விடுகிறீர்?” என்று கேட்டார்.
அதற்கு நானோ, “எந்த வேண்டுகோளையுமே விடுவிப்பதில்லை” என்று கூறினேன்.
அப்படியானால், “நீர் தபாலில் என்னதான் அனுப்புகிறீர்?” என்று கேட்டார்.
அதற்கு நான், “ஜெபத்துணிகளையே அனுப்புகிறேன்” என்றேன்.
உடனே அவர், “நீர் அதற்காக கட்டணம் வசூலிக்கிறீரா?” என்று கேட்டார்.
75 அப்பொழுது நான், “நீரே வந்து, நான் அவர்களுக்கு அனுப்பி வைக்கும் கடிதங்களை வாசித்துப் பாரும்” என்றேன். அந்தவிதமாகத்தான் அது நடந்தது. இப்பொழுது கடந்த இருபது வருடங்களாக நான் செலுத்தியுள்ள வருமான வரிக்காக அரசாங்கம்தான் எனக்கு கடன்பட்டிருக்கிறது. பார்த்தீர்களா?
“என்னத்தைப் பேசுவோம் என்று கவலைப்படாதிருங்கள். பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.” பார்த்தீர்களா? அந்தக் காரணத்தினால்தான் நாங்கள் வார்த்தையோடு தரித்திருப்பதில் விசுவாசங்கொண்டுள்ளோம். அது ஒரு நீண்ட காலமாயிருக்கலாம், ஆனால் அது வார்த்தையின்படியே சரியாகக் கிரியைச் செய்யும்.
76 இப்பொழுது அந்தக் காரணத்தினால்தான் உலகம் உருவாக்கப்படுவதற்கு முன்பு, அது இயலுலகாவதற்கு முன்பு பிதாவானவர் ஆட்டுக்குட்டியானவரை மரிக்கச் செய்தார் என்று வேதம் எங்களுக்குக் கூறுகிறதை நாங்கள் விசுவாசிக்கிறோம். ஆட்டுக்குட்டியானவர் அடிக்கப்பட்டபோதே வரப்போகும் தம்முடைய பிள்ளைகளின் பெயர்கள் ஒவ்வொன்றையும் அவர் ஜீவ புஸ்தகத்தில் எழுதினார். எனவே அவை யாவும் முடிவுறுமட்டும் நாம் அந்தந்த காலத்தில் ஜீவித்து வருகிறோம். நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்பது உங்களுக்குப் புரிகிறதா? முடிவற்ற தேவன் உலகத்தோற்றத்திற்கு முன்பே நிகழப்பட வேண்டியிருந்த திட்டத்தைக் கண்டு, அதை அறிந்திருந்தார். அவரே அதை உருவாக்கியிருந்தார்.
77 நினைவிருக்கட்டும், இப்பொழுது பிதாவானவர் மகத்தான புத்தியுள்ள சிற்பாசாரியாயிருக்கின்றபடியால், அவர் இந்த உலகத்தை உண்டாக்கியபோது, நம்முடைய சரீரங்களை உருவாக்க வேண்டிய கால்சியம், பொட்டாசியம், பெட்ரோலியம் மற்றும் இந்த எல்லாவிதமான வித்தியாசமான மூலப்பொருட்களையும் உண்டாக்கினார். நம்முடைய சரீரம் உருவாக்கப்படுவதற்கு முன்னமே அது எந்தவிதமான ஒரு சரீரமாயிருக்கப்போகிறது என்பதை அறிந்திருப்பதுமின்றி, அதனுடைய ஒவ்வொரு துணுக்குகளையும் அவர் அறிந்திருந்தார். நிச்சயமாக, அவர் அதைக் குறித்த நித்திய இலக்கை அறிந்திருந்தார். அவர் எந்தவிதமான ஆவிகள் இவைகளில் வாசம் செய்யும் என்பதை அறிந்திருந்தார்.
78 இப்பொழுது நாம் அந்தப் பொருளை பற்றிப் பேசி முடிக்கும் முன்னர், நான் இன்றிரவு “சர்ப்பத்தின் வித்து” மற்றும் “ஸ்திரீயின் வித்து” ஆகிய இரண்டையும் விளக்கிக்கூறி, அவை ஏன் இன்னும் உள்ளது என்று உங்களுக்கு காண்விக்கவுள்ளோம். எப்படி அந்த சர்ப்பத்தின் வித்து கிரியை செய்தது என்றும், எப்படி ஸ்திரீயினுடைய வித்து கிரியை செய்தது என்றும் பாருங்கள்: அதாவது எப்படியாய் சர்ப்பத்தின் வித்து மேம்பட்ட அதிகார வலிமைப் பெற்று, விஞ்சி மேம்பட்டு ஆளுகை செய்து பெரும் எண்ணிக்கையாகி, பெரும் எண்ணிக்கையாகி, பெரும் எண்ணிக்கையாகி, பெரும் எண்ணிக்கையாகி, பெரும் எண்ணிக்கையாகி, உலகத்தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்ட மிக மிக சிறுபான்மையான எண்ணிக்கையைத் தவிர வேறொன்றுமே மீதியாக விடப்படாத அளவிற்கு முழுமையாக விஞ்சி மேம்பட்டு பெருகிவிட்டது என்பதைப் பாருங்கள்.
79 ஆகையால் கிறிஸ்துவின் சரீரம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது, புஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டதாய் காணப்பட்டுள்ள கடைசி பெயர் பூமியின்மேல் அடையாளங் கண்டுகொள்ளப்படும்போது, புஸ்தகங்கள் மூடப்படுகின்றன. ஏனென்றால் வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிற மீட்பின் கதையை அது முற்றிலுமாக முடிவுறச் செய்கிறது. அதன்பின்னர் நாம் அவரைச் சந்திக்கச் செல்கிறோம், உயிர்த்தெழுதலில் அவரைச் சந்திக்கச் செல்கிறோம். “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்.”
“என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்.” வேதம் “ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்” என்று உரைத்துள்ளது.
விரும்புகிறவனாலுமல்ல. அநேக ஜனங்கள், “நான் சபையில் சேர்ந்துகொள்வேன். நான் ஒரு நல்ல நபராக இருக்கப்போகிறேன். நான் இதைச் செய்வேன்” என்று கூறுகிறார்கள். அதற்கு இதனோடு எவ்வித சம்மந்தமும் கிடையாது. அது இரங்குகிற தேவனாலேயாம்.
80 இப்பொழுது நீங்கள் பாருங்கள், தேவன் துவங்கினபோது…வானவில்லில் ஏழு வண்ணங்கள் இருப்பது போன்று தேவனுக்கு ஏழு ஆவிகள் இருக்கின்றன. நீங்கள் எப்பொழுதாவது அதைக் கவனித்துள்ளீர்களா? ஒரு மும்முனை வடிவங்கொண்ட கண்ணாடித்துண்டு ஏழு பரிபூரண நிறங்களை பிரதிபலிக்கிறது. நீங்கள் எப்பொழுதாவது அதை முயற்சி செய்து பார்த்துள்ளீர்களா? ஒரு மும்முனைகொண்ட கண்ணாடித் துண்டை எடுத்துக் வைத்துக் கொள்ளுங்கள். அதே சமயத்தில் அது மூன்று முனைகளைக் கொண்ட ஒரே கண்ணாடித்துண்டாய் இருந்தால், அப்பொழுது அது ஏழு நிறங்களை பிரதிபலிக்கும். அந்தவிதமாகவே பிதா, குமாரன், பரிசுத்த ஆவி மூன்றும் ஒன்றாயிருந்து அதே சமயத்தில் தேவனுடைய ஏழு ஆவிக்குரியத் தன்மைகளைப் பிரதிபலிக்கிறது.
81 அப்படியானால் முதலாவது தேவனுடைய மகத்தான ஆவி அன்பாயிருக்கிறது. தேவன் பெரிய வானவில்லைப் போன்று உள்ளார். அவர் எப்படி காணப்படுகிறார் என்பதை நம்மால் கற்பனை செய்துபார்க்க முடியாது. ஆனால் அவர் ஏழு நிறங்களைக் கொண்ட வானவில்லைப் போல ஏழு ஆவிகளைக் கொண்டவராய்க் காணப்படுகிறார். பரிபூரண அன்பின் ஆவி சிவப்பாய் உள்ளது. நீலம் என்பது பரிபூரண ஐக்கியத்தின் ஆவியாயுள்ளது. எனவே அவை யாவுமே பரிபூரண ஆவிகள். அதன்பின்னர் அவைகள் இறங்கிவரத் துவங்கின. அவைகள் மாம்சப்பிரகாரமான அன்பிலிருந்து இல்லை…தெய்வீக அன்பிலிருந்து மிகத் தாழ்வான இச்சையுள்ள, மிகக் கீழ்த்தரமான மாம்சப்பிரகாரமான அன்புள்ள இடத்திற்கு இறங்கி வந்தது.
அப்பொழுது தேவன்தாமே ஒரு மனிதனானார். இயேசு அதேவிதமாகப் பாதாளத்தின் தாழ்விடத்திற்கு இறங்கி வந்து, உலகத்தோற்றத்திற்கு முன்னே ஜீவபுஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டவர்களை அவர் அறிந்திருந்தபடியால் அவர்களை தூக்கியெடுத்து, தமக்குச் சொந்தமாக அவர்களை மீட்டுக்கொண்டார். அங்குதான் காரியம். நாம் அவரை காணும் வரையில், நாம் அவருடைய சாயலுக்கு ஒப்பான சாயலில் நிற்கும் வரை நம்மால் மீட்பின் கதையை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது.
82 இப்பொழுது அந்தக் காரணத்தினால்தான் நாம் ஒரு ஸ்தாபனமாயிருக்கவில்லை. அந்தக் காரணத்தினால்தான் நாம் வேறெதற்கும் ஒத்துழைக்கிறதில்லை…ஆகையால் தேவனுக்காக நம்மால் முடிந்த ஒவ்வொரு அசைவிலும் நாம் ஒத்துழைக்கிறோம். ஆனால் அந்தக் காரணத்தினால்தான் நாம் ஒரு ஸ்தாபனாமாயிருக்கவில்லை. இப்பொழுது அந்தப் போலியானக் காரியங்கள் யாவும் ஸ்தாபனத்திலிருந்தே தோன்றுகின்றன.
83 இப்பொழுது நான் வழக்கமாக கூறுவதுபோல், நான் மிகக் கடுமையாக இதை எடுத்துரைத்துக்கொண்டிருக்கிறேன். ஏனென்றால் நான் அதைப் பதியச் செய்ய விரும்புகிறேன். இப்பொழுது இங்கே தூரமாக உள்ள யாரோ ஒருவருடைய சபையில் உள்ள அந்தக் காரியங்களைக் குறித்து சிந்திக்கமாட்டேன். நாம் யாவரும் ஒப்புக்கொள்கிற மகத்தான வேதாகம மூலக் கோட்பாடுகளின் பேரில் தரித்திருக்கும் ஒரு கிறிஸ்தவ சகோதரனாக இருக்கவே விரும்புகிறேன். புரிகிறதா? ஆனால் அதே சமயத்தில் நாம் ஏமாற்ற விரும்புகிறதில்லை.
84 நான் நேற்று காலை கென்டக்கி மலையில் அணில் வேட்டையாடிக்கொண்டிருந்த இடத்தில் இருந்த ஒரு வாலிபப் பையனோடு பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது நான் அந்தக் காட்டில் ஓர் அடையாளமிடப்பட்ட ஒரு பலகை பொருத்தப்பட்ட ஒரு சிறு கம்பம் வைக்கப்பட்டிருந்ததைக் கவனிக்கவேயில்லை. எனவே நான் மற்றொரு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அப்பொழுது நான், இங்குள்ள சகோதரன் பாங்ஸ் உட் அவர்கள்தான் அந்தக் காட்டின் வழியாக இங்கே வந்துகொண்டிருக்கிறார் என்று நான் எண்ணிக்கொண்டேன். அவரும் கூட அதே எல்லைப் பகுதியில் அணில் வேட்டையாடிக்கொண்டிருந்தார். எனவே அவர் வருவதை நான் கண்டபடியால், நான் சீட்டியடித்து அவரைக் கூப்பிட்டபோது, அது அந்த வாலிபப் பையனாய் இருந்தது. அந்த வாலிபன், சகோதரன் உட் அவர்களைப் போலவே உடை உடுத்தியிருந்தபடியால் நான் அவர்தான் என்று எண்ணிக்கொண்டேன். அந்த வாலிபன் திரும்பிப் பார்த்தபோது, அது அவரல்ல என்பதை நான் கண்டேன்.
சகோதரன் உட் அவர்களோ அங்கு அடையாளமிட்ட ஒரு கம்பம் நடப்பட்டிருந்தது என்று என்னிடத்தில் கூறியிருந்தார். எனக்கோ அந்தக் காட்டில் அது தெரியவில்லை. அங்கு எந்தத் தடுப்பு வேலிகளின் வரிசையும் காணப்படவேயில்லை. எனவே அடையாளமாக இருந்த அந்த வாதுமை மரம் போன்றிருந்த அந்த மரம் எந்தப் பக்கத்தைச் சார்ந்தது என்பதை நான் எப்படி அறிந்துகொள்வேன்? ஆகையால் நான் அங்கே அணில்கள் சத்தமிடுவதைக் கேட்கும்படி உட்கார்ந்துகொண்டிருந்தேன். அப்பொழுது “சரி, இப்பொழுது இன்றிரவு நான் வீட்டிற்குச் சென்று கூட்டத்தை ஆரம்பிக்கலாம் என்பதைக் குறித்து நான் சிந்தித்துக்கொண்டே நான் மீண்டும் என்னுடையக் குதிரைக்கு சேணம் பூட்டினேன்.” அப்பொழுது மழை பெய்யத் தொடங்கி, புயலும் வீசிக்கொண்டிருந்து.
85 அப்பொழுது நான் இந்த நபரைக் கண்டு, அவரிடத்தில் பேசினேன். நான் அங்கு சென்றபோதுதான், நான் அவனுடைய வேட்டையாடும் எல்லைப் பகுதியில் இருந்தேன் என்பதைக் கண்டறிந்தேன். பார்த்தீர்களா? அப்பொழுது நான் அவனிடத்தில் பேசினேன். அவன் என்னைப் பார்த்து, “ஓ, பரவாயில்லை” என்றான். மேலும் அவன், “என்னே, நீர் விரும்புகிற எந்த இடத்திலும் வேட்டையாடுங்கள்” என்றான். அதற்கு நான், “அப்பொழுது…” என்றேன் அப்பொழுது அவன், “நீர் என்னுடைய பகுதியில் இருக்கவில்லை, நீர் அந்த வாதுமை மரத்திற்கு அப்பால் உட்கார்ந்து கொண்டிருந்தீர்.” “இந்த வாதுமை மரத்திற்கு இந்தப்பக்கமாயிருப்பதோ என்னுடைய வேட்டைப் பகுதியாய் உள்ளது. ஆனால்” என்று கூறி, “சகோதரன் பிரான்ஹாம் அது ஒரு பொருட்டல்ல. நீர் விரும்புகிற எந்த இடத்திலும் வேட்டையாடுங்கள். வீட்டிற்கு வாருங்கள், என்னுடைய அப்பா உங்களைக் காண விரும்புவார் என்று கூறினான்.” பார்த்தீர்களா? அதற்கு நான், “நல்லது…” என்றேன்.
அப்பொழுது நாங்கள் வேதாகமத்தைக் குறித்து பேசிக்கொண்டிருந்தோம். பின்னர் வேட்டையாடும் காரியத்தைக் குறித்தப் பொருளில் பேசும்போது, அவன் இதைக் கூறினான். அவன், “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, யார் இங்கு வேட்டையாடினாலும் யாரும் பெரிதாகப் பொருட்படுத்திக் கொள்வதில்லை. ஆனால் என்னுடையத் தந்தையார் ஒருநாள் இங்கே இருந்தபோது, பட்டிணத்திலிருந்து வந்த ஒரு வேட்டைக்காரர் ஏறக்குறைய அறுபது அல்லது எழுபது பவுண்டுகள் எடையுள்ள என் தந்தையினுடைய செம்மறி ஆடு ஒன்றை கொன்றுவிட்டார். அப்பொழுது தந்தை அந்த நபரைப் பார்த்து சத்தமிட்டார். அந்த நபர் தன்னுடையத் துப்பாக்கியினால் அதைச் சுட்டுவிட்டான்” என்று கூறினான். மேலும், அவன், “அதுதான் மோசமானதாயுள்ளது” என்றும், “மற்றபடி வேட்டையாடுவதைக் குறித்து நாங்கள் பொருட்படுத்தவில்லை” என்றான்.
86 பாருங்கள், அதேக் காரியத்தைக் குறித்துதான் நானும் பேசிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் எந்த ஸ்தாபனத்தைச் சேர்ந்திருந்தாலும் கவலையில்லை, ஆனால் வேதத்தோடு, பரிசுத்த ஆவியானவரோடு தரித்திருங்கள். நாங்கள் கவலைப்படுவது உங்களுடைய ஸ்தாபனத்தைக் குறித்தல்ல; சீக்கிரத்தில் ஒன்று மற்றொன்றை சார்ந்திருக்கும். ஆனால் அது வேதத்தோடு தரித்திருக்கிறதாயிருக்க வேண்டும் இல்லையென்றால் அது மனிதனால் உண்டாக்கப்பட்ட கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளும். அதனால் வேதத்தோடு தரித்திருக்க வேண்டும்.
87 இப்பொழுது அவர்கள் தவறாயிருந்த ஸ்தாபனத்தை உண்டாக்கிவிட்டனர். இப்பொழுது அடுத்தக் காரியம் தவறானத் தண்ணீர் ஞானஸ்நானத்தைக் கொண்டுவந்தனர். வேதம் போதித்துள்ளபடி தண்ணீர் ஞானஸ்நானம் முழுகுதலாய் உள்ளது. ஆனால் கத்தோலிக்க சபையோ தெளித்தல் அல்லது ஊற்றுதலைக் கொண்டுவந்தது. தெளித்தலையோ அல்லது ஊற்றுதலையோ ஆதரிக்கக்கூடிய வேத வாக்கியம் வேதாகமத்தில் கிடையவேக் கிடையாது. அப்படிப்பட்ட ஒன்று வேதத்தில் எங்கும் காணப்படவேயில்லை. அது முழுகுதலாய் உள்ளது.
88 அதன்பின்னர் கத்தோலிக்க சபையைத் தொடர்ந்து அடுத்தபடியாக லூத்தரன் சபை தங்களுக்கு ஊற்றுதலைக் கொண்டுவந்தது. அதனைத் தொடர்ந்து வந்த ஆங்கிகள் சபை போன்றவை அந்தவிதமாகவே தொடர்ந்து வந்தன.
அதன்பின்னர், கொஞ்சங் கழித்து, பாப்டிஸ்டுகளும், கேம்பிளைட் என்ற ஸ்தாபனத்தினரும் மீண்டும் முழுகுதலுக்கு வந்தனர். பாருங்கள், அப்பொழுது சாத்தான் அதைக் கண்டான். எனவே அவன் ஒரு தவறான நாமத்தில் அவர்கள் முழுக்கு ஞானஸ்நானம் எடுக்கும்படி செய்துவிட்டான். அப்பொழுது அவர்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தை உபயோகித்து ஞானஸ்நானம் கொடுக்கத் துவங்கினர். வேதத்தில் எந்த நபராவது, “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில்” தண்ணீரில் முழுக்கு ஞானஸ்நானம் எப்போதாவது எடுத்துள்ளார்கள் என்பதற்கு ஒரு சிறு வேதவாக்கிய ஆதாரமும் கிடையாது. அதை யார் போதித்தாலும் அவன் ஒரு கள்ளப் போதகனாயிருக்கிறான். நான் அதை உங்களுக்கு பதிய வைக்கவே இதைக் கூறினேன்.
89 இப்பொழுது அது உண்மையல்லவென்று நீங்கள் கருதினால், இந்த மேடையிலேயே உங்களுடையக் கேள்விக்கு பதில் கூற விரும்புகிறேன், அவ்வாறு இருந்தால் எனக்குக் காண்பியுங்கள். வேதாகமத்தில் எந்த ஒரு இடத்திலாவது எந்த ஒரு நபராவது எப்போதாவது “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில்” ஞானஸ்நானம் பெற்றுள்ளதாக ஒரு இடத்தை உங்களால் எனக்குக் காட்ட முடியுமானால், அப்பொழுது நான் ‘ஒரு கள்ளப் பிரசங்கியார்’ என்று எழுதின ஓர் அடையாளத்தை என் முதுகில் தொங்கவிட்டுக்கொண்டு, என் கரங்களை மேலே உயர்த்தியவாறு, “நான் ஒரு கள்ளப் போதகர்” என்று உரத்தை குரலில் கூறிக் கொண்டே மேலும் கீழுமாக வீதிகளைச் சுற்றி வருகிறேன்.
அப்படிப்பட்ட ஒரு காரியமேக் கிடையாது. அது எங்கிருந்து தோன்றியது? இப்பொழுது திரும்பிச் செல்வோம். இது வேதத்தின் இந்தப் பக்கமாய் உள்ளது. நீங்கள் சரித்திரத்தைப் பார்க்க வேண்டும். கத்தோலிக்கர்கள் அநேக தேவர்கள் உண்டு என்று நம்புகின்றனர். அவர்கள் ஒரே தேவனை மூன்று வித்தியாசமான தேவர்களாகக் கூறுபோட்டு விட்டனர்.
90 எனக்கு செவிக்கொடுங்கள். நாம் எல்லோருமே ஒரு தேவனுடைய ஊழியக்காரராக அறிந்த பில்லிகிரஹாம் என்ற அந்த ஒரு மகத்தான மனிதரைக் குறித்து அன்றொரு நாள் செய்தித்தாளில் வந்திருந்த செய்தி என்ன ஒரு பயங்கரமான காரியமாயிருந்தது. நாம் அந்த வாக்கு மூலத்தை வைத்துள்ளோம். சகோதரன் பீலர் அதை அங்கே வைத்துள்ளார். ஒரு குறிப்பிட்ட நபரால் பில்லி கிரஹாமிடம், “இந்த திரித்துவத்தைக் குறித்த இந்தப் பெரிய முரண்பாடு என்ன? மூன்று தேவர்களா? உண்மையாகவே மூன்று தேவர்களா? அல்லது அது எப்படி? யார்? ஒரு இடத்தில் அது மூன்று தேவர்களைப்போல காணப்பட்டுள்ளது. மற்றொரு இடத்தில் காணப்படுவது…” என்று கேட்கப்பட்டபோது, பில்லிகிரஹாமோ, “அது இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. எனவே எவருமே அறியார்” என்று கூறிவிட்டார். என்னே!
91 மூன்று தேவர்கள் உண்டு என்றால், அப்பொழுது நாம் அஞ்ஞானிகளாயிருக்கிறோம். அந்த யூதன் கேட்டதுபோல, “அவர்களில் எது உங்களுடையத் தேவன்? பிதாவா? உங்களுடையத் தேவன் குமாரனா? அல்லது உங்களுடையத் தேவன் பரிசுத்த ஆவியா?” என்ற விதமாகிவிடும். ஒரே ஒரு தேவன் மாத்திரமே உண்டு.
அவைகள் மூன்று தனிப்பட்ட தன்மைகள் அல்ல, ஏனென்றால் ஒரு தன்மையுடையவர் ஒரு நபராய்த்தான் இருக்க வேண்டும். ஒரு நபரே இல்லாமல் ஒரு தனித்தன்மை இருக்கமுடியாது. நீங்கள் அதை அறிவீர்கள். எப்படி ஒரு நபரே இல்லாமல் எந்தக் காரியத்திற்குமே ஒரு தன்மை மாத்திரம் இருக்க முடியும்.
92 “ஓ”, மேலும், “நாங்கள் மூன்று தனிப்பட்ட தேவர்கள் என்பதை நம்புகிறதில்லை. ஒரே தேவனின் மூன்று தன்மைகளில் நாங்கள் விசுவாசங்கொண்டுள்ளோம்” என்றே கூறினேன். நல்லது, ஒரு தனிப்பட்ட தன்மை இருப்பதற்கு முன்பு, அது ஒரு நபராயிருக்க வேண்டும்.
93 நீங்களோ, “அப்படியானால் அது என்ன?” என்று கேட்கலாம், அது மூன்று தேவர்கள் அல்ல. அது ஒரே தேவனின் மூன்று உத்தியோகங்களாய் உள்ளது.
அவர் துவக்கத்தில் வனாந்திரத்தில் எரிகிற முட்செடியில் அக்கினி ஜூவாலையாய் தொங்கினபோது, அவர் பிதாவாய் இருந்தார். பிதாத்துவம், தேவன், இறங்கி வருதல், இறங்கி வந்தார் என்றே நான் கூறுகிறேன். அது உயரிய கட்டளையாயிருந்தது. ஆவியானவர், அந்தத் தெய்வீக அன்பு, ஸோயீ (Zoe) என்ற கிரேக்கப் பதம், அதாவது தேவனுடைய ஜீவன்தாமே அந்த அக்கினி ஸ்தம்ப ரூபத்தில் உண்டானது, பிதாத்துவத்தில் இருந்த அதே ஒருவரே பின்னர் குமாரனானார், எரிகின்ற முட்செடியில்…ஆவியாயிருந்தவர் மனிதனுக்குள், கிறிஸ்துக்குள்ளிருந்து, அந்த அக்கினியாயிருந்தவர் செய்த அதே அத்தாட்சியைக் கொண்டு வந்தார். எனவே, “நான் என் பிதாவின் கிரியைகளைச் செய்யாதிருந்தால் என்னை விசுவாசிக்காதீர்கள்” என்றார். ஒவ்வொரு மரமும் அதனுடைய சொந்த கனியைக் குறித்து சாட்சிப் பகரும்.
94 அவர் மனிதனான பிறகு, பாருங்கள், அந்த ஜீவன் இயற்கைக்கு மேம்பட்ட நிலையிலிருந்து தொட்டு உணரக்கூடிய ஒரு சரீரத்திற்குள்ளாக அந்த ஜீவன் இறங்கியிருந்தது. தியாக மரணத்தினூடாக, இந்த ஒரே தேவனின் உன்னத பலியாகிய இயேசு, “நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். என் பிதா எனக்குள்ளே வாசமாயிருக்கிறார்” என்று கூறினார். எவருமே அதைத் தெளிவாக வாசிக்க முடியுமே…
அவர்கள், “நீர் ஏன் எங்களுக்கு பிதாவைக் காண்பிக்கவில்லை? நீரே காண்பித்தால் அது எங்களுக்கு போதும்” என்றனர். யோவான் 14:8.
95 அதற்கு அவர், “இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும், நீ என்னை அறியவில்லையா?” என்றார். மேலும் அவர், “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” என்றார்.
நான் இவ்வாறு கூறும்போது ஒரு பெண்மணி உடனே குதித்தெழுந்து, “என்ன? சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, நீரும் உம்முடைய மனைவியும் ஒன்றாயிருப்பதுபோல பிதாவும், குமாரனும் ஒன்றாயிருக்கிறார்கள், ஆம்” என்று கூறினாள்.
அதற்கு நான், “ஓ, இல்லை, அவர்கள் அந்தவிதமாக ஒன்றாயிருக்கவில்லை” என்றேன். மேலும் நான், “நீங்கள் என்னைக் காண்கிறீர்களா?” என்று கேட்டேன்.
அப்பொழுது அவள், “ஆம்” என்றாள்.
அதற்கு நான், “நீங்கள் என் மனைவியைக் காண்கிறீர்களா?” என்று கேட்டேன்.
அவளோ அதற்கு, “இல்லையே” என்றாள்.
96 எனவே அப்பொழுது நான், “அப்படியானால் அவர்கள் அந்தவிதமாக ஒன்றாயிருக்கவில்லை. இயேசு, ‘நீங்கள் என்னைக் காணும்போது, நீங்கள் என் பிதாவைக் கண்டுவிட்டீர்கள். பிதா எனக்குள் வாசமாயிருக்கிறார்’ என்னுடைய மனைவி எனக்குள் வாசமாயில்லையே” என்றேன். புரிகிறதா?
அவர்கள் ஒன்றாயிருக்கிறார்கள். ஒவ்வொரு விதத்திலுமே, அவர்கள் ஒன்றாயிருக்கிறார்கள். நானும் என் மனைவியும், உடன்படிக்கையினுடாகவே நாங்கள் ஒன்றாயிருக்கிறோம், நாங்கள் ஐக்கியத்தில் ஒன்றாயிருக்கிறோம், ஆனால் இரண்டு தனிப்பட்ட தன்மைகளையுடைய நபர்களாக இருக்கிறோம். என்னுடைய மனைவி ஒரு விதமான சிந்தனையினால் ஒரு காரியத்தையும், நான் மற்றொரு விதமான சிந்தனையில் மற்றொன்றையும் செய்யக்கூடும். எனவே நாங்கள் இரு நபர்களாய் இருக்கிறோம். ஆனால் தேவனோடு உள்ளக் காரியம் அவ்வாறில்லை. அவர்கள், தேவனும் கிறிஸ்துவும் ஒரே நபராயிருக்கிறார்.
97 அப்படியானால் பரிசுத்த ஆவி என்றால் என்ன? ஆட்டுக் குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டு, அந்தப் பெயரெழுதப்பட்ட ஜனங்களுக்காக மரித்தபின், அவர்களுக்குள் வாசம் செய்கிற தேவனுடைய ஆவியே பரிசுத்த ஆவியாகும். ஆதியில் அவரோடு ஒன்றாயிருந்தனர். வேதம் அவ்வண்ணமாய்க் கூறுகிறது. உலகத்தோற்றத்திற்கு முன்பே அவர்கள் அவரோடிருந்தார்கள் என்று இயேசு அவர்களிடத்தில் கூறவில்லையா? அந்தக் காரியங்களுக்கு உங்களுடையச் சிந்தனைகள் கறைப்பட்டு அந்தகாரமடைந்துள்ளது, நம் எல்லோருடைய சிந்தனைகளுமே அவ்வாறிருந்தது. ஆனால் நாம் இங்கிருப்பது ஏதோ ஒரு தற்செயலாக நிகழ்கிற ஒன்றல்ல. நாம் தேவனுடைய சிருஷ்டிப்பின் துவக்கத்திலேயே தேவனுடையக் குமாரரும், குமாரத்திகளுமாய் இருந்து, ஒரு சாட்சியாக, தேவனுடையக் கிருபையானது பரிசுத்த ஆவியினால் நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டுள்ளதை சாட்சிப் பகரவே இங்கே விடப்பட்டிருக்கிறோம். நாம் நித்திய ஆவியைப் பெற்றுள்ளோம். எவருக்குமே, யாருக்குமே, அதைத் தடுத்து நிறுத்த வழியேக் கிடையாது. தேவனுடையச் சபையானது எவ்வளவு நிச்சயமுடையதாயிருக்க முடியுமோ அவ்வளவு நிச்சயமுடையதாயிருக்கும்.
98 நாம் பேசிக்கொண்டிருக்கையில் மீண்டும் ஒரு நிமிடம் அந்தச் சிறு பொருளைப் பற்றி பேசுவோம். முறைதவறிப் பிறந்த பிள்ளை பதினான்கு தலைமுறைக்கு கர்த்தருடையச் சபைக்கு உட்படலாகாது, நானூறு வருடங்கள், எப்படியாய் அந்தப் பிதாக்களின் அக்கிரமம் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கப்படுவதாயிருந்தது.
99 அதேவிதமாக பிதாக்களின் நீதியும் விசாரிக்கப்பட்டது. நீங்கள் என்ன செய்கிறீர்களோ, அது நாளை என்ற ஒன்று வந்து, உங்களுக்கு ஒரு பேரப்பிள்ளைப் பிறந்தால், இன்றைய உங்களுடையச் செய்கை அப்பொழுது அவன் என்னவாயிருப்பான் என்பதைத் தீர்மானிக்கும்.
ஏனென்றால் நாம் அங்கே வேதத்தில் அந்த மெல்கிசேதேக்கைக் குறித்து வாசிக்கிறோம். ஆபிரகாம் இராஜாக்களை முறியடித்துவிட்டு திரும்பி வருகையில் இவனை சந்திக்கும்போது, கோத்திரப் பிதாவாகிய ஆபிரகாம் அவனுக்கு பத்தில் ஒன்றை, தனக்கு உண்டாயிருந்த எல்லாவற்றிலிருந்தும் தசமபாகம் கொடுத்தான். அப்பொழுது அவன் தசமபாகத்தைக் குறித்துக் கூறினான். அதாவது “லேவி மாத்திரமே தசமபாகத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடியவன்”. ஆனால் அவன், “லேவி ஆபிரகாமின் அரையிலிருந்தபோது, தசமபாகங்களை வாங்கிகுறவனாயிருந்த அவன் தசமபாகம் செலுத்தினான்” என்றான்.
100 ஓ, உங்களால் அதைப் புரிந்துகொள்ள முடிகிறதா? [சகோதரன் பிரான்ஹாம் பிர்சங்க பீடத்தை ஐந்து முறைகள் தட்டுகிறார்—ஆசி.] லேவி ஆபிரகாமின் பேரனுடைய மகனாயிருந்தான்…இங்கே லேவி, குறைந்தபட்சம் எண்ணூறு அல்லது ஆயிரம் ஆண்டுகள் கழித்து, ஒருகால் பல வருடங்கள் கழித்துப் பிறந்திருக்கலாம். எத்தனை வருடங்கள் கழித்துப் பிறந்தான் என்று எனக்கு சரியாகத் தெரியாது. தலைமுறைகளினூடாக நீங்கள் அதைக் கணக்கிட்டு அறிந்துகொள்ளலாம். ஆனால் ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு லேவியைப் பெற்றான்; இங்கே லேவிக்கு, யாக்கோபு அவனுடைய தகப்பனாயிருந்தான். ஈசாக்கு அவனுடைய பாட்டனாராயிருந்தான். ஆபிரகாம் அவனுடைய முப்பாட்டனாராயிருந்தான். எனவே யாக்கோபு ஆபிரகாமின் அறையிலிருந்தபோது, “அவன் மெல்கிதேசேதேக்கிற்கு தசமபாகத்தைச் செலுத்தினான்” என்று வேதம் உரைத்துள்ளது.
101 அப்படியிருக்கும்போது இந்த வாலிபத் தலைமுறையினர் சுற்றித் திரிந்துகொண்டு, புகைபிடித்துக்கொண்டு, மது அருந்திக்கொண்டு இருக்கும்போது, எப்படி மற்றொரு தலைமுறை உயிர் வாழும்படி நீங்கள் எதிர்பார்க்க முடியும்? அந்தக் காரணத்தினால்தான் நாம் பாவத்தைப் பெற்றுள்ளோம். இப்பொழுது இளமைப் பருவத்தினரின் குற்றங்களையும் காண்கிறோம். மேலும் நாம் வீதியில் சுற்றித்திரிகிற இளம் பெண் பிள்ளைகளையும், ஆண் பிள்ளைகளையும் பெற்றுள்ளதற்குக் காரணம் என்னவெனில், அவர்களுடையத் தாய்மார்களும், தகப்பன்மார்களும் கடந்துபோன அவர்களுடைய நாட்களில் அவர்கள் செய்த காரியங்களே அதற்கு காரணமாயுள்ளது.
அதேவிதமாகக் கடந்துபோன காலங்களில் பண்டைய நாகரீகங்கொண்ட தேவபக்தியுள்ள பெற்றோர்களை உடையவர்களாயிருந்தவர்களுடையப் பிள்ளைகளை நாம் இன்றைக்கு பண்டைய நாகரீகங்கொண்ட பெண் பிள்ளைகளாகவும், சத்தியத்திற்காக நிற்கும் பிரசங்கிமார்களாவும் பெற்றுள்ளதற்குக் காரணமாயுள்ளது. அது முற்றிலும் உண்மை. நாம் இன்னமும் எந்த ஸ்தாபனத்துடனும் ஒப்புரவாகாமல் வார்த்தைக்காக நிற்கிற பிரசங்கிமார்களை நாம் பெற்றுள்ளதற்குக் காரணம், நாம் முன் நாட்களில் இதேவிதமான நிலையில் உறுதியாக நின்றிருந்த பண்டைய நாகரீகங்கொண்டப் பிரசங்கிமார்களை உடையவர்களாயிருந்ததே இதற்கு காரணமாயுள்ளது. ஆம்.
102 இப்பொழுது நாம் இந்த நாளில் இருக்கிறோம். இப்பொழுது நாம் கூற விரும்புவது இங்கு என்னவெனில்…இங்கே சில ஸ்தாபனங்கள் இருக்கின்றன…நாம் அவைகளோடில்லாதக் காரணம் நாம் ஒரு ஸ்தாபனம் அல்ல. காரணம் நாம் ஒரு ஸ்தாபனமாயிருந்தால், நாம் அதற்குத் தலை வணங்கியிருக்க வேண்டும்.
103 ஞாபகங்கொள்ளுங்கள், உங்கள் விருப்பம் போல வேதத்தில் எங்கு வேண்டுமானாலும் நீங்கள் ஆராய்ந்துப் பாருங்கள். வேதாகமத்தில் எங்கேயாவது, எப்போதாவது, எவராவது “பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில்” தெளித்தோ அல்லது ஊற்றியோ ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள் என்பதை நீங்கள் ஒரு இடத்திலும் கண்டறியவே மாட்டீர்கள். ஆகையால் அது வேதத்தில் இல்லையென்றால், அப்பொழுது அது எங்கோ தொடங்கி இருக்க வேண்டியதாயுள்ளது.
104 நான் கூறுவது போல, ஒரு பெரிய மரத்தின்கீழ் அமர்ந்து, இதைச் சிந்தித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். அது, ஓ, அது ஓர் ஆண்மைவாய்ந்த வீறுமிக்க ஒன்றாயிருக்கலாம், அது பிரமாண்டமான ஒன்றாய் இருக்கலாம். அது வல்லமையுள்ளதாயிருக்கலாம். ஆனால் அதற்கு ஆரம்பம் என்ற ஒன்று இருந்திக்க வேண்டும். அது எங்கோ துவங்கியிருக்க வேண்டும். ஒவ்வொரு காரியமும்…நாம் இவ்வளவு தீரமாக நிற்கிற இந்தப் பண்டையக் காலமார்க்கம், அது எங்கோ துவங்கியிருக்க வேண்டும். அதற்கு ஓர் ஆரபம் இருந்திக்க வேண்டும். நாம் பெற்றுள்ள கொள்கைகள், அதற்கு ஓர் ஆரம்பம் இருந்திருக்க வேண்டும். நம்முடைய ஸ்தாபனங்களில் நாம் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறத் தவறான வேதவாக்கியங்களுக்கு ஓர் ஆரம்பம் இருந்திருக்க வேண்டும். நாம், “நான் ஒரு மெத்தோடிஸ்டு” என்று கூறுவோமேயானால், உங்களுக்கு அதற்கு ஓர் ஆரம்பம் இருந்திருக்க வேண்டும். நீங்கள், “நான் ஒரு பாப்டிஸ்டு” என்று கூறினால், உங்களுக்கு அதற்கு ஓர் ஆரம்பம் இருந்திருக்க வேண்டும். நீங்கள், “நான் ஒரு கத்தோலிக்கன்” என்று கூறினால், உங்களுக்கு அதற்கு ஓர் ஆரம்பம் இருந்திருக்க வேண்டும். நீங்கள், “நான் மீண்டும் பிறந்த ஒரு கிறிஸ்தவன்” என்று கூறினால், உங்களுக்கு அதற்கு ஓர் ஆரம்பம் இருந்திருக்க வேண்டும். நீங்கள் அந்தவிதமாக ஆரம்பத்தை உடையவர்களாய் இருந்திருக்க வேண்டும்.
105 எனவே நாம் திரும்பிச் சென்று, அது எங்கே ஆரம்பமானது என்று கண்டறிவோமாக. நாம் காட்சியின் துவக்கத்திற்குத் திரும்பிச் செல்வோமாக. அப்படியானால் வேதாகமத்தில் ஸ்தாபனமே இல்லாமலிருந்தால், அப்பொழுது ஸ்தாபனம் உண்டாயிருந்ததற்கு ஓர் ஆரம்பம் இருக்க வேண்டும். அது கத்தோலிக்க சபையோடு துவங்கினது. அதிலிருந்து பிராட்டெஸ்டென்டுகள் முளைத்தெழும்பினர்.
106 அப்படியானால் அவள் ஒரு துர்கீர்த்தி பெற்ற ஸ்திரீ என்றும், அவள் தன்னுடைய உபதேசத்தின் நிமித்தம் வேசித்தனம் செய்தாள் என்றும் வேதம் கூறியுள்ளது. வேசித்தனம் என்றால் என்ன? நாம் அதை ஏற்கனவே பார்த்துவிட்டோம் என்பது நினைவிருக்கட்டும். தன்னுடையக் கணவனோடு வாழ்கிற ஒரு ஸ்திரீ, அவள் ஒரு கன்னிகைப் போன்றே இருக்கிறாள். அவள் அந்த ஒரு மனிதனோடு வாழ்கின்ற வரையில் அவள் ஒருபோதும் அசுத்தமாக்கப்படுவதில்லை. ஆனால் அநீதி என்றால் என்ன? நீதி தாறுமாறாக்கப்படுவது. அவள் மற்றொரு மனிதனோடு வாழ்ந்தால், அப்பொழுது அவள் ஆக்கினைக்குட்படுத்தப்பட்டவள். புரிகிறதா? நீதி தாறுமாறாக்கப்படுதல்.
107 இப்பொழுது ஸ்தாபனம் தவறாயிருந்தால்…அது சரியானதாயிருந்திருந்தால், “நாம் ஸ்தாபனங்களை ஏற்படுத்தப் போகிறோம்” என்று தேவன் கூறியிருந்திருப்பார். வேதத்தில் கத்தோலிக்க சபையானது ஒரு “வேசியாக” தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது, அநீதி, ஏனென்றால் அவள் தன்னுடைய சபையோருக்குத் தன்னுடைய சொந்த வேதசாஸ்திரித்தையே அளித்துக்கொண்டிருந்தாளேயன்றி, வேதாகமத்தை அல்ல. சகோதரனே, சகோதரியே [சகோதரன் பிரான்ஹாம் தன்னுடையக் கரங்களை இரண்டு முறைத் தட்டுகிறார்—ஆசி.] கத்தோலிக்க சபையானது வேதத்தைக் குறித்து உங்களுக்கு முன்பாக பேசி பரிகசிக்கிறதல்லவா? வேதம் என்னக் கூறினாலும் அவர்களுக்கு கவலையில்லையென்றும், அவர்களுடைய சபைக் கூறுவதையே, அவர்களுடைய ஸ்தாபனம் என்ன கூறுகிறதோ அதையே எடுத்துக்கொள்வோம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். அப்படியானால் நீங்கள் “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்” நாமத்தில் கொடுக்கப்படும் ஞானஸ்நானம் தவறு என்று வேதம் கண்டித்துரைக்கும்போது, நீங்களும் அந்த ஞானஸ்நானத்தையே சம்மதித்து ஏற்றுக்கொண்டு, பின்னர் அவர்களைத் தவறு என்று எப்படி அழைக்க முடியும்? காரணம் மெத்தோடிஸ்டுகள் அவ்வண்ணம் கூறுகிறார்கள் என்றும், பாப்டிஸ்டுகளும் அவ்வண்ணம் கூறுகிறார்கள் என்றும் கூறுகிறீர்களா? வேதாகமத்தில் அப்படிப்பட்ட ஒரு காரியமே இல்லாமலிருக்கும்போது, நீங்கள் ஏன் தெளித்தலையும், ஊற்றுதலையும் ஒப்புக்கொள்ளுகிறீர்கள்? எந்த ஒரு நபருமே, “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்” நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள் என்ற அப்படிப்பட்ட ஒரு காரியமேக் கிடையாது. அப்படியானால் நீங்கள் ஏன் அதைச் செய்கிறீர்கள்?
108 பாருங்கள், அந்தக் காரணத்தினால்தான் நாம் ஒரு ஸ்தாபனமாயிருக்கவில்லை. நாம் அவர்களுக்கு வேண்டியவற்றை தேடிக்கொடுக்க வேண்டியதில்லை. நாம் எடுக்கிற…ஆவியானவர் வேதத்தின்பேரில் அதைத் தெளிவுபடுத்தி விளக்கும்போது, நாம் வேதத்தோடும், கர்த்தர் உரைக்கிறதாவது என்பதோடும் தரித்திருக்கிறோம். அங்குதான் காரியம். அதைப்போன்ற அப்படிப்பட்ட காரியங்களேக் கிடையாது. அது வேதாகமத்தில் எழுதப்பட்டிருக்கவேயில்லை.
109 ஓ, நீங்களோ, “அப்படியானால் மத்தேயு 28:19-ம் வசனத்தைக் குறித்து என்ன?” என்று கேட்கலாம்.
இப்பொழுது நாம் அதைப் பல டஜன் கணக்கான முறைகளே அலசி ஆராய்ந்து பார்த்துள்ளோம். அது இயேசு கூறினார் என்ற ஒரு வாத செய்தியாய் இருந்து வருகிறது. “நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து” என்று உள்ளது. அது எப்போதாவது நிறைவேற்றப்பட்டிருந்ததா? அந்த விதமாக எந்த ஒரு நபராவது ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தாரா? ஒருவரும் இல்லையே. அப்படியானால் எங்கோ ஏதோக் காரியம் தவறாயிருக்க வேண்டும். நிச்சயமாக, கத்தோலிக்க கோட்பாடே அதைச் செய்தது.
110 சரித்திர ஆசிரியர்களாகிய நீங்கள் சரித்திரத்தில் அவ்விதம் யாராவது ஞானஸ்நானம் எடுத்துள்ளார்களா என்று நிசாயாவுக்கு முன்பிருந்தப் பிதாக்கள் என்ற சரித்திரப் புத்தகத்தை ஆய்ந்து கண்டறியுங்கள். நிசாயவிற்கு முன்பிருந்தப் பிதாக்கள் என்ற புத்தகத்தையும், பாருங்கள், இங்கிலாந்து இராஜா ஞானஸ்நானம் பெற்றது வரைக்கும் உள்ளதையும் வாசித்துப் பாருங்கள். கத்தோலிக்க சபையானது ஸ்தாபிக்கப்படும் வரையில் அவர்கள் ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்தான் ஞானஸ்நானம் பெற்றார்கள். கத்தோலிக்கர்களோ தாங்கள் விரும்புகிற எந்தக் காரியத்தையும் மாற்ற தங்களுடையக் கத்தோலிக்க சபைக்கு அதிகாரம் உண்டு என்று கூறினர். எனவே அவர்கள், “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்” நாமத்தில் ஞானஸ்நானங்கொடுத்து வந்தனர். மார்டின் லூதரும் அதையே வெளியே கொண்டுவந்தார். ஜான் வெஸ்லியும் அதையேப் பின்பற்றினார். அலெக்சாண்டர் காம்ப்பெல் என்பவரும் அதனோடு வந்தார். பாப்டிஸ்டு சபையினுடைய ஜான் ஸ்மித் என்பவரும் அதையேப் பின்பற்றினார். இதோ பெந்தேகோஸ்தேயினரும் இன்னமும் அதனோடு தரித்திருக்கிறார்கள்.
ஆனால் வேளையானது வந்துவிட்டதே!
111 நாம் கடந்த இரவு பார்த்ததைப் போல, குத்துவிளக்குகளைக் கவனித்துப் பாருங்கள். முதல் குத்துவிளக்கு வெளிச்சத்தைப் பிரகாசிக்கிறது. பின்னர் அதனைத் தொடர்ந்து இருட்டாகி, இருட்டாகி, இருட்டாகிக்கொண்டே அது ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்குள் இருளின் காலத்திற்குள்ளாகவேச் சென்றுவிட்டது. அதன்பின்னர் மீண்டும் பிரகாசிக்கத் தொடங்கினது. கடைசி சபை காலத்திற்கு முன்னர் அது மீண்டும் பற்றி எரிந்தது. இரண்டு சபை காலங்களுக்கிடையே வெளிச்சம் உண்டானது.
எபேசு சபையைக் குறித்தும், தெசலோனிக்கேயா சபையக் குறித்தும், தொடர்ந்து இருளின் காலத்திற்குள்ளாகும் வரையிலான வேதவாக்கியங்களைப் பின் தொடர்ந்து கவனித்துப் பாருங்கள். அவைகள் ஒவ்வொன்றிலும், அவர், “உனக்கு கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமலிருக்கிறாய்” என்றார். அதற்கு அடுத்த சபையையோ, “நீ ஒரு மகத்தான காரியத்தைச் செய்திருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமலிருக்கிறாய்” என்றார். நிசாயாவுக்கு முன்பிருந்த பிதாக்கள் என்ற சரித்திரப் புத்தகத்தின் மூலமாக ஆராய்ந்து பாருங்கள். “நீ என் நாமத்தை மறுதலியாமலிருக்கிறாய்.” அதன் பின்னர் இருளின் காலங்களின் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள்.
அதன் பின்னர் லூத்தரன் சபையானது வெளியே வந்தது. அப்பொழுது அவர், “நீ என்னுடைய நாமத்தை உடையவனாயிருக்கவில்லை. ஆனால் நீ ஒரு நாமத்தை உடையவனாயிருக்கிறாய்” என்றார். அதற்குப் பின் இயேசு என்பதே இல்லாமலிருந்தது; ஆனால் லூத்தர், கத்தோலிக்கர், பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன். [சகோதரன் பிரான்ஹாம் தன்னுடையக் கரங்களை இரண்டு முறைத் தட்டுகிறார்—ஆசி.] “நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருக்கிறாய். ‘நாங்கள் ஒரு ஜீவனுள்ள சபையாய் இருக்கிறோம். நாங்கள் செழிப்படைந்துகொண்டிருக்கிறோம். நாங்கள் ஊக்கத்தோடு வளர்ந்துகொண்டிருக்கிறோம்’ என்று கூறுகிறீர்கள். ஆனால் நீங்கள் மரித்துப்போய்விட்டீர்கள்!” வேதம் அவ்வண்ணமாகவே உரைத்துள்ளது.
112 “நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.” இல்லை…பாப்டிஸ்டுகள் உங்களை இரட்சிக்கிறதில்லை. பிரஸ்பிடேரியன்கள் உங்களை இரட்சிக்கிறதில்லை. கத்தோலிக்கர் உங்களை இரட்சிக்கிறதில்லை. இயேசுவே உங்களை இரட்சிக்கிறார்.
113 அவர்கள், தங்களுடைய எல்லாக் கோட்பாடுகளையுங் கொண்டு சிறு புத்தகங்கள், மனிதனால் உண்டாக்கப்பட்ட வேத சாஸ்திர முறைகள், முதலிவற்றை வைத்துக்கொண்டு, “நாங்கள் இதைத்தான் விசுவாசிக்கிறோம்” என்று கூறுகின்றனர். அந்தக் காரணத்தினால்தான் நாம் அதிலிருந்து விலகியிருக்கிறோம். நமக்கு வேதாகமத்தைத் தவிர வேறு பாடப்புத்தகமே கிடையாது. ஆவியானவரைத் தவிர வேறு வழிநடத்துதலோ, வேறி பேராயரோக் கிடையாது. அது உண்மை.
அப்படியானால் ஒரு தவறான ஆவி உள்ளே வருமானால், அது ஏதோ ஒரு காரியத்தைத் திரித்து உருக்குலைக்க முயற்சிக்கும், ஆனால் வார்த்தை அது திரித்து உருக்குலைக்காதபடி செய்யும். எனவே, “அது தவறானதாயிருக்கிறது. அதிலிருந்து விலகியிருங்கள்.” புரிகிறதா? இங்கே ஆவியானவர் வந்து, “அது தவறானதாயிருக்கிறது” என்று கூறுகிறார். ஏனென்றால் அவருடைய ஆவிதாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறபடியால் நாமும் சாட்சிப் பகருகிறோம்.
உதாரணமாக இங்கே ஒருவர் வந்து, “ஓ, நாங்கள் இதைச் செய்ய வேண்டும். ஓ, அவர்கள் இதை, அதை மற்றதைச் செய்வது சரியே என்று நான் கருதுகிறேன்” என்று கூறுகிறார்.
114 ஆனால் ஆவியானவரோ, “அதனோடு ஏதோக் காரியம் தவறாயுள்ளது” என்பார். அப்பொழுது வேதாகமத்திற்குத் திரும்பிச் சென்று நாங்கள் செய்ய வேண்டிய விதத்தை அவர் விளக்கிக் கூறுகிறார். “எனவே அது தவறாயிருந்தால், அதிலிருந்து விலகியிருங்கள்.”
அந்தக் காரணத்தினால்தான் வேதம், “ஞானமுள்ள மனம் இதிலே விளங்கும். புத்தியுள்ளவன் இதோ இருக்கிறான். இதை உடையவன் இதோ இருக்கிறான்” என்று கூறியுள்ளது. அது சபையை ஒழுங்கில் அமைத்தலாயுள்ளது. தேவனுடைய மகத்தானத் திட்டத்தை நீங்கள் காண்கிறதில்லையா?
115 இப்பொழுது பாருங்கள். பிலதெல்பியா சபையின் காலம் மெத்தோடிஸ்டு சபைக் காலமாய், சகோதர அன்பின் சபைக் காலமாய், சீர்திருத்தமாய் இருந்தது. இங்கிலாந்தில் உள்ள ஆங்கிலிக்கன் சபையில் கால்வினிசக் கொள்கை அதிகப்படியாக விருத்தியடைந்தபோது, அங்கே அவர்களுக்கு எழுப்புதலே இல்லாமல் உலர் புல்லிலிருந்து உதிரும் புல் விதைகளைப் போலாகிவிட்டபடியால், அந்த ஆர்மினிய உபதேசத்தை எடுத்துப்போட்டு கண்டித்து உணர்த்த தேவன் ஜான் வெஸ்லியை எழுப்பினார். அவர் அதை எதிர்த்து, அந்த காரியத்தை வீழ்த்தினது ஏற்புடையதாயிருந்தது. ஆனால் அவர் என்ன செய்தார்? அவர் (கால்வினிஸ்டுகளுக்கு) இந்த ஒரு வழியை ஏற்படுத்தினபோது, மெத்தோடிஸ்டுகள் தோன்றி அந்த வழிமுறையை மட்டுமே கடைபிடிக்க முடிந்தது. இப்பொழுது அங்கே இதற்கிடையில் இன்னும் மெத்தோடிஸ்டுகளும், இன்னும் பாப்டிஸ்டுகளும் அப்படியேத்தான் இருக்கின்றனர்.
116 இப்பொழுது நாம் இங்கே வேத வாக்கியங்களில் வெளிப்படுத்தின விசேஷம் 3-ம் அதிகாரத்தை எடுத்துப்பார்த்தால் நலமாயிருக்கும், அப்பொழுது நீங்கள் அதைப் புரிந்துகொள்வீர்கள். இப்பொழுது சற்று முன்…கடைசி சபைக்காலம், அது பெந்தேகோஸ்தேவாயிருந்து கொண்டு வெதுவெதுப்பாயுள்ளது. லவோதிக்கேயா சபைக் காலமோ அவரைப் புறக்கணித்துள்ளது.
ஆனால் இயேசுவானவர் சிலுவையில் காணப்பட்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியில் நின்றுகொண்டிருந்தபோது, அந்தகாரமானது அவரிடத்திலிருந்து, அவருடைய வலது கரத்திலிருந்தும், அவருடைய இடது கரத்திலிருந்தும், தூரமாய் அகன்று போய்விட்டிருந்தது என்பது நினைவிருக்கட்டும். “அவர் அல்பாவும், ஓமெகாவுமாகக் காணப்பட்டிருந்தார்.” அதற்கு இடைப்பட்ட ஒருவராய் அல்ல. அவர் தம்முடையக் கரத்தை நீட்டியிருந்தபோது, “அல்பாவும் ஓமெகாவுமாயிருந்தார்.” “அவர் வச்சிரக் கல்லுக்கும், பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்,” அது ரூபனும் பென்யமீனுமாக இருந்தது. “அவர் முந்தினவரும் பிந்தினவருமாயிருந்தார்.” அவர் தன்னுடையக் கரங்களை விரித்திருந்தார். அவர் அங்கே அவ்வாறு நின்றார்.
117 ஆனால் நினைவில்கொள்ளுங்கள், இங்கிருந்து வெளியே போய் இதை குழப்பிக்கொள்ள வேண்டாம். ஏனென்றால் அவர்கள் இந்த ஸ்தாபனங்களைக் குறித்த இந்த நாமங்களை இங்கே ஏற்றுக்கொண்டனர். எனவே அவர்கள் அதேக் காரியங்களினால் அவைகளிலேயே மரித்துப் போவார்கள். ஆனால் அவர், “மெத்தோடிஸ்டுகளுக்கும், பெந்தேகோஸ்தேக்களுக்கும் இடையே, ‘இதோ, திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்’” என்றார். அங்குதான் காரியம், அந்த நாமம் மீண்டும் திரும்ப அளிக்கப்பட்டது. “நான் திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன். நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.” அது என்ன? அது திறந்த வாசல்.
118 “தண்ணீர்!” தண்ணீர், நீங்கள் ஆங்கிலத்தில் கவனித்துப் பார்த்தால் அது S—t—r—a—i—g—h—t என்றில்லாமல் இருப்பதைப் பார்க்கலாம். அது ஆங்கிலத்தில் S—t—r—a—i—t என்றே உள்ளது. “தண்ணீரே வழியாய் உள்ளது.” S—t—r—a—i—t என்பதற்குத் தண்ணீர் என்றே பொருள்.
எப்படி? “நீங்கள் பெற்றிருந்த இயேசுவின் நாமத்திற்கும் திரும்பி வாருங்கள். உனக்கு…உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலிக்கவில்லை.” அப்படியானால் இங்குதான் அவர்கள் அதை இழந்து, ஒரு கத்தோலிக்க ஸ்தாபனத்திற்குள்ளாகச் சென்றுவிட்டனர்; பின்னர் ஒரு லூத்தரன் ஸ்தாபனத்திலிருந்து வெளிவந்தனர்; பின்னர் ஒரு வெஸ்லி ஸ்தாபனத்திலிருந்து வெளிவந்து, அதன்பின்னர் அவர்கள் பெந்தேகோஸ்தே ஸ்தாபனத்திற்குள்ளாகச் சென்று கொண்டிருக்கின்றனர்.
ஆனால் முடிவு காலத்திற்கு முன்பாக, வித்து பூமியிலிருந்து ஏறக்குறைய போய்விட்டிருக்கும். நீதியின் வித்து கடந்து போய்விட்டிருக்கும். சர்ப்பத்தின் வித்து ஒன்றுதிரண்டு வேகமாக, வேகமாக இந்த அணு ஆற்றல் முன்னேற்றக் காலத்தில் அழிக்கப்பட வேகமாக ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறது. “ஆனால் அந்த நேரத்திற்கு முன்பு, நான் தப்பித்துக்கொள்ளுவதற்கான ஒரு வழியை ஏற்படுத்துவேன். நான் உனக்கு முன்பாகத் திறந்த வாசலை வைப்பேன். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்மும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது. அதின் வழியாய் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.” அங்குதான் காரியம். இதற்கு முன்பு, இந்த மகத்தான வெளிச்சம் பிரகாசிக்க வேண்டியதாயுள்ளது.
119 நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். அதை எப்படி வெளிப்படுத்திக் கூறுவது என்று எனக்குத் தெரியவில்லை; நான் மிகவும் மகிச்சியாயிருக்கிறேன். இதோ, முடிக்க வேண்டிய நேரமே வந்துவிட்டது. நான் என்னுடையப் பாடப் பொருளையே இன்னும் தொடவில்லை.
120 பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்ற பொருளின் பேரில் நான் பேச விரும்புகிறேன். நான் இன்னும் பத்து, பதினைந்து நிமிடங்களில் அதைப் பேசி முடிக்க உள்ளேன். இப்பொழுது நான் கடந்த இரவு உங்களைக் காக்க வைத்ததுபோல, இப்பொழுது செய்ய மாட்டேன். நான் அவ்வாறு செய்ய முயற்சிக்க மாட்டேன்.
121 இப்பொழுது, அவர்கள் தவறான தண்ணீர் ஞானஸ்நானத்தைப் பெற்றிருந்தாலே, அந்த ஸ்தாபனங்கள் யாவுமே தவறாயிருக்கின்றன. எப்பொழுதும் குறிப்பிட்ட ஸ்தாபனங்களுக்காக ஊழியம் செய்யும் எவருமே முற்றிலும் தவறானக் காரியத்தை ஆதரித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தேவனுக்கு விரோதமாயுள்ளதையே ஆதரித்துக்கொண்டிருக்கிறார்கள். அவ்வண்ணமாகவே இந்தச் சபைக் காலங்களில் கூறப்பட்டது. வேதாகமத்திலும் அவ்வண்ணமே கூறப்பட்டு, அவர்கள் வேசிகள் என்று அழைக்கப்பட்டனர், ஏனென்றால், “அவர்கள் மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதிக்கின்றனர்.” இப்பொழுது நாம்…
122 அண்மையில் நான் ஓர் இடத்திற்குச் சென்றேன், அப்பொழுது தெய்வீக சுகமளித்தலின் பேரில் விளக்கவுரைகளை எழுதும் ஒரு குறிப்பிட்ட மனிதன் என்னிடத்தில் வந்து பேசினார். அவர், “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, ஜனங்கள் உமக்கு விரோதமாகக் கொண்டுள்ள ஒரே காரியம் என்னவென்றால், நீர் பெந்தேகோஸ்தேக்களிடத்திற்கே செல்கிறீர் என்பதுதான்” என்று கூறினார்.
அதற்கு நான், “நீங்கள் உங்களுடையப் பட்டிணத்தில் எனக்கு ஆதரவு அளித்தால், நான் உங்களிடத்திற்கும் வருவேன்” என்றேன்.
அப்பொழுது அவர், “பாருங்கள், நான் அதற்கு ஏற்பாடு செய்ய முயற்சித்து, நான் அதைக் குறித்து மெத்தோடிஸ்டு சபையிடம், அதாவது இந்தக் குறிப்பிட்ட சபையின் பேராயரிடம் அதைப் பற்றி பேசினேன். மேலும் அதைக் குறித்து வேறு யாரிடமும் மறைக்க வேண்டியதில்லை என்று எண்ணி, நான் அதை அவரிடம் கூறினபோது, நீங்கள் பாருங்கள், அவரோ மெத்தோடிஸ்டு சபையாராகிய நாங்கள் இந்த அற்புதங்களை நம்புகிறதில்லை என்று கூறிவிட்டனர்” என்றார்.
123 இப்பொழுது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? இப்பொழுது நீங்கள் மெத்தோடிஸ்டு சபைக்கு, ஸ்தாபனத்துக்கு செவிகொடுக்கப் போகிறீர்களா? அப்படி நீங்கள் செவிக்கொடுத்தால், அப்பொழுது நீர் ஒரு வேசி மார்க்கத்தாராயிருக்கிறீர். அப்படிப்பட்ட ஒரு கூட்டத்திற்கு பாப்டிஸ்டு சபை ஆதரவளிக்கும் என்று நீர் நினைக்கிறீரா? [சபையோர், “அளிக்காது” என்று கூறுகிறார்கள்—ஆசி.] ஏன்? காரணம் அவர்கள் பாப்டிஸ்டுகளாய் இருக்கிறார்கள். அவர்கள் வேசிகளாயிருக்கிறார்கள் என்று வேதம் கூறியுள்ளது. அவள் குமாரத்திகளைப் பெற்றெடுத்தாள், அவர்களும் “வேசிகளாயிருக்கிறார்கள்.” ஏன்? அதேவிதமான உபதேசத்தை, தேவனுடைய உபதேசத்திற்குப் பதிலாக மனிதனால் உண்டாக்கப்பட்ட உபதேசத்தையே அளிக்கிறாள். அந்தக் காரணத்தினால்தான் நாம் பாப்டிஸ்டுகளோடு ஸ்தாபனமாக்கப்பட்டிருக்கவில்லை. அந்தக் காரணத்தினால்தான் நாம் மெத்தோடிஸ்டுகளோடு ஸ்தாபனமாக்கப்பட்டிருக்கவில்லை.
124 இப்பொழுது ஏன் நாம் பெந்தேகோஸ்தேயினரோடும் ஸ்தாபனமாக்கப்பட்டிருக்கவில்லையே? இங்குதான் காரியமே உள்ளது. அது முற்றிலும் உண்மை. பெந்தேகோஸ்தேயினர்…அங்கே…தரித்திருந்திருந்தால்…லூத்தரன் சபையானது அது துவங்கின நிலையிலேயே தரித்திருதிருந்தால், அது பெந்தேகோஸ்தே சபையாயிருந்திருக்கும். ஆனால் லூத்தரன்கள் ஸ்தாபனமாக்கிக்கொண்டபோது, தேவன் வெஸ்லியை அழைத்து, மற்றொரு பெந்தேகோஸ்தேவை எழுப்பினார். வெஸ்லியும் ஸ்தாபனமுண்டாக்கிக் கொண்டபோது, அவர் பாப்டிஸ்டுகள் என்று அழைக்கப்பட்ட மற்றொன்றை எழுப்பினார். அவர்கள் ஸ்தாபனமுண்டாக்கிக்கொண்டபோது, கேம்பிளைட்ஸ் என்றழைக்கப்பட்ட மற்றொன்றை அவர் எழுப்பினார். அவர்களும் ஸ்தாபனமுண்டாக்கிக் கொண்டபோது, அவர் பெந்தேகோஸ்தே என்று அழைக்கப்பட்ட மற்றொன்றை எழுப்பினார். அவர்கள் ஸ்தாபனமாகும்போது, அவர் கடந்து முன்செல்கிறார். அப்படியே கவனித்திருந்து பாருங்கள்.
125 அது தேவனுடையத் தெய்வீக திட்டம் அல்ல. அந்த ஸ்தாபனங்கள் தேவனுடையத் திட்டத்தில் இல்லை. ஆகையால் நீங்கள் பாருங்கள், அந்தக் காரணத்தினால்தான் நாம் ஒரு ஸ்தாபனமாயிருக்கவில்லை.
126 இதை நினைவில் கொள்ளுங்கள். நான் துவக்கத்தில் கூறினது, இப்பொழுது நான் உங்களைப் புண்படுத்தியிருந்தால், நான் அவ்வாறு செய்ய வேண்டும் என்று கருதி அதைக் கூறவில்லை. இது சபைக்கானதாயுள்ளது. நீங்கள் இங்கே உட்கார்ந்து கொண்டிருந்தால், இதற்காகத்தான் நாங்கள் நிற்கிறோம் என்பதையும், நாங்கள் ஏன் ஒரு ஸ்தாபனம் அல்ல என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
127 இப்பொழுது, ஸ்தாபனம் போலியானதாயும், கள்ளப் போதகர்களால் துவங்கினதுமாய் உள்ளது. நான் கூறினது உங்களைப் புண்படுத்தும். நான் இதைப் புண்படுத்தும்படி கூற விரும்புகிறேன். அவர்கள் முற்றிலுமாக கள்ளப் போதகர்களாயிருக்கிறார்கள். அந்தக் காரியங்களை அறிந்துள்ள எந்த மனிதனும், வேதம் வித்தியாசமாக போதிப்பதை அறிந்தும், பாப்டிஸ்டுகளுக்காக, மெத்தோடிஸ்டுகளுக்காக, லூத்தரன்களுக்காக, அல்லது பெந்தேகோஸ்தேக்களுக்காக விட்டுக்கொடுத்து நிற்பானேயானால், அவன் ஒரு கள்ளத் தீர்க்கதரிசியாயிருக்கிறான்.அதில் ஒட்டிக்கொண்டிருக்கவே வேண்டாம். அது உண்மை. அதனால்தான் நான் ஒருத்துவக்காரரோடு சேரவில்லை. அதனால்தான் நான் அசெம்பளீஸ் என்ற ஸ்தாபனத்தாரோடு சேர வில்லை. அதனால் தான் நான் பாப்டிஸ்டுகளோடும், மெத்தோடிஸ்டுகளோடும் அல்லது பிரஸ்பிடேரியன்களோடும், சேரவில்லை, ஏனென்றால் அவர்கள் பொய்யானவர்கள். அவர்களுடைய ஜனங்கள் பொய்யர்கள் என்று நான் குறிப்பிட்டுக் கூறவில்லை. அவர்களுடைய வேதசாஸ்திரப் போதனையே தவறாயிருக்கிறது என்றே நான் குறிப்பிட்டுக் கூறுகிறேன், ஏனென்றால் அது வார்த்தையோடு ஒத்துப்போகவில்லை.
பவுல், “ஒரு…” கூறினான். அவன் இங்கு சென்று…நான் இந்தத் தண்ணீர் ஞானஸ்நானத்தைக் குறித்துப் பேசி முடிக்கும் முன்பு பவுல் என்னக் கூறினான் என்பதை நான் உங்களுக்கு காண்பிக்கட்டும்.
128 இயேசுவானவர் இந்த ஆணையை மத்தேயு 28:19-ல் பிறப்பித்த பத்து நாட்கள் கழித்து பேதுரு, “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்” என்றார்.
சுவிசேஷனாகிய பிலிப்பு சமாரியர்களுக்கு பிரசங்கிக்கச் சென்ற போது கொடுத்த ஞானஸ்நானம் அடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளது. அவன் அவர்கள் ஒவ்வொருவருக்கும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தான். பவுல்…பேதுரு அங்கு வந்து, இல்லை சரியாகக் கூறினால் பேதுருவும் யோவானும், அங்கு வந்து அவர்கள் மேல் கைகளை வைத்தபோது, அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டனர்.
அதன்பின்னர் அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். அதன்பின்னர் பேதுரு நேராக கொர்நேலியுவினுடைய வீட்டிற்குச் சென்றான். அப்பொழுது கொர்நேலியு…“இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தைக் கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.” அப்பொழுது பேதுரு, “நம்மைப் போலப் பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படிக் கட்டளையிட்டான்.”
129 இப்பொழுது, பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய், எபேசுவுக்கு வந்தான்; அப்பொழுது அவன் அங்கே சில பாப்டிஸ்டுகளைக் கண்டான். அவர்களுக்கு அங்கே ஒரு அப்போஸ்தலன், வேதாகம அப்போஸ்தலன் இருந்தான், அவனுடையப் பெயர் அப்பொல்லோ என்பதாகும். அவன் ஒரு நியாயசாஸ்திரியாயிருந்து, மனமாற்றமடைந்து, இயேசுவே கிறிஸ்து என்று வேதாகமத்தைக் கொண்டு ஜனங்களுக்கு அவன் நிரூபித்துக்கொண்டிருந்தான். அப்பொழுது அவன், “மேசியா இன்ன—இன்னக் காரியங்களைச் செய்ய வேண்டியவராயிருக்கிறார். இந்த மனிதன் மேசியாவாயிருந்தார்” என்றான்.
130 அப்பொழுது அவர்களிடத்தில் அங்கே திரளான ஜனக்கூட்டம் இருந்தது, அவர்கள் அங்கே, களிகூர்ந்து கொண்டு, சத்தமிட்டுக்கொண்டும், அதைக் குறித்த அந்த முக்கியமான நேரத்தில் மகிழ்ந்து கொண்டுமிருந்தனர். அந்த நேரத்தில் ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாளும் அங்கு சென்றபோது, அவர்களோடு சேர்ந்து ஐக்கியங்கொண்டிருந்தனர். அவர்கள் எந்த ஸ்தாபனத்தையும் உடையவர்களாயிருக்கவில்லை. அவர்கள் ஐக்கியத்தை மாத்திரமே உடையவர்களாயிருந்தனர். ஆகையால் அவர்கள் இந்த மனிதன் ஒரு மகத்தான மனிதன் என்பதையும், ஓ, அவன் சாதுரியவான் என்றும், நியாய சாஸ்திரி என்றும் கண்டனர். அவன் புத்தி சாதுர்யமுள்ளவனாயிருந்தான். ஆகையால் அவன்…அவர்கள், “இப்பொழுது நீர் எதை அறிந்துள்ளீரோ அதை மிக நன்றாகவே அறிந்து வைத்துள்ளீர். ஆனால் பவுல் என்னும் பெயர்கொண்ட ஒரு எளிய சகோதரன் எங்களிடத்தில் உள்ளார். அவர் வரும்போது, அவர் பெற்றிருந்த சில அனுபவங்களைக் குறித்துப் பேசுவார். அவர் எதைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார் என்பதை அவர் அறிந்துள்ளார். நீர் மாத்திரம் அமர்ந்து அவருக்கு செவிக்கொடுத்தால், அவர் இன்னும் அதிகத் தெளிவாகக் கர்த்தருடைய வழியைக் குறித்து உமக்குப் போதிப்பார். இப்பொழுது அவர் பேரில் வீணாக ஏதோ ஒரு காரியத்தைக் கூறி நிராகரிக்க முயற்சிக்க வேண்டாம், ஏனென்றால் அவர் அதை ஆதரிக்க மாட்டார். புரிகிறதா? ஆனால் நீர் சென்று அவருக்கு செவிக்கொடும்” என்றனர்.
131 அப்பொழுது பவுல் மேடான தேசங்களினூடாக அங்கே வந்தான். பவுல் ஒருமுறை அங்கிருந்தபோது, அவன் அவர்களை கவனித்துப் பார்த்தான்.
அப்பொழுது பவுல், “இது மிகவும் நல்லது தான். ஆனால் பாப்டிஸ்டுகளாகிய நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” என்று கேட்டான்.”
அதற்கு அவர்கள், “ஓ, நாங்கள் பெற்றிருக்கவில்லையே?” என்று பதிலளித்தனர்.
மேலும், பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லையே” என்றனர். பார்த்தீர்களா?
அதற்கு அவன், “ஏன் பெற்றுக்கொள்ளவில்லை?” என்று கேட்டான்.
மேலும் அவன், “அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?” என்று கேட்டான்.
அதற்கு அவர்களோ, “ஓ, நாங்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டுவிட்டோம். நாங்கள் ஞானஸ்நானம் பெற்றுவிட்டோம்” என்றனர்.
132 அப்பொழுது பவுல், “அப்படியானால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தது யார்? நீங்கள் எப்படி ஞானஸ்நானம் பண்ணப்பட்டீர்கள்?” என்று கேட்டான்.
வேதமோ, “எந்த” என்று கூறுகிறது. கிரேக்க மொழியிலோ அல்லது மூல பாஷையிலோ, “எப்படி” என்று கூறுகிறது. இதுவோ, “எந்த” என்றே கூறுகிறது. அதாவது, “நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?” என்று கூறப்பட்டுள்ளது. வேறுவிதமாகக் கூறினால், “நீங்கள் எப்படி ஞானஸ்நானம் பண்ணப்பட்டீர்கள்?” என்பதாகும்.
133 அதற்கு அவர்களோ, “இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்ற அதே நதியில், அதே மனிதனாகிய யோவானஸ்நானகனால் நாங்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம்” என்று கூறினர்.
அது நல்ல நேர்த்தியான ஞானஸ்நானம்தான், நீங்கள் அவ்வாறு கருதவில்லையா? அது சரியானது போன்றதுதான் காணப்படுகிறது, அது அவ்வாறு காணப்படவில்லையா? ஒரு மனிதன் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு தண்ணீருக்குள் நடந்துச் சென்று, இயேசுவோடு ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தால், அது சரியானதாய்த்தான் இருக்கும் என்பதுபோலத் தோன்றும், தேவன் பரிசுத்த ஆவியின் ரூபத்தில் இறங்கி வந்து இயேசுவுக்குள்ளாக சென்ற வரையில் தேவன் அதை அங்கீகரித்தார். அந்த ஞானஸ்நானத்திற்குப் பிறகு அவர், “இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்” என்றார். எனவே அந்த ஞானஸ்நானம் சரியாய் இருந்துவந்தது போன்ற எனக்குத் தோன்றுகிறது.
134 ஆனால், பவுல், “அது இனிமேல் கிரியை செய்யாது. இனிமேல் கிரியை செய்யாது” என்று கூறிவிட்டான்.
“அது ஏன் இனிமேல் கிரியை செய்யாது?” புரிகிறதா?
பவுல், “நீங்கள் மறுபடியும் ஞானஸ்நானம் பெற வேண்டும்” என்றான்.
அதற்கு அவர்கள், “இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்த, யோவானால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிற நாங்களா, மறுபடியும் ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும் என்று நீர் கூறுகிறீர்?” என்று கேட்டனர்.
அதற்கு, “ஆம் அப்படித்தான்” என்றான்.
அப்பொழுது, “நாங்கள் எப்படி ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும்?” என்று கேட்டனர்.
135 அதற்கு பவுல், “இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்” என்றான்.
பவுல் அவர்களை அழைத்துச் சென்று, அவர்கள் எல்லாருக்குமே ஞானஸ்நானம் கொடுத்தான். அப்போஸ்தலர் 19:5. “அவர்கள் இதைக் கேட்டபோது, அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மீண்டும் ஞானஸ்நானம் பெற்றார்கள். அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டார்கள்.”
136 பவுல் புருஷரையும், ஸ்திரீகளையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மீண்டும் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும்படி வருந்திக் கேட்டுக்கொண்டிருப்பானேயானால், நான் வேறொரு சுவிசேஷத்தை பிரசங்கித்தால், அப்பொழுது என்னுடைய ஆவி பவுலினிடத்திலிருந்த ஆவியைப் போன்றதல்ல. பவுல், “நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக்கொள்ளக்கடவன்”. என்று கூறியுள்ளான்.
137 இப்பொழுது கலாத்தியர் 1:8-ல், பவுல், “வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, ஒரு பிரகாசமான தூதனாயிருந்தாலும்” என்று கூறியுள்ளான். அவன் எதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறான்? ஒரு வெளிப்பாடு. கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! உங்களுடைய வெளிப்பாடு எவ்வளவு நல்லதாயிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. இந்தக் காலையில் நம்முடைய ஆராதனையின் துவக்கத்திலேயே ஊரீம் தும்மீம் என்பதைப் பற்றிப் பேசியது நினைவிருக்கிறதா? ஒருவன் ஒரு காரியத்தை வந்து கூறி வெளிப்படுத்தும்போது, அது வேதத்தோடு பரிபூரணமாயில்லையென்றால், அப்பொழுது அவன் ஒரு பொய்யனாயிருக்கிறான். அவன் ஒரு கள்ள தூதனாயிருக்கிறான். தன்னுடைய சொந்த செய்தியை எடுத்துக்கொண்டு புறப்பட்டு வருகிற மனிதன் ஒரு கள்ளத் தீர்க்கதரிசியாயிருக்கிறான். ஞானஸ்நானம் பண்ணப்படுவதற்கு ஒரே ஒரு வழி மாத்திரமே உண்டு, அது இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலேயாகும். நீங்கள் அந்தவிதமாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கவில்லையென்றால், ஒரு ஞானஸ்நானத் தொட்டி அங்கே காத்திருக்கிறது. அது உண்மை.
138 மற்றபடி எடுப்பது தவறானதாயிற்றே! எந்த நபராவது எப்போதாவது, “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்” நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள் என்ற ஒரு இடத்தை நான் கண்டறியட்டும். அவ்வாறு எடுத்ததாகப் புனித வேதவாக்கியங்களில் எங்கும் இல்லையே. அப்படியானால் அது என்ன? அது கத்தோலிக்க சபையினால் துவங்கப்பட்ட ஒரு கோட்பாடாய் உள்ளது. நம்மால் இதை ஆதரிக்க முடிகிறது. நாம் முழுவதுமே நிசாயா பிதாக்களினுடைய உபதேசங்களையேப் பெற்றுள்ளோம். நாம் அதைக் குறித்த சரித்திர புஸ்தகத்தை வைத்துள்ளோம்.நாம் ஹிஸ்லப் என்பவர் எழுதின இரு பாபிலோன்கள் என்ற புத்தகத்தை வைத்துள்ளோம். நாம் ஜோசிபஸ் எழுதின புத்தகத்தை வைத்துள்ளோம். நாம் எல்லாப் பூர்வகால சரித்திரங்களையும் வைத்துள்ளோம். ஜோசிபஸ் கர்த்தராகிய இயேசுவின் காலத்தில் எழுதினார். அதற்குப் பின்னரே ஹிஸ்லப் என்பவரின் இரு பாலோன்கள் என்ற சரித்திரப் புத்தகம் எழுதப்பட்டது. அதற்குப் பிறகு, அதாவது கத்தோலிக்க சபை உருவாகுவதற்கு முன்பு நிசாயா பிதாக்களுக்கு முன்னர் என்ற புத்தகம் எழுதப்பட்டது. அதன்பின்னரே கத்தோலிக்க சபையானது உள்ளே நுழைந்து, எல்லாவற்றையும் வெளியேத் தள்ளிவிட்டு, அவர்களே எல்லாவற்றையும் கைப்பற்றி, அஞ்ஞான ரோமாபுரியானது போப்பாண்டவரின் ரோமாபுரியாக்கப்பட்டது. அங்குதான் அவர்கள் தெளிக்கும்படியானத் தவறான தண்ணீர் ஞானஸ்நானத்தையும், கர்த்தராகிய இயேசுவின் நாமத்தை எடுத்துப்போட்டு, “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்” நாமத்தில் கொடுக்கப்படும் தவறான தண்ணீர் ஞானஸ்நானத்தையும் கொண்டு வந்தனர். இயேசு ஆவியின் ஏவுதலினால் பத்மூ தீவில் யோவானிடம், “நீ உயிருள்ளவனென்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்” என்று கூறினார். “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி” என்பது ஒரு மரிக்கிற நாமமாயுள்ளது.
139 சுவிட்சர்லாந்து, ஜெர்மனி மற்றும் பல இடங்களில் நான் இருந்தபோது, எனக்கு உண்டாயிருந்த ஒரு சிறு அனுபவத்தை நான் உங்களுக்குக் கூறட்டும்.
குறிசொல்பவர்கள் எப்படி கிரியை செய்கின்றனர்? பொல்லாத ஆவிகள் எப்படிப் பிரயாணஞ்செய்கின்றன? உங்களுடைய மேய்ப்பன் என்ற முறையில் நான் உங்களிடம் கூறப்போவதை நீங்கள் நம்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஏனென்றால் உங்களிடத்தில்தான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். பிசாசுகள், “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்” நாமத்தில் பயணஞ் செய்கின்றன. மந்திரவாதிகள் சிறகுகளை வெட்டி வைத்துக்கொண்டு, அவர்கள், “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தையே” ஒவ்வொரு மந்திரமாகக் கூறுகின்றனர். அவர்கள் அதை மூன்று உயரிய நாமங்கள் என்றழைக்கின்றனர். அதற்கு தாயாகக் கத்தோலிக்க சபைகள் விளங்குகின்றன. அவர்கள் இந்தச் சிறிய சிலைகளிடத்திற்குச் சென்று, அங்கே மண்டியிட்டு, கத்திரிக்கோலினால் ஒரு சிறகை வெட்டி வைத்துக்கொண்டு, முதுகு பக்கமாகத் திரும்பி, தங்களுடைய அயலகத்தாரின்மேல் மந்திரங்களை ஓதுகிறார்கள். அங்கே அவர்கள் மரிக்கும்படி எரிக்கப்படுகின்றனர், இன்னும் அதற்கான மற்ற எல்லாவற்றையும் செய்கின்றனர்.
140 சுவிட்சர்லாந்தில், நான் என்னுடைய கரங்களை இந்தவிதமாக ஒரு கம்பத்தில் வைத்துக்கொண்டு நின்றவாறு, உத்தமமான புருஷரும்,ஸ்திரீகளும் மரித்துப்போயிருந்த இடத்தைக் கண்டேன். வேசியான கத்தோலிக்க சபையானது, அவர்களுடைய நாவுகளை துண்டித்து, சூடேற்றப்பட்ட இரும்புக் கம்பியினால் அவர்கள் கண்களைப் பிடுங்கி எறிந்திருந்தது. அது மாத்திரமல்ல, உங்களுடைய ஆதி ஆங்கிலிக்கன் சபைகளும் கூட, உங்களுடைய பிராட்டெஸ்டென்டு சபைகளும் அதேக் காரியங்களைச் செய்தன. அவர்களும், “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி” என்ற அந்த வார்த்தைகளைக் கொண்டே மந்திரம் ஓதினர்.
141 உங்களுடைய சகோதரனும் மேய்ப்பனுமாகிய நான் தேவ கிருபையினால் இந்தக் காரியங்களில் பாதுகாக்கப்படும்படியான சிலாக்கியத்தைப் பெற்றிருந்ததற்காக நன்றியுள்ளவனாய் இருக்கிறேன். ஆனால் நான் பேசிக்கொண்டிருக்கிற இந்தக் காரியத்தைக் குறித்து நேரடியாக அறிந்துகொள்ளும் சிலாக்கியம் பெற்றிருந்தேன். ஒரு ஸ்திரீ இந்தச் சபைக்கு வந்து என்னை நிந்தித்து, பழித்து,” அவர் மரித்தோரின் ஆவிகளோடுத் தொடர்பு கொள்ளுதலினால் ஏமாற்றிக்கொண்டிருக்கின்றார்” என்று கூறினாள். பரலோகத்தில் உள்ள தேவன் இவை எல்லாவற்றையுங் குறித்து அறிந்திருக்கிறார். எனவே நான் எந்த மனிதனுடைய…ஏற்றுக்கொள்ள முடியாது…நான்…இல்லை…
142 அவர்கள் என்னிடத்தில் அது பாரீஸில் உள்ள பிக்காலீ என்ற இடத்தில், அப்பேர்ப்பட்ட துர்கீர்த்திப் பெற்ற இடத்தில் இந்த மந்திரவாதங்கள் நிகழ்கின்றன என்று கூறினபோது, நான் அதை எப்படி அறிந்துகொண்டேன்? நான் அதற்கு முன் ஒருபோதும் அங்கு சென்றதில்லையே. ஆனால் அது உண்மைதானா அல்லது இல்லையா என்பதைக் கண்டறிய நான் அந்த இடத்திற்குச் சென்றிருந்தேன். நான் என்னோடு இரண்டு இல்லை மூன்று ஊழியக்காரர்களையும் அழைத்துக்கொண்டு அந்த ஸ்திரீகளிடத்திற்குச் சென்று அந்தக் காரியங்களை வீதியிலேயே தோலுரித்துக் காட்டும்படிக்குச் சென்றேன். அது உண்மையே.
143 ரோமாபுரி ஏழு மலைகளின் மேல் உட்கார்ந்திருக்கிறாள் என்பதை நான் எப்படி அறிந்துகொண்டேன்? போப்பாண்டவர் (VICARIVS FILII DEVI) தேவ குமாரனுக்குப் பதிலாக வீற்றிருக்கிறார் என்று அர்த்தங்கொள்ளும் சொற்கள் இலத்தீன் மொழியில் எழுதப்பட்டிருந்ததை நான் எப்படி அறிந்துகொண்டேன்? அதற்காக வேறு யாரோ ஒருவர் கூறினதை ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்ததா? பரலோக, பூலோக மற்றும் பாதாளத்தின் பிரதிகுருவின் அதிகார ஆதிக்கத்திற்கான மூன்று கிரீடங்கள் போப்பாண்டவர் மீது சூடப்பட்டிருந்ததை நான் எப்படி அறிந்துகொண்டேன்? நான் அங்கு சென்று அதைக் காணாதிருந்தால், நான் எப்படி அதை அறிந்து கொண்டிருப்பேன்?
144 ஜீவனுள்ள தேவன் ஒருவர் உண்டு என்பதை நான் எப்படி அறிந்துகொண்டேன்? யாரோ ஒருவருடைய வேத சாஸ்திரத்தின்படியல்ல, நாத்திகர்கள் நமக்குக் கூறுவது போல, கடந்து சென்ற காலங்களினூடாக யாரோ ஒருவர் கூறின ஏதோ ஒரு உணர்ச்சிவசப்படும் அறிவாற்றல் கொண்ட கருத்துக்களினால் அல்ல. ஆனால் ஒருநாள் நான் அவரைக் கண்டு அவரிடத்தில் முகமுகமாய்ப் பேசினேன். அதுவே காரியங்களை வித்தியாசமாக்கினது. அதுவே முற்றிலும் உண்மை.
145 மரித்தோரின் ஆவிகளோடுத் தொடர்புகொள்ளும் பிசாசின் ஆவிகள் “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியினூடாகக்” கிரியைச் செய்கின்றன. அந்த மந்திரவாதிகள் கிரியை நடப்பித்துக் கொண்டிருந்த ஒரு கூட்டத்தில் நான் நின்றுகொண்டிருந்தேன். அவர்கள் உங்களுக்கு சவாலிடமாட்டார்கள் என்று நீங்கள் எண்ணிக்கொள்ள வேண்டாம். அவர்கள் அங்கே நின்றனர். அப்பொழுது அவர்கள் ஒரு மேஜையை ஆகாயத்தை நோக்கியவாறு மேலே வீசியெறிந்து, அதை மேலேயே சுற்றிச் சுற்றி மிதக்க வைத்தனர். ஒரு வீணையையும் தாகானவே இசைக்கச் செய்தனர். அப்பொழுது அங்கு நின்றுகொண்டிருந்த என்னை அவர்கள் அங்கிருந்து வெளியே அனுப்பிவிட வேண்டுமென்றிருந்தனர். அப்பொழுது நான், “நீங்கள் தவறாயிருக்கிறீர்கள்” என்றேன். அதற்கு அந்த ஆவி அவர்களிடத்தில் திரும்பவும் பேசி, அது தேவன் என்று வெளிப்படையாகக் கூறும்படிக்குச் சொல்ல அவர்களோ அது தேவன் என்று கூறினர். அப்பொழுது நான், “அது தவறாயுள்ளது. அது ஒரு பிசாசு” என்று கூறினேன்.
அதற்கு அவர்களோ, “இந்த மனிதன் ஒரு அவிசுவாசி” என்றனர்.
146 அப்பொழுது நான், “இந்தக் காரியத்தைக் குறித்து நான் அவிசுவாசியாகத்தான் இருக்கிறேன்” என்றேன், ஏனென்றால் அது என் கர்த்தருடையக் காரியமல்ல. இது மந்திரவாதமாயுள்ளது. இது பிசாசினுடையதாயிருக்கிறது.” என்றேன். எனவே நான், “இப்பொழுது இங்கே நான் ஞானஸ்நானம்பண்ணப்பட்டுள்ள வல்லமையுள்ள நாமத்தைக் கொண்டு அது பிசாசு என்பதை நான் இங்குக் கூற முயற்சிப்பேன்” என்றேன். எனவே நான், “வானாதி வானவரின் நாமத்தில்’ நீ எனக்கு உண்மையைக் கூறு” என்றேன். எனக்கு எந்தப் பதிலுமே கூறவில்லை. மீண்டும் நான், “பரிசுத்த சபையின்’ நாமத்தில் நீ எனக்கு உண்மையைக் கூறு” என்றேன். அவன் எனக்கு பதிலளிக்கவேயில்லை. மேலும் நான், “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில்’ எனக்கு உண்மையக் கூறிவிடு” என்றேன். அதற்கும் அவன் பதில் கூறவேயில்லை. ஆனால் நான், “இயேசு கிறிஸ்துவின்’ நாமத்தில் என்னிடத்தில் உண்மையச் சொல்” என்றேன்.
147 அப்பொழுது உடனே அவன், “ஆம், இது தவறுதான்” என்று பதில் கூறினான். அது உண்மை என்பதை பரலோகத்தின் தேவன் அறிந்திருக்கிறார். ஆம், ஐயா. ஓ!
பிதாவிலுள்ள விசுவாசம், குமாரனிலுள்ள விசுவாசம்,
பரிசுத்த ஆவியிலுள்ள விசுவாசம், இந்த மூன்றும் ஒன்று.
பிசாசுகள் நடுங்கும், பாவிகள் விழித்தெழுவர்
கர்த்தராகிய இயேசுவில் உள்ள விசுவாசம் எந்தக்காரியத்தையும் அசைக்கும்.
ஆம், ஐயா. அந்த நாமத்தைக் கொண்டு தரித்திருங்கள்.
148 “நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்.” அதுதான் உங்களுடைய சபை. அப்படித்தான் அது உள்ளது.
149 கவனியுங்கள், ஒரு பெண்மணி அமர்ந்து கொண்டிருக்கிறாள்…இந்தக் காலையில் இந்தச் சபையில் அருமையான, நல்ல தோற்றமுடைய, அழகான ஸ்திரீகள் அமர்ந்துள்ளனர். இங்கே வாலிப ஸ்திரீகளும், நடுத்தர வயதுடைய ஸ்திரீகளும், வயோதிக ஸ்திரீகளும் இருக்கின்றனர். அவர்கள் எல்லோருமே அருமையானவர்களாயிருக்கின்றனர். அவர்கள் யாரோ ஒருவருடைய மனைவியாயும், யாரோ ஒருவருடையக் குமாரத்தியாயும், யாரோ ஒருவருடையக் காதலியாயும் இருக்கின்றனர். அவ்விதமாக அவர்கள் ஒவ்வொருவரும் இருக்கின்றனர். ஆனால் ஒரே ஒரு திருமதி.பிரான்ஹாம் மாத்திரமே இங்கே அமர்ந்து கொண்டிருக்கிறாள். நீங்கள் ஒவ்வொருவரும் ஸ்திரீகளே. ஆனால் ஒரே ஒரு திருமதி.வில்லியம் பிரான்ஹாம் தான் இருக்கிறாள். அவள் ஒருத்தியே என்னோடு வீட்டிற்கு வருகிறவளாயிருக்கிறாள். அவள் ஒருத்தியே என்னுடையக் காதலியாயிருக்கிறாள். அவள் ஒருத்தியே என்னுடையப் பிள்ளைகளை வளர்க்கிறவளாயிருக்கிறாள்.
150 இன்றைக்கு உலகத்தில் அநேக அருமையான சபைகள் உள்ளன. ஆனால் ஒரு திருமதி.இயேசு மாத்திரமே அசலான, உண்மையான, மீண்டும் பிறந்த தேவனுடைய சிருஷ்டிகளை பிறப்பித்துக்கொண்டிருக்கிறாள். நான் என்னை பொருட்படுத்திக் கூறுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள், நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா? அவளுடையப் பெயர் மெத்தோடிஸ்டு அல்ல. அவளுடையப் பெயர் பாப்டிஸ்டு அல்ல. அவளுடையப் பெயர் இயேசு என்பதாய், திருமதி. இயேசு என்பதாய் உள்ளது. நிச்சயமாகவே, அவள் அவ்வாறே உள்ளாள். அவள் மெத்தோடிஸ்டு சபையின் அங்கத்தினர்களுக்காக ஜனங்களைப் பெற்றெடுத்துக் கொண்டிருக்கவில்லை. அவள் பாப்டிஸ்டு சபைக்காக அல்லது பிரஸ்பிடேரியன் அல்லது கத்தோலிக்க சபைக்காக பிறப்பிக்கிறதில்லை. அவர்கள் பிறந்து, கிறிஸ்து இயேசுவுக்குள் வேரூன்ற, நிலைப்பெற்றவளாகும்படிக்கே அவள் பிறப்பித்துக் கொண்டிருக்கிறாள். அந்தவிதமாகத்தான் அவள் இருக்கிறாள். அதுவே அவளுடையக் காரியமாயுள்ளது. நான் அவளோடிருப்பதற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவள் ஒரு காணக்கூடாத சபையாய் இருக்கிறாள். அவள் எந்த ஸ்தாபனத்தையும் ஏற்றுக் கொள்ளுகிறதில்லை. அவள் இந்த மகத்தான பெரிய புனைப்பெயர்கள் மற்றும் பெரிய கட்டிடங்கள் ஒன்றையுமே உடையவளாய் இருந்து செயல்படுகிறதில்லை. அவள் எங்கெல்லாம் சரீரத்தின் அங்கத்தினர்கள் ஒன்று சேருகின்றார்களோ அங்கே அவர்களைச் சந்திக்கிறாள். அவர்கள் ஆவியோடும் உண்மையோடு தொழுதுகொள்கிறார்கள். அவர்கள் உலகத்தோற்றத்துக்கு முன்பே முன்குறிக்கப்பட்டிருந்தனர்.
இன்னும் ஒரு வேத வசனத்தோடு நான் முடித்துவிடவுள்ளேன் என்று நான் உங்களுக்கு வாக்களிக்கிறேன். அதனுடைய எஞ்சியப் பாகத்தை இன்றிரவிற்கென்று நான் விட்டுவிடப் போகிறேன். லீயோ, அப்படியானால் இன்றிரவு உங்களால் அதைப் புரிந்து கொள்ள முடியும்.
151 நாம் ஒரு நிமிடம் எபேசியர் நிரூபத்திற்குச் செல்வோம். அப்படியே இந்த ஒரு வசனத்தை வாசித்துவிட்டு, பின்னர் நான் அந்த ஒன்றோடு உங்களை விட்டுவிடப் போகிறேன். இப்பொழுது இதைக் குறித்து வேதம் என்னக் கூறியுள்ளது என்பதை நாம் கண்டறிவோம். நான் இந்த மகத்தான ஆசிரியரான பவுல் கூறினதை…எடுத்துக் கூறப் போகிறேன். அவரைப் போன்று எவருமே ஒருபோதும் இருந்ததில்லை. அவர் புறஜாதி சபைக்கு அப்போஸ்தலனாயிருந்தார். சரி. எபேசியர் 1-ஐ எடுத்துக் கொள்ளுங்கள்.
152 இப்பொழுது இன்னும் ஒரு நிமிடத்தில் நாம் முடிக்கப் போகிறோம். என்னுடைய அருமையான நண்பனே, இதற்கு செவிக்கொடு. இந்தக் காலையில் நான் பிரசங்கித்துக் கொண்டிருக்கிற இதேவிதமான சபைக்கு பவுல் பிரசங்கித்துக் கொண்டிருப்பதைக் கவனியுங்கள்.
தேவனுடைய சித்தத்தினாலே இயேசு கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல், எபேசுவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற (பிரஸ்பிடேரியன் சபைக்கா? எந்த சபைக்கு?) பரிசுத்தவான்களுக்கு (பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்கு) எழுதுகிறதாவது:
இப்பொழுது, அவர்கள் உலகம் முழுவதும் சிதறடிக்கப்பட்டிருந்தனர் என்பது நினைவிருக்கட்டும். ஆனால் எபேசுவில் இருக்கின்ற இந்தக் குழுவினிடத்தில் அவன் பேசிக்கொண்டிருக்கிறான். இப்பொழுது அவன் உலகத்தாரிடத்தில் பேசிக்கொண்டிருக்கவில்லை. அவர் உள்ளூர் சபை அங்கத்தினர்களிடத்தில் பேசிக்கொண்டிருக்கவில்லை. அவன் இதை பரிசுத்தமாக்கப்பட்டவர்களிடத்தில் கற்பித்துக் கொண்டிருக்கிறான். நாம் பார்ப்போம்.
…கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற…
நாம் எப்படி கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக வருகிறோம்? “நாம் எல்லோரும் ஒரே ஆவியினால் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு,” விசுவாசமுள்ளவர்களாய் ஜீவிக்கிறோம். நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டீர்கள் என்பதை எப்படி அறிந்து கொள்ளுகிறீர்கள்? நாம் இன்றிரவு ஒருகால் அதைப் புரிந்துகொள்ளப் போகிறோம். பார்த்தீர்களா? சரி.
…கிறிஸ்து இயேசுவுக்குள்…
நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.
153 அது அதிகப்படியான சத்தமிடுதலைச் செய்கிறதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். அது ஒரு அதிகக் கூச்சலிடுதலைச் செய்கிறதில்லை. அவ்வாறு செய்வது சரிதான், அதற்கு விரோதமாக ஒன்றையும் கூறவில்லை. அது சரிதான். ஆனால் அது அதனைச் செய்கிறதில்லை. அது ஒரு கீழ்ப்படிதலான இருதயத்தோடு உன்னதங்களில் அமர்ந்து, ஆவிக்குரிய காரியங்களை விருந்தாகப் புசித்தலாயிருக்கிறது. ஆவியானவர் உணர்ச்சி வசப்படுதலின் பேரில் உங்களை விருந்துண்ணச் செய்கிறாரா? அதனோடு சேர்ந்ததல்ல. அது உணர்ச்சிவசப்படுதலைக் கொண்டுவருகிறது. புரிகிறதா? ஆனால் உங்களால்…முடிந்தால்…
154 கோதுமைக்கும், களைக்கும் மழைப் பெய்கிறதைக் குறித்தத் தரிசனம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். நினைவிருக்கட்டும். மழைத் தேவைப்படுகிறபோது, அங்கிருந்த களையும் தன் தலையை கீழே தொங்கவிட்டுக்கொண்டது. அதேபோல் கோதுமையும் தன்னுடைய தலையைத் தொங்கவிட்டுக்கொண்டது. மழைப் பொழிந்தபோது, அவையிரண்டுமே குதித்து சத்தமிட்டன. ஒரே மழை இரண்டின் மீது பெய்தது. “ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.” பாருங்கள்.
நமுடைய பிதாவாகிய தேவனாலும்…உங்களுக்கு கிருபையும்…உண்டாவதாக.
இப்பொழுது கவனியுங்கள். “தெரிந்துகொண்டபடியே…” இப்பொழுது 4-வது வசனம்.
…அவர்…நம்மைத் தெரிந்துகொண்டபடியே…
கடைசி எழுப்புதலிலா? [சபையார், “இல்லை” என்கின்றனர்.—ஆசீ.] ஹூ? [“இல்லை.”] நாம் ஒரு பாப்டிஸ்டு சபையின் அல்லது மெத்தோடிஸ்டு……அங்கத்தினரானபோதா? இல்லை. அவர்கள் அந்த கூட்டத்தில் இருந்ததற்கு முன்னமே, “தெரிந்து கொண்டார்.” ஆம்.
…உலகத்தோற்றத்துக்கும் முன்னமே…
அப்பொழுது அவர் நம்மைத் தெரிந்துகொண்டார். நாம் அவரைத் தெரிந்துகொள்ளவில்லை, இல்லை. அவர் நம்மைத் தெரிந்து கொண்டார். புரிகிறதா? அவர் உலகத்தோற்றத்திற்கு முன்பே, அப்பொழுதே நம்மைத் தெரிந்துகொண்டார்.
…நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும்…
155 நாம் எப்படி பரிசுத்தமாயிருந்தோம்? நாம் செய்த காரியத்தினூடாக அல்ல, ஆனால் அவர் நமக்காக செய்ததின் மூலமாகவே, ஏனென்றால் நம்மால் பரிசுத்தமாயிருக்க முடியாது. எப்படி உங்களால் ஒரு பன்றியை ஓர் ஆட்டுக் குட்டியாக மாற்ற முடியும்? சகோதரன் ராய், நீர் பன்றிகளையும், ஆட்டுக்குட்டிகளையும், இரண்டையுமே வளர்த்தீர். ஆனால் உம்மால் அவைகளை ஒன்றாகக் கலக்க முடியாது. ஒரு பன்றி…அது தன்னால் முடிந்த எல்லாவிதமான காரியத்தையும், அங்கே சுற்றிலும் காணப்படுகின்ற எல்லாவற்றையுமே புசிக்கும். அது ஒரு எரு குவியலுக்குள் சென்று வயிறு புடைக்கத் தின்றுவிட்டு வெளியே வரும். எனவே அப்படியிருந்தாலும் நீங்கள் அதைக் குறித்து மோசமாக உணருகிறதில்லை. அந்தப் பன்றி அவ்வாறு இருப்பது சரிதான் என்றே நீங்கள் எண்ணுகிறீர்கள். அதுவும் ஒரு நல்லப் பன்றியாக இருக்கிறது. அவ்வளவுதான். ஆனால் ஓர் ஆட்டுக் குட்டியை நீங்கள் அவ்வாறு சுற்றித் திரியக் காண்கிறதில்லை. ராய் அவர்களே ஆட்டுக்குட்டியை நீங்கள் அப்படிப்பட்ட ஆகாரம் புசிக்க அழைப்புவிடுத்திருக்க முடியாது. ஆட்டுக் குட்டியும் வராது. வரவும் முடியாது. காரியம் என்ன? காரணமென்னவெனில் அதுவோ ஒரு பன்றி. எனவே நீங்கள் அதனிடத்திற்குப் போய், நீ தவறாயிருக்கிறாய் என்று கூறிப் பாருங்கள். அப்பொழுது அதுவோ, “தேவனுக்கு ஸ்தோத்திரம். நான் ஒரு பன்றி, நீ உன்னுடைய இடத்திலேயே இருந்துகொள். நீ வேண்டுமானால் அங்கு போய் ஒரு பரிசுத்த உருளையாய் இருந்துகொள்” என்று கூறிவிடும். அங்குதான் காரியமே உள்ளது.
வேத வார்த்தையோ, “நீங்கள் உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூர்ந்தால், தேவனுடைய அன்பு உங்களிடத்தில் இல்லை” என்று கூறியுள்ளது.
156 இப்பொழுது நான் நில உரக் குவியலில் புசிப்பதை விட்டுவிட்டக் காரணத்தினால் அது என்னை ஒரு பன்றியிலிருந்து வித்தியாசமாக்கிவிடவில்லை. பாருங்கள், அது என்னை இனி ஒருபோது பன்றியாயிராதபடிக்கு செய்துவிடவில்லை. அதற்கு காரணம் அதுவல்ல. ஆனால் என்னுடைய சுபாவம் மாறிற்று. “ஓ அவர்கள் ஒரு கம்பி வேலியை சுற்றிப் போடுகிறார்கள் என்று நான் யூகிக்கிறேன். அவர்கள் தடைவேலியைப் போட்டாலும் என்னை இதைச் செய்யாதிருக்கும்படிக்குத் தடுக்க முடியுமா?” ஓ, முடியாதே, இதனை செய்யாமல் தடுக்க நீங்கள் எந்தத் தடுப்பு வேலியும் போட வேண்டாம். நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும். அவ்வளவுதான். அப்பொழுது நீங்கள் மாற்றமடைந்துவிடுகின்றீர்கள். அது உண்மையே.
157 ஆனால் உங்களால் அந்த ஆட்டுக் குட்டியின் ஆவியை எடுத்து அதை இந்தப் பன்றிக்குள் வைக்க முடியுமானால், அப்பொழுது ஆட்டுக் குட்டியும் பன்றி செய்த அதேக் காரியத்தையே செய்யும். பன்றிக்குள் ஆட்டுக் குட்டியின் ஆவியாயிருக்குமேயானால், அது ஆட்டுக் குட்டி செய்த காரியத்தையேச் செய்யும். அதேவிதமாகப் பன்றியின் ஆவியைப் பெற்ற ஆட்டுக் குட்டியோ பன்றி செய்த அதேக் காரியத்தையே திரும்பச் செய்யும்.
இப்பொழுது நீங்கள் பாருங்கள், பன்றிகளாகிய நீங்கள், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? பார்த்தீர்களா? அது முற்றிலும் உண்மை. அது சரியே. நீங்கள் வெளியே போய், உலகத்தின் காரியங்களில் அன்புகூர்ந்து, குட்டைக் கால் சட்டைகளை அணிந்து, இந்த எல்லாக் காரியங்களையும் செய்கிறீர்கள். போய் தொடர்ந்து செய்யுங்கள், அது நீங்கள் யாராயிருக்கிறீர்கள் என்பதையேக் காண்பிக்கிறது.
158 “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள். முட்பூண்டுகளில் அத்திப் பழங்களை பறீக்கிறீர்களா?” பாருங்கள்? இல்லையே. இல்லை. நீங்கள் அத்தி மரங்களிலிருந்து அத்திப் பழங்களையேப் பறிக்கின்றீர்கள். நீங்கள் ஆப்பிள் மரங்களிலிருந்து ஆப்பிள் பழங்களையேப் பறிக்கிறீர்கள். நீங்கள் முட்செடிகளிலிருந்து முட்களையேப் பெற்றுக்கொள்கிறீர்கள். அது உண்மை.
இப்பொழுது, மிக கவனமாக இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள்.
பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக,
தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்து
மூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்.
159 யார் அதைச் செய்தது? “நான் மது அருந்துவதை விட்டுவிட்டக் காரணத்தினாலா?” நான் புகைப்பிடிப்பதை விட்டுவிட்டக் காரணத்தினாலா?” இல்லை. அவர் அதைச் செய்தார். அவர் தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக உலகத் தோற்றத்துக்கு முன்னே என்னைத் தெரிந்துகொண்டார். நான் எந்தக் காரியத்தையுமே செய்திருக்கவில்லை. அதைக் குறித்த ஒரு காரியத்தையுமே செய்யவேயில்லை. அதனோடு செய்யும்படியாக சம்மந்தப்பட்ட ஒரு காரியத்தையும் பெற்றிருக்கவில்லை.
நான் துவக்கத்திலேயே ஒரு பன்றியாய் இருந்தேன். நான் ஒரு குடிகாரர்களின் குடும்பத்தில் ஒரு பாவியாய் பிறந்து, கள்ளக் கடத்தல் சாராயம் காய்ச்சும் ஒரு மதுபான பீப்பாய் உள்ள சூழலில் வெட்கக்கேடாய் வளர்க்கப்பட்டேன். அது உண்மையே. கள்ளக் கடத்தல் சாராயம் காய்ச்சுகிற கென்டக்கி ஊரைச் சார்ந்த நான் பெரியவனாகும்வரை ஒரு ஜோடு காலணியையே அணிந்ததில்லை. தலைமுடியோ என்னுடைய கழுத்து வரை வளர்ந்து தொங்கிக் கொண்டிருக்க, கள்ளக் கடத்தல் சாராயம் காய்ச்சும் ஒரு சிறு பீப்பாய் உள்ள அந்தச் சுற்றுச் சூழலில் அங்கே வளர்ந்து வந்தேன்.
அதே சமயத்தில் ஏழு வயதில் பரிசுத்த ஆவியானவர் என்னிடத்தில் வந்து, “அந்த மதுவின் ஒரு துளியையும் நீ தொடாதே. அங்குள்ள பெண்பிள்ளைகளோடு நீ தவறாக நடந்துகொள்ள வேண்டாம். நீ புகைப்பிடிக்கவோ அல்லது புகையிலையை வாயினால் மெல்லவோ வேண்டாம்” என்று கூறினார். ஓ, என்னே! அது என்னவாயிருந்தது? சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும், அவருடைய ஆடுகளை வழிநடத்தவும் அவர் என்னை அனுப்ப, உலத் தோற்றத்துக்கு முன்னமே அதைக் குறித்தப் பிதாவினுடைய சித்தமாயிருந்தது. தேவனுடைய மகத்தான நாமம் என்றென்றைக்குமாய் ஸ்தோத்தரிக்கப்படுவதாக. நான் மூழ்கிப் போனாலும் அல்லது மூழ்கி இறந்து போனாலும், புகழ்ப்பெற்றாலும், அல்லது புகழ்பெற்றவனாயிராவிட்டாலும் அவருடைய வேதாகமத்தைக்கொண்டே தரித்திருப்பேன். எவர் என்னை நேசித்தாலும் அல்லது நேசிக்காவிட்டாலும், நான் அவருக்குப் பிரியமாகவே நடந்துகொள்வேன். அவரைப் பிரியப்படுத்துகிறக் காரியத்தையே நான் செய்ய விரும்புகிறேன்.
160 பாப்டிஸ்டுகள் என்னைப் புறக்கணித்தாலும், மெத்தோடிஸ்டுகள் என்னைப் புறக்கணித்தாலும் நான் அவருக்குப் பிரியமானதையேச் செய்வேன். பெந்தேகோஸ்துக்கள், “பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டதற்கான ஆரம்ப அடையாளமே அந்நிய பாஷை பேசுதல்” என்கின்றனர். அந்தக் காரணத்தினால்தான் நாம் பெந்தேகோஸ்தேக்கள் அல்ல. ஒரு தொழுவத்தில் வாழ்வது உங்களை ஒரு பன்றியாக்கிவிடும் என்பதை நாம் நம்பாதது போலவே நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட காரணத்தால் அந்நிய பாஷை பேசுகிறீர்கள் என்பதை நாங்கள் நம்புகிறதில்லை. இல்லை, ஐயா. ஒரு ராஜாவினுடைய அரண்மனையில் வாழ்வது உங்களை ஒரு ராஜாவாக்கிவிடும் என்று நாங்கள் நம்புகிறதில்லை. அது அவ்வாறு செய்கிறதில்லையே! நீங்கள் ஒரு பணிவிடைக்காரனாய் இருக்கக் கூடும். புரிகிறதா? நீங்கள் வேறெந்த ஒன்றாகவே இருக்கக் கூடும். இல்லை, ஐயா.
161 நீங்கள் அனுபவத்தின் முலமாகவே பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்கிறீர்களேயன்றி, வேத வாக்கியங்களைக் குறித்த அறிவாற்றல் கொண்ட கட்டுக் கதைக் கருத்தினால் அல்ல, ஆனால் நீங்கள் அனுபவத்தின் மூலமாக மாத்திரமே அதை அறிந்து கொள்கிறீர்கள். இப்பொழுது அது பரிசுத்த ஆவிதானா என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமானால், அதைப் பின்தொடரும் உங்களுடைய ஜீவியத் தோரணைகள் எப்படியுள்ளது என்பதைக் கவனித்துப் பாருங்கள். அப்பொழுது எந்தவிதமான ஒரு ஆவி உங்களுக்குள்ளாக வந்துள்ளது என்பதை அது கூறிவிடும்.
162 நீங்கள் அந்நிய பாஷையில் பேசலாம், நீங்கள் அந்நிய பாஷையில் பேசாமலுமிருக்கலாம். ஆனால் அதுவே பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளதற்கு அடையாளம் என்ற அப்படிப்பட்ட ஒரு பயங்கரமான காரியத்தை ஏன் பெந்தேகோஸ்தேயினர் செய்தனர்? அதைப் புரிந்துகொள்ளுங்கள். ஏன் பெந்தேகோஸ்தேயினர் அதைச் செய்தனர்? ஏன்? காரணம், தேவன் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் வரங்களைத் திரும்ப அளிக்கத் துவங்குகையில், யாரோ ஒருவர் அந்நிய பாஷைகள் பேசத்துவங்கினார். எல்லா வரங்களையும் குறித்த பவுலின் போதனையின்படி அந்நிய பாஷைகளில் பேசுதலே மிகச் சிறிய வரமாயுள்ளது. “எல்லா வரங்களிலும் மிகச் சிறிய வரம் அந்நிய பாஷைகளில் பேசுதலாயுள்ளது.” அவர்கள் அந்நிய பாஷையில் பேசத்துவங்கினவுடனே, அவர்கள் எல்லோரும் உணர்ச்சிவசப்பட்டு ஒரு ஸ்தாபனம் உண்டாக்கி, அதை பொது ஆலோசனைக் குழு என்று அழைத்தனர். அது அசெம்பளீஸ் ஆஃப் காட் என்ற ஸ்தாபனமாய் உள்ளது.
163 இப்பொழுது நான் அவர்களுடைய மிகச் சிறந்த மனிதர்களிடத்திலும், அவர்களுடைய மிகச் சிறந்த வேதபண்டிதர்கள் சிலரிடத்திலும் பேசியிருக்கிறேன். அவர்கள், “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, நீர் கூறுவது சரி. ஆனால் நாங்கள் இப்பொழுது என்ன செய்ய முடியும்? நாங்கள் அதற்கு விரோதமாக எழும்பினால், நாங்கள் வெளியே உதைத்துத் தள்ளப்படுவோம். எங்களைக் குறித்து எங்களுடைய சபை என்ன நினைக்கும்? நாங்கள் பல வருடங்களாக அவைகளை கற்றிக்கும்போது, ‘அந்நிய பாஷைகளில் பேசுதலே பரிசுத்த ஆவியைப் பெற்றதற்கு அத்தாட்சியாயுள்ளது’ என்று நாங்கள் பல வருடங்களாகக் கற்றிருக்கும்போது, இப்பொழுது நாங்கள் அதை மாற்றிக்கொண்டால் என்னவாகும்?” என்று கூறுகிறார்கள். அது ஸ்தாபனத்தின் சாபமாயுள்ளது.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! நமக்கு எந்த ஸ்தாபனமும் இல்லை. அப்படியே ஆவியானவர் வழிநடத்துகிற விதமாகவே, நாம் அதை ஏற்றுக்கொள்கிறோம்.
பரிசுத்த ஆவியின் அபிஷேகம் ஒரு தனிப்பட்ட அனுபவமாயிருக்கிறது.
164 நான் ஜனங்கள் அந்நிய பாஷைகளில் பேசுகிறதைக் கண்டிருக்கிறேன். நான் சூனியக்காரிகளையும், சூனியக்காரர்களையும் கண்டிருக்கிறேன். பில்லி சூனியம் மற்றும் பிசாசுகளின் காரியத்தில் ஈடுபாடுகொண்டிருந்த எந்த மிஷனெரிமாரும் அந்தக் காரியத்தைக் குறித்து அறிவர். அவர்கள் நின்று அந்நிய பாஷைகளில் பேசுவதையும், தங்களுடையத் தலைக்குப் பின்னால் புழுதியைத் தூவி எறிந்துவிட்டு, ஓர் ஈட்டியினால் தங்களைக் குத்தி வெட்டிக்கொண்டு, அந்நிய பாஷைகளில் பேசி, அதை வியாக்கியானிப்பதையும் நான் கண்டிருக்கிறேன். அது பரிசுத்த ஆவி என்று நீங்கள் கூறுகிறீர்களா? நிச்சயமாக, அது பரிசுத்த ஆவியல்ல, அது ஒரு பிசாசாயிருக்கிறது.
இயேசு ஒருபோதும், “அவர்களுடைய பாஷைகள் மூலம் நீங்கள் அவர்களை அறிவீர்கள்” என்று கூறவேயில்லை, ஆனால், “அவர்களுடைய கனிகளினால் அவர்களை அறிவீர்கள்” என்றேக் கூறினார். எபேசியர் 5:1-ல், “ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” என்று கூறப்பட்டுள்ளது. அது சரிதானே? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்—ஆசி.] அதுதான் உங்கள் காரியம்.
165 இப்பொழுது நீங்கள் ஒரு மெத்தோடிஸ்டாயிருந்தால், அந்தவிதமான ஆவியின் கனிகள் உங்களைப் பின்தொடர்ந்தால், அப்பொழுது நீங்கள் உடனடியாக கோபப்படுகின்றவராய், ஒரு விதமான வம்புச் சண்டையிடுகிறவராயிருக்கமாட்டீர்கள். நீங்கள் பொறுமையைப் பெற்றிருந்தால், நீங்கள் அன்பைப் பெற்றிருந்தால், நீங்கள் ஒவ்வொருவரிடத்திலும் அன்பாதரவுக் காட்டுகிறவராய் இருப்பீர்கள். உங்களுடைய முதல் அன்பு கிறிஸ்துவின்மேல் இருந்தால், உங்களுடைய இரண்டாம் அன்பு உங்களைப் பின்பற்றி வருகிற மனிதன் மேல் இருந்தால், நீங்கள் உங்களை மூன்றாம் ஸ்தானத்தில் வைத்துக்கொண்டு, இவ்விதமாக நீங்கள் இருந்தால், நீங்கள் அவ்வாறு முன்னோக்கிச் சென்றுகொண்டிருந்து நீடிய பொறுமையை உடையவராய், நற்குணம், பொறுமை, விசுவாசம் உடையவராயிருந்து, “என்னே,” “கர்த்தருடைய ஆவி என்மேல் உள்ளது என்றும், தெய்வீக சுகமளித்தல் உண்டு என்றும், பரிசுத்த ஆவியானவர் இன்றைக்கும் மாறாதவராய் இருக்கிறார்” என்று நீங்கள் கூறுவீர்களேயானால் நலமாயிருக்கும்.
166 இப்பொழுது நீங்கள், “ஒரு நிமிடம் பொறுங்கள். அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன என்று சர்ச் ஆஃப் காட் என்ற ஸ்தாபன சபையில் நான் கறிபிக்கப்பட்டிருக்கிறேன்” என்று கூறலாம். நீங்கள் ஒரு பிசாசு பிடித்தவராய் இருக்கிறீர்கள். அது உண்மை.
நீங்கள், “நல்லது, நாம் ஞானஸ்நானம்பண்ணப்பட்டிருக்க வேண்டும். வேதாகமத்தில், ‘பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்’ நாமத்தில் ஞானஸ்நானம்பண்ணப்படுதல் என்ற அப்படிப்பட்டக் காரியமே கிடையாது. நான் அதை இப்பொழுது புரிந்துகொள்கிறேன். அதுவோ வேதாகமத்தில் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் என்றே உள்ளது. அது கர்த்தராகிய இயேசுவின் நாமம் என்றே எங்கும் உள்ளது” என்று கூற வேண்டும்.
167 அப்பொழுது, “ஒரு நிமிடம் பொறும், நாங்கள் உம்மை அசெம்பளீஸ் ஸ்தாபனத்திலிருந்து உதைத்து வெளியே தள்ளிவிடுவோம்” என்று அவர்கள் கூறும்போது, நீங்கள் அதற்கு சடுதியாகத் தலையைத் தாழ்த்துவீர்களேயானால், நீங்கள் உங்களுக்குள்ளாக ஒரு தவறான ஆவியைப் பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு தவறான போதகத்திற்கு அல்லது ஒரு கள்ளத் தீர்க்கதரிசிக்கு செவிகொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
168 இப்பொழுது எங்கே அவர்கள், “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில்” ஞானஸ்நானம் பண்ணப்பட்டனர் என்ற ஒரு இடத்தை நீங்களே கண்டறியுங்கள் பார்க்கலாம். நான் அதை உங்களிடத்திலேயே விட்டுவிட்டேன். ஆனால் ஒவ்வொரு இடத்திலும் அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டனர் என்பதை நான் உங்களுக்குக் காண்பிப்பேன். அப்படியானால் இப்பொழுது எது சரி? அசெம்பளீஸ் என்ற ஸ்தாபனமா அல்லது வேதமா?
169 நீங்களோ, “நல்லது, நான் தெளிக்கப்பட்டிருக்கிறேன். தேவனுக்கு ஸ்தோத்திரம், அது எனக்குப் போதிய நன்மையாயுள்ளது. நீங்கள் போதியளவு கல்வியறிவைப் பெற்றிருக்க வேண்டியதில்லை. அவர்களுக்குத் தெளியுங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். தண்ணீரை ஊற்றுவதோ அல்லது தண்ணீரில் மூழ்குவதோ என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது?” என்று கூறலாம்.
அது எப்படிக் காணப்பட்டாலும் நான் கவலைப்படுகிறதில்லை. வேதமோ ஞானஸ்நானம்பண்ணப்பட வேண்டும் என்று உரைத்துள்ளது. ஞானஸ்நானம் என்பதன் பொருள் “மூழ்க்கப்படுதல்” என்பதாகும்.
நீங்களோ, “அது என்ன வித்தியாசத்தை உண்டு பண்ணுகிறது?” என்று கேட்கலாம்.
170 அப்படியானால் தேவன் மோசேயினிடத்தில், “உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப் போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி” என்று கூறினபோது, மோசே, “அது அதிகச் சிரமமாய் உள்ளது. எனவே நான் என்னுடைய தொப்பியை மாத்திரமே கழற்றிவிடுகிறேன், ஏனென்றால் என் பாதரட்சையின் வாரை அவிழ்க்க வேண்டியதாயுள்ளதே” என்று கூறியிருந்தால், அது அவ்வளவு நன்மையாதனாயிருந்திருக்குமா? இல்லை ஐயா, அவன் தன்னுடையப் பாதரட்சைகளைக் கழற்றிப் போடாதிருந்தால், தேவன் அவனிடத்தில் ஒருபோதும் பேசியிருந்திருக்கமாட்டார். [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை நான்கு முறைத் தட்டினார்—ஆசி.]
சபையானது கிறிஸ்துவானவர் அமைத்துள்ள ஒழுங்குமுறைகளுக்கும், மூலக்கோட்பாடுகளுக்கும் திரும்பி வரும் வரையில் தேவன் ஒருபோது அதனிடத்தில் பேசமாட்டார். சபையானது ஏதோ ஒரு உணர்ச்சி வசப்படுதலினால் அல்லது இந்த வழியாக, அந்த வழியாக இழுக்கிற ஏதோ ஒரு ஸ்தாபனத்தினால் ஸ்தாபிக்கப்பட்டிருக்கவில்லை. அவர்கள் அற்புதங்களில் விசுவாசங்கொள்ளும்படிக்கு, அடையாளங்களில் விசுவாசங்கொள்ளும்படிக்கு, பரிசுத்த ஆவியில் விசுவாசங்கொள்ளும்படிக்கு, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணும்படிக்கு, இந்த எல்லாக் காரியங்களுக்கும் திரும்பி வர வேண்டியதாயுள்ளது. அவர்கள் அதற்குத் திரும்பி வர வேண்டும். இல்லையென்றால் தேவன் அவர்களிடத்தில் பேசமாட்டார். அது முற்றிலும் உண்மை. அங்குதான் சபையானது திரும்பி வரவேண்டியதாயுள்ளது.
171 அந்தக் காரணத்தால்தான் நாம் ஸ்தாபனங்களாய் இருக்கவில்லை. சரியாக அந்தக் காரணத்தினால்தான் நாம் ஸ்தாபனத்தைச் சேர்ந்திருக்கவில்லை.
நாம் வேதத்தை விசுவாசிக்கிறோம். அப்படியானால் நமக்குத் தெரியாத ஏராளமான காரியங்கள் அதில் உள்ளன. அதில் நாம் அறியாதவை நிறைய உள்ளன. ஆனால், “நாமோ திறந்த இருதயத்தோடு நின்று, கர்த்தராகிய இயேசுவே, அதை வெளிப்படுத்தும்” என்று கூறுகிறோம்.
நாம் ஒளியில் நடப்போம், அது ஒரு அழகான ஒளியாயுள்ளது,
இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயிருக்கின்றஇடத்திலிருந்தே வருகின்றன;
எங்களைச் சுற்றி இரவும் பகலும் பிரகாசியும்,
இயேசுவே, உலகத்தின் ஒளி.
மெத்தோடிஸ்டு அல்ல, பாப்டிஸ்டு அல்ல, பிரஸ்பிடேரியன் அல்ல; ஆனால் இயேசுவே, உலகத்தின் ஒளி.
இயேசுவே, உலகத்தின் ஒளி என்று
ஒளியின் பரிசுத்தவான்களாகிய நீங்கள் எல்லோரும் பிரகடனம் செய்யுங்கள்;
அப்பொழுது பரலோக மணிகள் ஒலிக்கும்,
இயேசுவே, உலகத்தின் ஒளி.
இப்பொழுது ஆராதனையின் ஒழுங்கு முறையில் உள்ள ஒவ்வொருவரும் பாடுபடுவோம்.
நாம் ஒளியில் நடப்போம், அழகான…(அப்படியே அதை ஒரு நிமிடம் பாடுங்கள், பாருங்கள்.)
இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயிருக்கின்ற இடத்திலிருந்து வருகின்றன;
இரவும் பகலும் எங்களைச் சுற்றிப் பிரகாசியும்,
இயேசுவே, உலகத்தின் ஒளி.
172 சரியாகக் கூறினால், அதைக் குறித்த எந்த ஸ்தாபனத்தினுடையக் கருத்தினையும் ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக இயேசுவையும் அவருடைய வார்த்தையையும் நீங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டீர்களா? எத்தனைபேர் இயேசுவையும் அவருடைய வார்த்தையையும் ஏற்றுக்கொள்வீர்கள்? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்—ஆசி.]
இப்பொழுது தேவன் வேதத்தில் எங்காவது ஒரு இடத்தில் ஒரு ஸ்தாபனத்தை நியமித்திருந்தாரா என்று கண்டறியுங்கள் பார்க்கலாம். வேதவாக்கியங்களில் எங்காவது ஒரு இடத்தில் எப்போதாவது ஒரு பெண் பிரசங்கியாரை நியமனஞ் செய்திருந்தாரா என்பதைக் கண்டறியுங்கள். எந்த ஒரு நபராவது எப்போதாவது தெளிக்கப்பட்டார் அல்லது ஊற்றப்பட்டார் என்ற இடத்தையாவது கண்டறியுங்கள். எந்த நபராவது எப்போதாவது இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டதைத் தவிர வேறு எந்த முறையிலாவது, அதாவது “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில்” ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறார்களா என்று ஒரு இடத்திலாவது கண்டறியுங்கள். எங்காவது ஒரு நபர் வேதத்தில் எப்போதாவது “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்” நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறார்களா என்று கண்டறியுங்கள். அப்படியிருந்தால் வந்து எனக்குக் காண்பியுங்கள். அங்கே ஒவ்வொரு நபரும் இயேசுவின் நாமத்தில்தான் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தனர்.
173 இப்பொழுது இதைப் பார்க்கிலும் இன்னும் ஆழமான காரியங்களுக்குள்ளாகப் போகப் போகிறோம். இப்பொழுது நாம், “முதல் அத்தாட்சி” போன்றவற்றிற்குள்ளாகச் சென்று, அது எங்கு உள்ளது என்பதைக் காணப்போகிறோம்.
இப்பொழுது அவர்கள் அதற்கு முரணாகப் போதிப்பார்களேயானால், அப்பொழுது அவர்கள் வேதத்தில் இல்லாத காரியங்களையேப் போதித்துக்கொண்டிருக்கிறார்கள்.
174 வேதாகமத்தில் எங்காவது எப்போதாவது ஒரு இடத்தில் ஒரு ஸ்தாபனம் இருந்ததா என்பதைக் காண்பிக்கும்படிக்கே நான் உங்களை கேட்டுக்கொண்டிருக்கிறேன் என்பது நினைவிருக்கட்டும். அப்படியிருந்தால் எனக்கு ஒன்றைக் காண்பியுங்கள். அப்படியானால் யாரோ ஒருவர் தவறாயிருக்கிறார். நான் இங்கே ஒன்று இருக்கலாம் அல்லது ஒருகால் இங்கே ஒன்று இருக்கலாம், மற்ற ஒன்று இல்லாதிருந்ததா என்று கேட்டுக்கொண்டிருக்கவில்லை. நான் அவ்வாறு இல்லையென்பதை உங்களுக்கு காண்பித்துக் கொண்டிருக்கிறேன். கடைசி அப்போஸ்தலனின் மரணத்திற்குப் பிறகு, முந்நூறு ஆண்டுகள் கழித்தே ஸ்தாபனம் உண்டானதேயன்றி, அதற்கு முன்பு எங்காவது எப்போதாவது ஒரு இடத்தில் ஒரு ஸ்தாபனம் இருந்தது என்பதை எனக்குக் காண்பியுங்கள். கத்தோலிக்க சபை துவங்கின ஸ்தாபனத்திற்குப் புறம்பாக வேறொரு ஸ்தாபனம் எங்காவது இருந்திருந்தால், அதை எனக்குக் காண்பியுங்கள். வேதம் ஸ்தாபனங்களை இகழ்ந்துரைக்கவில்லை என்ற ஒரு இடத்தை எனக்குக் காண்பியுங்கள். அப்படியானால் நீங்கள் ஏன் ஒரு ஸ்தாபனமாயிருக்கிறீர்கள்?
175 ஒரு இடத்தில், இப்பொழுது எந்த நபராவது தங்களுடையப் பாவ மன்னிப்புக்கென்று ஒரு இடத்தில், ஏதாவது ஒரு இடத்தில் தெளிக்கப்பட்டு ஞானஸ்நானம் பெற்றார்கள் என்பதை எனக்குக் காண்பியுங்கள். நான் இங்கு ஒன்று, அங்கு ஒன்று உள்ளது என்று பொருட்படுத்திக் கூறவில்லை. இப்பொழுது முழு வேதாகமத்திலிருந்தும் ஒரு இடத்தை எனக்குக் காண்பியுங்கள். முழு வேதாகமத்திலிருந்தும் எந்த ஒரு இடத்திலாவது எந்த நபராவது தன்னுடையப் பாவமன்னிப்புக்கென்று ஊற்றப்பட்டு ஞானஸ்நானம் பெற்றார்களா என்று எனக்குக் காண்பியுங்கள். எந்த ஒரு நபராவது பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றார்கள் என்ற ஒரு இடத்தையாவது வேதத்திலிருந்து எனக்குக் காண்பியுங்கள். “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்” நாமத்தில் எந்த ஒரு நபராவது ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள் என்ற ஒரு இடத்தை, ஒரு நபரை காண்பியுங்கள் பார்க்கலாம்.
தேவன் சபையில் எப்போதாவது, எங்காவது ஒரு பெண் பிரசங்கியாரை நியமித்திருந்தார் என்றோ அல்லது பெண் பிரசங்கியார் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் என்றோ உள்ள ஒரு இடத்தை எனக்குக் காண்பியுங்கள். அது எங்கு உள்ளது?
அது ஒரு பெரிய சவாலாயுள்ளது. ஆனால் நான் உங்களுடையக் கேள்வியைக் கண்டறிய விரும்புகிறேன், இப்பொழுது இந்த பிரசங்கபீடத்தில் இருக்கும்போதே, இந்தக் காரியங்களில் ஒன்றாவது எங்காவது உள்ளது என்பதை இன்றிரவு எனக்குக் காண்பித்தால், அப்பொழுது நான் மன்னிப்புக் கோருவேன். அப்படியில்லாதிருந்தால், நீங்கள் இந்தக் கோரிக்கைகளுக்கு இன்னமும் பதில் கூற முடியவில்லை? அப்படியானால் எங்களில் ஒருவராயிருக்க வாருங்கள். அப்படியானால் நீங்கள் எப்படியும் மறைமுகமாக எங்களில் ஒருவராகவே இருக்கிறீர்கள்.
176 உங்களுடையப் பெயர் ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்தில் இருந்தால், நீங்கள் ஒளியில் நடப்பீர்கள், நீங்கள் அந்த ஒளியைக் காண்பீர்கள். தேவன் அதை வெளிப்படுத்துவார். அப்பொழுது நீங்கள் அதில் நடப்பீர்கள். அது முற்றிலும் உண்மை. புரிகிறதா?
177 இப்பொழுது அதைக் குறித்து என்ன? நான் உங்களை ஒரு சபைக்குத் திரும்பவும் அழைத்துக்கொண்டுபோகவில்லை. நான் உங்களைத் திரும்பவும் வேதாகமத்திற்கே அழைத்துக்கொண்டு போகிறேன். இப்பொழுது பவுல் என்னக் கூறினான்? பவுல் என்னக் கூறினான்? “நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்” என்றே கூறியுள்ளான்.
178 எனவே, “தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும்” தேவன் கூறியுள்ளார். ஆகையால் எந்த சபை என்னக் கூறினாலும், பெந்தேகோஸ்தேயினர், பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன் போன்றவர் என்ன கூறினாலும் நான் கவலைப்படுகிறதில்லை. தேவனுடைய வார்த்தையே சத்தியமாயிருக்கிறது. அப்படியானால் அவர்கள் ஏன் இதைத் துவங்கினர்? ஸ்தாபனங்களின் காரணமாகவே ஆரம்பித்தனர்.
179 பெந்தேகோஸ்தே அசெம்பளீஸ் ஆஃப் காட் என்ற ஸ்தாபனத்தினர் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டதற்கான முதல் அத்தாட்சி அந்நிய பாஷை பேசுதல் என்ற அந்தக் கொள்கையை மாத்திரம் துவங்காதிருந்தால், அவர்களுடைய மகத்தான போதகர்கள் இருதயத்தின் ஆழத்திலிருந்து எந்தக் காரியத்திற்கும் இன்றைக்கு செவிக்கொடுப்பார்கள். ஆனால் அது தவறு என்பதை அவர்கள் அறிவார்கள். அது நிலைத்து நிற்காது. நிச்சயமாகவே நிலைத்திருக்காது. அந்நிய பாஷைகள் பேசுவதன் மூலம் நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்கிறதில்லை என்று தேவனுடைய வேதாகமத்தின் மூலம் என்னால் உங்களுக்கு நிரூபிக்க முடியும். அது அவ்வாறு அங்கே வேதாகமத்தில் இல்லை. ஓ, நீங்கள் அவ்வாறு பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வதாக நினைத்துக்கொள்கிறீர்கள். ஆம், நிச்சயமாகவே. அது கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வஞ்சிக்கும் அளவிற்கு மிகவும் நெருக்கமாய் இருக்கும் என்று எழுதப்பட்டுள்ளது. புரிகிறதா?
“அவர் இதை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு இதை வெளிப்படுத்துகிறார்.” இது ஒரு ஆவிக்குரிய வெளிப்பாடாய் உள்ளது. அந்த வெளிப்பாடு வெளிப்படும்போது நீங்கள் கவனித்துப் பாருங்கள், அது தெளிவுண்டாக்குவதைக் கவனிக்கலாம். பாருங்கள். அங்குதான் காரியம். புரிகிறதா? நண்பனே, நீ கவனிக்க வேண்டிய காரியம் அங்கு உள்ளது என்பதைப் புரிந்துகொள்.
180 பரிசுத்த ஆவியானவர் நம்முடைய போதகராயிருப்பதற்காக நாம் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம். அவர் ஏதோ ஒரு சிறு கட்டுக்கதை கருத்தினை இங்கே கொண்டு வந்து, “ஓ, அல்லேலூயா! இதோ அது சரியாக இங்கே எழுதியிருந்தது. அல்லேலூயா!” என்று கூறிவிட்டு சென்றுவிடுகிறதில்லை. பரிசுத்த ஆவியானவர் உங்களைத் திரும்பவும் வேதவாக்கியத்திற்கு கொண்டு சென்று, வேதவாக்கியத்தின் மூலமாகவே உங்களை சரியான ஸ்தானத்திற்கு கொண்டு வருகிறார். புரிகிறதா? அப்பொழுதுதான் நீங்கள் சத்தியத்தைப் பெற்றுக்கொள்ளுகிறீர்கள். அது முற்றிலும் உண்மை. “கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமுமாயிருக்கும்.” அந்தவிதமாகவே அதைச் செய்வதாக வேதம் உரைத்துள்ளது.
181 நீங்களோ, “நீர் ஸ்தாபனத்தைக் கண்டிக்கிறீரா?” என்று கேட்கலாம். இல்லை ஐயா. “நீர் அந்நிய பாஷையில் பேசுவதைக் கண்டிருக்கிறீரா?” என்று கேட்கலாம். இல்லை ஐயா. “நீர் ‘பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில்’ ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிற இந்த ஜனங்களை கண்டிக்கிறீரா?” என்று கேட்கலாம். இல்லை ஐயா. இல்லை ஐயா. ஆனால் அவர்கள் அவைகளை இப்பொழுது நன்கு அறிந்திருந்தும் அந்த ஒளியை அவர்கள் பின்பற்றாமலிருந்தால், அப்பொழுது தேவன் அதற்காக அவர்களை உத்திரவாதமுள்ளவர்களாக்குவார் என்றே நான் கூறுகிறேன். நீங்கள் தற்பொழுது வரை அதை அறியாமலிருந்திருக்கலாம், ஆனால் இது முதற்கொண்டு நீங்கள் அதை அறிந்திருக்கிறீர்கள். புரிகிறதா?
இப்பொழுது அது சரியென்று நீங்கள் எண்ணாமலிருந்தால், வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். அப்படியானால் உங்களுடைய இடத்தை கண்டறிந்து, திரும்பி வந்து, அதை இந்த மேஜையின் மீது இன்றிரவு வைத்து, அது சரியா அல்லது இல்லையா என்பதை நாம் காணலாம். அதன் பின்னர் நீங்கள் போய் ஒரு திறந்த மனதுடனும், திறந்த இருதயத்துடனும் அதை ஆராய்ந்து பாருங்கள்.
182 இப்பொழுது, இந்த விதமான இந்தப் போதனை இப்பொழுது இங்குள்ள பிரான்ஹாம் கூடாரத்திற்கானதாய் உள்ளது என்பதைப் பாருங்கள். அங்கே…இல்லை…
183 இது, “பிரான்ஹாம் கூடாரம்” என்று பெயரிடப்பட்டிருக்க வேண்டும் என்று நான் விரும்பினதில்லை. இது “கூடாரம்” என்று மட்டும் அழைக்கப்பட வேண்டும் என்றும், அதனோடு என்னுடையப் பெயர் இணைந்திருக்கக் கூடாது என்றும் நான் விரும்பினேன்.
184 நான் இந்தச் சபையை மாற்றம் செய்ய ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன்…நாம் இதை வாங்கினோம் என்பதை நீங்கள் யாவரும் அறிவீர்கள். நான் பொது சேவை நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, நான் இதை வாங்கினேன். இங்கிருந்த இந்த கட்டிடத்தைச் சீரமைக்க சகோதரன் ஸ்டூவர் அவர்களும், மற்றவர்களும் அதன் பத்திரத்தை அங்கே வைத்து கடன் வாங்கினபோது என் பெயரை அதில் இணைத்தபடியால், அது அவ்வாறே அழைக்கப்பட்டது. எனவே இப்பொழுது நமக்கு உள்ள இந்தக் கடனை நான் அடைத்து முடித்தவுடன், இந்த சபை ஒரு பொது சொத்துரிமைக்கு மாற்றப்படப் போகிறது, அவ்வாறு மாற்றப்பட்டு அந்தப் பத்திரம் வழங்கப்படுகையில் என்னுடையப் பெயர் அதிலிருந்து நீக்கப்பட்டுவிடும்.
185 என்னுடைய பெயரின் பேரில் அந்தச் சபையானது இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அது ஒரு, “பிரான்ஹாம் கூடாரம்” என்றும் இருக்கக் கூடாது. அது ஒரு சபையாய், “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சபை” என்றோ அல்லது அதைப் போன்ற ஏதோ ஒன்றாய் இருக்க வேண்டும். “கர்த்தரின் கூடாரம்,” பாருங்கள், “வாசஸ்தலம்,” “ஜெபவீடு,” அல்லது ஏதோ ஒன்று, மற்ற ஏதாவது, ஒருவிதமான பெயர் வழங்கப்படும். சபையோரே தங்களுடையக் கூடாரத்தின் பெயரைத் தேர்ந்தெடுக்கட்டும். என்னுடைய பெயர், நான்—நான் ஒரு மனிதன். இந்தக் கூடாரத்திற்குப் பெயரிட என்னுடையப் பெயர் தகுதியாயிருக்கவில்லை, இனி ஒருபோதும் எந்தக் காரியத்திற்குமே தகுதியானதாயிராது. என்னுடையப் பெயரை இந்தக் கூடாரத்தின் மேல் வைக்க வேண்டியதாயிருந்த காரணம் என்னவெனில், என் பெயர் அந்த கட்டிடப் பத்திரத்தில், “பில்லி பிரான்ஹாம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. புரிகிறதா? எனவே இதில் என் பெயர் அங்கிருக்க வேண்டாம். வேண்டாம் ஐயா. இது ஒரு பொது சொத்துரிமைச் சபையாய் இருக்க வேண்டும். இது, இது இங்குள்ள இந்தச் சபையோருக்குரியதாயிருக்க வேண்டும்.
186 இந்தச் சபையானது தனியுரிமை செயல்பாட்டினையுடையதாய் உள்ளது. தர்மகர்த்தாக்களின் குழுவோ அல்லது கண்காணிகளின் குழுவோ நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறப்போகிறதில்லை. சபையோர் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தச் சபையே ஏகமனதோடு கூடிய பொது விருப்பத்தைத் தெரிவிக்கும். ஒரு தீர்மானம் என்றிருந்தால் அது முற்றிலும் அப்படித்தான் இருக்கும்.
187 உங்களுக்கு உங்களுடைய போதகரைப் பிடிக்கவில்லையென்றால், இரண்டு அல்லது மூன்றுபேர் போதகருக்கு விரோதமான ஏதோ ஒரு காரியத்தைக் கொண்டிருந்தால், அப்பொழுது அவர்கள் தங்களுடையக் கண்காணிகளோடும், தர்மகர்த்தாக்களோடும் எழும்பி அதைக் கூறிவிட முடியாது. அவர்கள் இங்கு எதன்பேரில் பணியாளராயிருக்கிறார்களோ அதன் பேரில் மட்டும் உள்ளவர்கள். அவர்கள் பெற்றிருப்பது ஒரு வாக்கேயாகும். அவ்வளவுதான். அவர் ஒரு உதவி மேய்ப்பனாயிருந்தாலும், அவர் பெற்றிருப்பதும் ஒரு வாக்காகத்தான் உள்ளது. அங்கே பின்னால் அமர்ந்துள்ள ஒரு சபை அங்கத்தினனைப் போன்றே அவரும் இருக்கிறார். எனவே சபையின் ஏகமனதோடு கூடிய பொது விருப்பமே அதனைத் தீர்த்து வைக்கிறது. அது உண்மையே. அதுதான் சரி. எந்தக் கண்காணிக் குழுவும் ஒரு போதகரை வெளியே அனுப்ப முடியாது அல்லது எந்த போதகரும் ஒரு கண்காணிக் குழுவை அனுப்பிவிட முடியாது. சபையானது, முழு வாக்கெடுப்பின் பொது விருப்பத்திற்கேற்ப அதைச் செய்கிறதாயிருக்கிறது.
188 அது தன்னுடைய தனியுரிமை செயல்பாடுடையதாய் உள்ளது. நமக்கு பேராயர்களேக் கிடையாது. நமக்கு பொது கண்காணிகளும் கிடையாது. நமக்கு இயேசு மாத்திரமே உண்டு. ஆமென்! அவரே பேராயராயிருக்கிறார். அவரே பொதுவான கண்காணியாயிருக்கிறார். அவரே தலைமைப் மேய்ப்பனாயிருக்கிறார். அவரே ராஜாவாயிருக்கிறார். அவரே கர்த்தராயிருக்கிறார். அவரே சுகமளிப்பவராயிருக்கிறார். அவரே எல்லாவற்றிற்கும் எல்லாமுமாயிருக்கிறார். நாம் அவருடையப் பிரஜைகளாய் இருந்து ஒளியில் நடந்துகொண்டிருக்கிறோம். ஆமென்.
189 “அவர் சபையில் சிலரை வைத்திருக்கிறார்” என்ன? சரீரமாகிய “சபையில்” “அங்கே சிலரை வைத்திருக்கிறார்.” என்ன?
“முதலாவது அப்போஸ்தகர்கள்,” அது மிஷனெரிமார்களாய் உள்ளது. நாம் இப்பொழுது இந்தச் சபையில் ஒருவரைப் பெற்றுள்ளோம். அது அங்கே பின்னால் அமர்ந்துள்ள ஓர் இளைஞன், என்னுடைய சிநேகிதன், சகோதரன், நான் அவனை கிரீச் ஜெப்பரீஸ் (Greech Jefferies) என்றே அழைக்கிறேன். அதாவது முதலாவது உயரிய அழைப்பு ஒரு மிஷனெரிக்குரியதாயுள்ளது. நீங்களோ, “ஒரு அப்போஸ்தலன் என்பவன் ஒரு மிஷனெரியா?” என்று கேட்கலாம். முற்றிலுமாக. போய் அகராதியில் அப்போஸ்தலன் என்பதன் பொருள் என்ன என்பதைக் கண்டறியுங்கள். அதன் பொருள், “அனுப்பப்பட்ட ஒருவன்” என்பதாயுள்ளது. போய் ஒரு மிஷனெரி என்பதன் பொருள், “அனுப்பப்பட்ட ஒருவன்” என்று உள்ளதைப் பாருங்கள். அதேக் காரியம். உயரிய கட்டளையென்பது கர்த்தராகிய இயேசுவிற்காக கடல் கடந்து பயணஞ்செய்கிற ஒரு மிஷனெரியின் பணியாயுள்ளது. உயரிய, “முதலாவது அப்போஸ்தலர்கள்”
190 “இரண்டாவது தீர்க்கதரிசிகள்.” ஒரு தீர்க்கதரிசி என்றால் என்ன? ஒரு ஞானதிருஷ்டிக்காரன். அவ்விதமாக…தன்னை கூறிக்கொள்பவனல்ல…
ஒரு அப்போஸ்தலன் என்பவன் தன்னை ஒரு மிஷனெரி என்று கூறிக்கொண்டு வீட்டில் தரித்திருப்பவனல்ல, ஆனால் உண்மையாகவே ஒரு மிஷனெரியாயிருக்கிறவன்.
ஒரு தீர்க்கதரிசியோ ஒரு ஞான திருஷ்டிக்காரனாய் இருக்கிறான்.
191 அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், போதகர்கள், சுவிசேஷர்கள், மேய்ப்பர்கள் என சரீரமானது அதைத்தான் கொண்டதாயிருக்கிறது.
அப்படியானால் அந்த சபைக்குள்ளாக ஒன்பது ஆவிக்குரிய வரங்கள் உள்ளன. அவைகள் ஞானம், அறிவு, தெய்வீக சுகமளித்தல், அந்நிய பாஷைகளில் பேசுதல், பாஷைகளுக்கு வியாக்கியானம்பண்ணுதல் போன்ற இந்த எல்லா வித்தியாசமான வரங்களும் அந்தச் சபைக்குள்ளாக காணப்படுகின்றன.
இந்த அப்போஸ்தலர்கள், மேய்ப்பர்கள், போதகர்கள், சுவிசேஷகர்கள் யாவரும் இங்கு நிச்சயமாய் இருக்கவேண்டும், இந்த வரங்கள், இந்தக் காரியங்கள் சரியாக கிரியை செய்து கொண்டிருக்க வேண்டும். [சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய விரலை ஒருமுறை சொடுக்குகிறார்—ஆசி.] எனவே அவர்கள் போலியான ஒரு காரியம் எழும்புவதைக் கண்டறிந்தால், அது வேதத்தின்படியில்லாதக் காரணத்தால் அவர்கள் அதை உடனடியாகக் கண்டிப்பர்.
யாராவது ஒருவர் இங்கு நடந்து வந்து, “தேவனுக்கு ஸ்தோத்திரம், நான் என்னுடைய கரங்களில் எண்ணெய் வடிதலைப் பெற்றுள்ளேன். இங்கேப் பாருங்கள். எனவே நீங்கள் பாருங்கள், நான்—நான்—நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுவிட்டேன் என்று நம்புகிறேன். ஆகையால் என்னுடையக் கரங்களில் எண்ணெய் வடிதலைப் பெற்றுக்கொண்டேன்” என்று கூறிப் பார்க்கட்டும்.
192 அப்பொழுது யாரோ ஒருவர் அவ்வாறு கூறுவதைக் கேட்கும் நீங்கள், “அது வேதப்பிரகாரமானதல்ல” என்று கூறிவிடுவீர்கள். அது உண்மை. “நாம் அந்தக் காரியத்தை அறைக்குள்ளாக போய் அமர்ந்து, வேதவாக்கியங்களினூடாக ஆராய்ந்து பார்ப்போம். அதுதான் பரிசுத்த ஆவியைப் பெற்றதற்கு அத்தாட்சி என்று வேதவாக்கியங்களில் எங்கே உள்ளது என்பதை எனக்குக் காண்பியுங்கள்” என்று கூறீவிடுவீர்கள்.
193 ஒருவர், “ஓ, நான் அந்நிய பாஷை பேசிவிட்டேன். எனவே நான் அதைப் பெற்றுக் கொண்டேன்” என்று கூறிவிட்டார் என வைத்துக்கொள்வோம்.
அப்பொழுது நீங்களோ, “அதுதான் பரிசுத்த ஆவியைப் பெற்றதற்கு அத்தாட்சி என்று வேதவாக்கியங்களில் எனக்குக் காண்பியுங்கள்” என்று கூறுவீர்கள். அது உண்மை.
194 ஒரு பெண், “ஓ, கர்த்தர் என்னைப் பிரசங்கிக்க அழைத்துவிட்டார்” என்று கூறுகிறாள் என்று வைத்துக் கொள்வோம்.
அப்பொழுது, நீங்கள் வேதவாக்கியங்களில் ஒரு ஸ்திரீ பிரசங்கம் செய்தாள் என்பதை எனக்குக் காண்பியுங்கள்” என்று கூறுவீர்கள். ஆம்.
195 மேலும் ஒருவர், “ஓ, கர்த்தர் என்னிடம் கூறினார் என்பதை நான் அறிவேன். நான் ‘பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில்’ ஞானஸ்நானம் பெற்ற அந்த இரவு அவர் என்னை ஆசீர்வதித்தார்” என்று கூறுகிறார் என வைத்துக்கொள்வோம்.
அப்பொழுது, “நீர் அவ்வாறு ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும் என்று வேதவாக்கியங்களில் எங்கு உள்ளது என்று எனக்குக் காண்பியும்” என்று கூறுவீர்கள்.
196 “பாருங்கள், நான் மற்ற எவரையும் போன்றே அவ்வளவு நன்றாகவே இருக்கிறேன். நான் ஒரு மெத்தோடிஸ்டு, அல்லது ஒரு பாப்டிஸ்டு அல்லது ஒரு பிரஸ்பிடேரியன். நான் பெந்தேகோஸ்தேக்காரன்” என்று கூறட்டும்.
அதற்கு, “தேவன் எங்கே அதைக் கூறினார் என்பதை வேதத்தில் எனக்குக் காண்பியுங்கள்” என்று கூறுவீர்கள், புரிகிறதா? அதுதான் உண்மை. காரணம் அது அங்கே இல்லை.
197 இப்பொழுது, இந்தக் கூடராத்தின் அங்கத்தினர்களாகிய உங்களுக்கு ஒரு மிகப்பெரிய வரையறையற்ற சவால் ஒன்று உண்டு. இப்பொழுது நீங்கள் தவறாயுள்ளதாகக் கருதுகிற ஒரு காரியத்தையாவது நீங்கள் கண்டறிந்தால், அதாவது நான் இந்தக் காலையில் கூறியிருக்கிற ஒரு காரியமாவது வேதத்திற்கு முரணாயிருந்ததாகக் கண்டறிந்தால், நீங்கள் அதை இன்று மாலையே இந்தப் பிரசங்க பீடத்தின்மேல் கொண்டு வந்து வைக்க கடமைப்பட்டிருக்கிறீர்கள். அது உண்மை. நீங்கள் அதைக் கொண்டு வந்து இங்கே வையுங்கள். வேதத்தில் உள்ள வசனத்தில் எங்கே ஒரு ஸ்தாபனம் இருந்தது என்றும், இயேசு ஒரு ஸ்தாபனத்தை எங்கே உண்டாக்கினார் அல்லது நான் போதித்துள்ள இந்தக் காரியங்களில் எது முரணாயுள்ளது என்பதை வேதத்தில் எனக்குக் காண்பியுங்கள். எங்கே அவர் சபையில் ஒரு ஸ்திரீயை ஒரு பிரசங்கியாக எப்போது நியமஞ்செய்திருந்தார்; அவர் அங்கே தெளிப்பு ஞானஸ்நானத்தை, ஊற்றுதலை எப்போது நியமனஞ்செய்திருந்தார்; இல்லையென்றால் நான் பேசிக்கொண்டு வந்துள்ள எந்தக் காரியத்தைக் குறித்த மாதிரியாவது முரணாயிருந்தால், எனக்கு வேதத்தில் காண்பியுங்கள். அதை இங்கே வையுங்கள்.
ஆகையால் இன்றிரவு கர்த்தருக்குச் சித்தமானால், நாம், “பரிசுத்த ஆவியின் அபிஷேகம்,” “சர்ப்பத்தின் வித்து மற்றும் ஸ்திரீயைக் குறித்த” இந்த காரியங்களுக்குள்ளாகச் சென்று ஆராய்ந்து பார்க்கப்போகிறோம். சரி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. எத்தனை பேர் நலமாக உணருகிறீர்கள்?
ஓ, நான் பயணிப்பதுபோன்று உணருகிறேன்,
ஓ, நான் பயணிப்பதுபோன்று உணருகிறேன்;
இப்பொழுது அதை உண்மையாக கர்த்தருக்கு இனிமையாகப் பாடுங்கள்.
பரலோக வீடு பிரகாசமாயும், அழகாயுமுள்ளது,
நான் பயணிப்பது போன்றே உணருகிறேன்.
ஓ, நான் பயணிப்பது போன்றே, பயணிப்பது போன்றே உணருகிறேன்,
ஓ, நான் பயணிப்பது போன்றே, பயணிப்பது போன்றே உணருகிறேன்;
என்னுடைய பரலோக வீடு பிரகாசமாயும், அழகாயும் உள்ளது,
நான் பயணிப்பது போன்றே உணருகிறேன்.
[ஒலி நாடாவில் காலி இடம்—ஆசி.]
198 இப்பொழுது, நான் ஓய்வெடுத்துக் கொண்டு வருகிற இந்த சில வாரங்களில் நான் கண்டறிந்துள்ள ஒரு காரியம் எனக்கு தொல்லையாய் இருந்து வருகிறது. எனவே நான் அதை என்னுடைய சபையினிடத்தில் இப்பொழுதே அறிக்கை செய்ய விரும்புகிறேன். நான் அந்த கர்வாலி மற்றும் வாதுமை மரங்களுக்குப் பின்னாக கீழே அமர்ந்து படித்துக்கொண்டிருந்தபோது, “நான் என்னுடைய முதல் தவறை எங்கே செய்தேன்? என்னைத் தவறாகப் போகும்படிக்குச் செய்தது எது? அது என்ன?” என்று எண்ணிப்பார்த்தேன். அப்பொழுது எது என்னைத் தவறு செய்ய வைக்கிறது என்பதை நான் கண்டறிந்தேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏதோ ஒரு காரியத்தினால் தள்ளுண்டுபோகப் போகிற அத்தகைய ஒரு காரியமும் உண்டு. நீங்கள் அதை அறிந்துள்ளீர்களா? உங்களால் சரியாயிருக்க முயற்சிக்க முடியும், பயனுடையவராயிருக்க முயற்சிக்க முடியும். அப்பொழுது நீங்களும் கூட உறுதிவாய்ந்தவராயிருக்க முடியும். ஜனங்கள் என்னைச் சுற்றி சுற்றி வற்புறுத்தி அழைப்பதை நான் கண்டிருக்கிறேன். பார்த்தீர்களா?
அவர்கள், “நல்லது, சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, நீர் இங்கே வாரும். கர்த்தர் இதை உம்மிடத்தில் கூறும்படி எனக்குச் சொன்னார்” என்று கூறுவார்கள்.
அப்பொழுது நானோ, “நல்லது, சரி, சகோதரனே, இதோ நான் வருகிறேன்” என்று கூறுவேன்.
மேலும் அவர்கள், “ஓ, சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, நீர் அங்கே போக வேண்டாம், இங்கே போக வேண்டாம்” என்பார்கள்.
199 “ஒருகால் நான் அங்கு போகாதது நலமாயிருக்கலாம்.” புரிகிறதா? நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்கிறதில்லை. அது என்னை எளிதில் அமைதியிழக்கச் செய்கிறது.
கர்த்தர் என்னைப் போகும்படி வழிநடத்துகிற இடத்திற்கே நான் போய்க்கொண்டிருக்கிறேன். அதைக் குறித்து யார் என்னக் கூறினாலும் நான் கவலைப்படுகிறதில்லை. புரிகிறதா? அது முற்றிலும் உண்மை. ஆகையால் நான் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தமாட்டேன்.
200 அதன்பின்னர் நான் மற்றொருக் காரியத்தைக் கவனித்தேன். என் பிள்ளைகள் அங்கே ஒரு கூட்ட நரம்புக்கோளாறுக்குட்பட்ட பயங்காளிகளாகி இரவிலே அலறுகிறார்கள். அங்கே வீட்டிற்கு முன்னாலும் பின்னாலும் எல்லா நேரத்திலும் ஜனங்கள் குவிந்துபோயிருக்கிறார்கள். ஜனங்கள் எல்லாவிடங்களிலிருந்தும் வந்துகொண்டேயிருக்கிறார்கள். அந்தவிதமாக வருகிற சுகவீனமுள்ள ஜனங்களை நான் குற்றஞ்சாட்டவில்லை. ஆனால் நாம் அதற்காக ஆயத்தம் செய்யப்பட்டுள்ள எல்லாவற்றையும் பெற்றுள்ளோம்.
இங்கே சபையிலே நான் ஒரு கூட்டம் நடத்த வரும்போது, ஏன்? நான் கிட்டத்தட்ட மெல்ல நழுவி சபையிலிருந்து வெளியே செல்ல வேண்டியவனாயிருக்கிறேன், ஏனென்றால் ஜனங்கள் இதற்கு, அதற்கு என்று பிடித்துக்கொள்கிறார்கள். எனவே நான் மிகவும் களைப்புற்று, சில நேரங்களில் ஒரு சுகமளிக்கும் ஆராதனையிலிருந்து வரும்போது, நான் அவர்களுக்கு உண்மையாகவே உதவி செய்கிறவனாக இருப்பதில்லை. நான் கூறுவதோ…
“உதாரணமாக, சகோதர பிரான்ஹாம், கர்த்தர் சொன்னார்…”
“ஆம். நாங்கள் இங்கு வந்து, போகும்போது…” அதனால் எந்த நன்மையும் இல்லை. நான் அதை செய்யக் கூடாது. நாம் அதைச் செய்ய வேண்டியதில்லை.
201 இப்பொழுதோ அதைக் கவனித்துக்கொள்ள நாங்கள் ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். இப்பொழுது ஞாபகங்கொள்ளுங்கள், பார்க்க விரும்புகிற எவரையும்…நான் ஒவ்வொருவரையும் காண விரும்புகிறேன். நான் சற்று நேரம் எடுத்துக்கொண்டு ஜனங்களோடுப் பேச விரும்புகிறேன். எனவே இந்தவிதமாக நீங்கள் மறுத்துவிட முடியாது. நீங்கள் யாரோ ஒருவரை அங்கே உள்ளே அனுப்புகிறீர்கள். முதல் காரியம் உங்களுக்குத் தெரியுமா, உங்களுடைய எல்லா நேரமும் முடிந்துவிடுகின்றபடியால், உங்களால் மற்றொருவரைக் காணும்படி உள்ளே அனுப்ப முடிகிறதில்லை. அது சரியல்ல. ஜனங்கள் ஒரு சில வார்த்தைகளைக் கேட்கவே உங்களிடத்திற்கு நீண்ட தூரத்திலிருந்து வருகின்றனர். என்னில் விசுவாசம் கொண்டுள்ள ஜனங்கள் அதை நம்பும்படிக்குத் தேவன் உதவி செய்திருப்பாரேயானால், அவர்களுக்குக் கற்பிக்கும்படியான அந்தக் கொஞ்ச நேரமானது ஏற்புடையதாயிருக்கிறது. எனவே நீங்கள் அவர்களை, “இல்லை, நான் யாரையும் காண்கிறதில்லை” என்று கூறி புறக்கணித்துவிடக் கூடாது. அது சரியானதல்ல. ஏனென்றால் நான் அதைச் செய்ய பயப்படுகிறேன், காரணம்…
யாரோ ஒருவர் வந்து, “இப்பொழுது, கர்த்தர் என்னிடம் சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, நீர் இன்னின்ன, குறிப்பிட்ட ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என்று சொல்கிறார். இதுவே—இதுதான் இப்பொழுது கர்த்தருடைய சித்தமாயுள்ளது” என்று கூறுகிறார் என வைத்துக்கொள்வோம். அப்பொழுது கர்த்தர் தம்முடையச் சித்தத்தை என்னிடம் சொல்லுவார். புரிகிறதா?
202 திரு. கிங் அவர்களை, வழக்கமாக இங்கே அமரும் அவரை, அங்கே கீழே அமர்ந்திருக்கும் R.A. கிங் என்பவரை எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது? அவர் சொன்னார்…நான் ஒருமுறை அங்கே ஒரு படகினை தயாரித்துக் கொண்டிந்தேனாம். அப்பொழுது அவர், “இப்பொழுது சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, நீர் உம்முடைய சொந்த விளக்க விவர விருப்பப்படியே அந்தப் படகினைத் தயாரித்திருக்கிறீர்” என்றார்.
203 மேலும் அவர், “நான் தயாரித்துக்கொண்டிருந்த…இல்லை, யாரோ ஒரு மனிதன் ஒருமுறை ஒரு படகைத் தயாரித்துக் கொண்டிருந்தபோது, ஒரு நபர் வந்து, ‘நீர் இந்தப் படகின் பக்க மேல்விளிம்புகளை இந்தவிதமாக வெட்ட வேண்டும்’ என்று கூறினாராம். அப்பொழுது அவர் அதை அந்த விதமாகவே செய்ய முயற்சித்தாராம். மீண்டும் மற்றொருவர் வந்து, ‘ஓ, நீர் அதை அந்தவிதமாகச் செய்ய வேண்டும். படகின் பக்கவளை வரிக்கட்டைகள் மற்ற ஒவ்வொன்றும் இந்தவிதமாய் இருக்க வேண்டும், படகோ இந்த விதமாய் இருக்க வேண்டும், படகின் முன்புறம் இந்தவிதமாய் இருக்க வேண்டும், அதன் தலைப்பகுதி, படகின் பின்பகுதி மற்றும் சுக்கான் இந்தவிதமாய் இருக்க வேண்டும்”’ என்று கூறினாராம்.
204 எனவே அவர், “அதை செய்து முடித்துவிட்டுப் பார்த்தபோது, அது இருந்ததிலேயே மிகவும் மோசமாய் காணப்படுகிற தோற்றங்கொண்டதாயிருந்தது” என்று கூறினார். மேலும் அவர், “அந்தப் படகை கொண்டு சென்று, பின் முற்றத்திலேயே அதை வைத்துவிட்டேன். அதன்பின்னர் நான் என்னுடைய ரம்பத்தால் அறுத்து மற்றொன்றை தயாரித்தேன்” என்றார்.
205 மேலும் அவர், “யாரோ ஒருவர் அருகில் வந்து, ‘நீ இதை இந்தவிதமாகக் கட்ட வேண்டும்’ என்று கூறினார். எனவே ‘அந்த ஒன்று மற்றவர்களுடைய அறிவுரையின் மூலம் கட்டப்பட்டு வெளியே பின் முற்றத்தில் உள்ளது. ஆனால் இந்த ஒன்று நான் நினைக்கிற விதமாகவே இருக்க வேண்டுமென்று கருதி அதன்படியே நான் தயாரித்துக் கொண்டிருக்கிறேன்”’ என்று கூறினார். அது உண்மையே.
206 இப்பொழுது, தேவன், நான் எந்தக் காரியத்தையாவது செய்ய வேண்டும் என்று அவர் விரும்புவாரேயானால், அப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் என்னிடம் கூறுவார். எனவே நான் செய்துகொண்டிருப்பதில் நான் தவறாயிருக்கிறேன் அல்லது அதைப் போன்ற ஏதோக்காரியம் தவறு என்று நீங்கள் நினைத்தால், அப்பொழுது தேவன் என்னை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று எனக்காக நீங்கள் ஜெபியுங்கள். புரிகிறதா? காரணம் என்னால் அநேகருக்கு செவிகொடுக்க முடியாது.
207 இப்பொழுது, நீங்கள் ஒருகால் சபையில் இருக்கலாம், நீங்கள் ஒன்று அல்லது இரண்டு பேரிடத்தில் கேட்கக் கூடியவராயிருக்கலாம், ஆனால் நான் இங்கிருந்து இலட்சக்கணக்கான ஜனங்களிடத்திற்குப் போய் சேரும்படி பேசிக் கொண்டிருக்கிறேன். என்னால் எப்படி அதைச் செய்ய முடியும்? ஆகையால் நான், “எந்த ஒரு மனிதனுக்கும் எந்த ஒரு பதிலையும் கூறுவதற்கு முன்பு, நான் அமர்ந்து, அதைக் குறித்து ஆராய்ந்து படித்துப்பார்த்து, பரிசுத்த ஆவியானவர் என்னை எந்தவிதமாக நடத்துகிறார் என்று பார்க்கிறேன். அதன்பின்னர் அது என்னவாயிருந்தாலும், அதுவே என்னுடையத் தீர்மானம் என்று நான் அவனுக்கோ அல்லது அவளுக்கோ கூறப்போகிறேன். நான் அந்தப் பதிலில் உறுதியாய் இருப்பேன். அது உண்மை, அங்கே உறுதியாய் தரித்திருங்கள்” என்றே கூறுகிறேன்.
208 இப்பொழுது நேர்முகப் பேட்டிகள் ஆயத்தமாக்கப்பட்டிருக்கின்றன. எவராவது என்னைக் காண வேண்டுமென்று விரும்பினால், Butter 2 — 1519—என்ற எண்ணிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டால் போதும், தொலைபேசி விலாச விபர புத்தகத்தை எடுத்துப் பார்த்து, அதில் வில்லியம் பிரான்ஹாம் Butter 2 — 1519—என்ற எண்ணைக் கண்டறிந்து தொடர்பு கொண்டால், பேட்டிகளுக்கான ஆயத்தங்கள் ஏற்பாடு செய்யப்படும். [தொலைபேசி எண் மாற்றப்பட்டிருக்கிறது.—ஆசி.] எனவே சரியான நேரம், சந்திக்க வேண்டிய இடம் போன்றவை எழுதி வைக்கப்படும். அப்பொழுது என்னால் ஒவ்வொரு நபரையும் சந்தித்து, அவர்களைக் கண்டு, அவர்களுடையத் தொல்லைகள் மற்றுமுள்ள காரியங்களுக்கு உதவிசெய்ய முடியும். ஆனால் என்னால் ஒரு நபருக்கு ஒரு நாள் முழுக்க அல்லது நான்கு அல்லது ஐந்து மணிநேரங்கள் ஒருவருக்காகவே செலவழித்துவிட்டு, அடுத்த நாள் முழுமையாக யாருக்குமே எதுவும் செய்யாமல் விட்டுவிட முடியாது. அப்படியானால் நமக்கு அதிகப்படியான நேரம் தேவைப்படும். ஆகையால் நாங்கள் அவர்களிடத்தில் அவர்களுக்கு என்ன தேவை என்றும், அதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்ட பிறகு, அவர்களை உள்ளே அழைத்து வருகிறோம். நாம் ஒவ்வொரு நபரையும் பார்க்க வேண்டும். நாம் அவ்வாறு செய்யத்தான் வேண்டும்.
209 தொலைபேசியில் வரும் அழைப்புகளுக்குப் பதில் கூற இங்கே திரு.மெர்சியர் அல்லது திரு.கோட் அவர்கள் இங்கே அமர்ந்திருப்பர். அவர்கள் பேட்டிகளுக்கான சரியான நேரத்தையும் மற்ற விபரத்தையும் என்னுடையக் குறிப்பேட்டில் எழுதி வைத்து ஆயத்தம் செய்வர். அதன் பின்னர் நான் ஒவ்வொரு நபரையும் காண்பேன்.
210 அது ஒரு விசேஷித்தக் காரியமாயிருந்தால், அது ஜெப ஆராதனைக்கான நேரத்தில் வியாதிஸ்தர் வந்திருந்தால், அப்பொழுது உங்களுடைய சுகவீனமான நபர்களை, அவதியுறுவோரை, உள்ளே அழைத்து வாருங்கள். அவர்கள் ஒரு இரவோ அல்லது இரண்டு இரவுகளோ அமர்ந்து செய்தியைக் கேட்கட்டும். ஆனாலும் அவர்களில் அவசரமான தேவையுள்ள வியாதியஸ்தருக்காக நாங்கள் ஜெபிப்போம்.
211 ஆனால் அதன் பின்னர், ஏறக்குறைய இரண்டு இரவுகளுக்குப் பிறகு, நான் என்னுடைய புதிய ஊழியத்தைத் துவங்க வேண்டும். நான் அவர்களை இங்கே பின்னால் உள்ள இந்த அறைக்கு கொண்டு செல்ல வேண்டும். ஏனென்றால், நீங்கள் அந்தத் தரிசனத்தை அறிவீர்கள். எத்தனை பேருக்கு அந்தத் தரிசனம் நினைவிருக்கிறது? நிச்சயமாக உங்களுக்கு நினைவிருக்கிறது. அந்தக் கூடாரத்தில் உள்ள சிறு அறையைக் குறித்தத் தரிசனம்.
212 இப்பொழுது, அந்தப் புதிய ஊழியத் தரிசனப்படி ஸ்திரீகளை அந்த அறைக்குள்ளாக அனுப்ப வேண்டியிருப்பதால் நான் முதல் இரவன்று மேடாவை என்னோடு கூட அழைத்துச்செல்லப் போகிறேன். அப்பொழுது அது…அங்கே மேடாவோடு உள்ளே இருக்கையில் அது எப்படி ஒழுங்காக நடைபெறுகிறதா என்று பார்ப்பேன். அப்பொழுது அது சரியாக, அந்தவிதமான முறையில் சரிவர ஒழுங்காக நடைபெறவில்லையென்றால், அப்பொழுது நான் ஒரே நேரத்தில் இரண்டு ஸ்திரீகளை உள்ளே வரும்படி செய்யப் போகிறேன், ஏனென்றால் அவர்கள் அங்கே உள்ளே இருக்கிற ஒரு மனிதனிடத்திற்கு வருகின்றார்கள். புரிகிறதா? நிச்சயமாகவே நாம் தெளிவான சிந்தனைகளை உடையவர்களாயிருக்கிறோம். ஆனால் பிசாசு அங்குள்ள எதைக் குறித்தும் ஒன்றுமே கூறிவிடக் கூடாது. நீங்கள் பாருங்கள், எனவே அவன் அதைக் குறித்து என்ன நினைப்பானோ, உலகம் என்னக் கூறுமோ பாருங்கள்.
ஆனால் இதுவோ நான் வெளிப்படையாகத் தெரியும்படிக்கு அனுமதிக்க முடியாத ஓர் ஊழியமாய் உள்ளது. இந்த ஊழியத்தை எவருமே எப்போதுமே இதைப்போலவே பாவனை செய்ய முடியாது. உங்களுக்குப் புரிகிறதா? இல்லை ஐயா, இல்லை. இதில் எல்லாமே அடங்கி ஒன்றாயிருப்பதையும் நான் இப்பொழுது அறிவேன். எனவே அந்த ஊழியமும் தொடங்கி, முழு உறுதியாய் நிகழப்போவதைப் போன்றுள்ளதை என்னால் காணமுடிகிறது. அது அங்கே முன் வைக்கப்பட்டிருக்கிறது.
213 நான் இன்று காலை எழும்புவதற்கு முன்பு, சகோதரன் நெவில் அவர்களே, நான் கடந்த இரவு ஒரு சொப்பங் கண்டு கொண்டிருந்தேன். நான் ஒரு சொப்பனம் கண்டு கொண்டிருந்தேன். நான் நினைத்திருந்த அந்த ஊழியம்…நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது என்னவாயிருந்தாலும், ஓ, நீங்கள் சம்பவிக்கிற காரியங்களைக் குறித்துப் பேசுகிறீர்கள். நான் அப்படிப்பட்ட ஒன்றை ஒருபோதும் கண்டதேயில்லை. எனவே நான் எழும்பி அழுது துதித்தேன். நான் தேவனைத் துதித்துக்கொண்டே அங்கே படுத்துக்கொண்டிருந்த என் மனைவியினுடைய முகத்தில் இந்த விதமாக என் கையை வைத்து இடிப்பதுபோல மோதினேன்.
ஓ, ஏதோ ஒரு காரியம் இங்கே நிகழ ஆயத்தமாயிருப்பதையும் அது உறுதியாய் நிகழ்வுள்ளது என்பதையும் நான் அறிவேன். அந்தச் சம்பவம் எப்போதும் இருந்துவந்ததைக் காட்டிலும் மகத்தான ஒன்றாக இருக்கப் போகிறது. அது அற்புதமானதாக இருக்கப்போகிறது. தேவன் ஏதோ ஒரு மகத்தான காரியத்தைச் செய்ய ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார் என்பதை நான் விசுவாசிக்கிறேன். ஆனால் நாம் இப்பொழுது அதை நிதான புத்தியோடும், நுண் மதிப்போடும், தேவனுடைய வார்த்தையில் சரியாகவும் அணுக வேண்டியதாயுள்ளது. சரியாக…ஓ, நாம் அவரை நேசிக்கிறோம்.
214 இப்பொழுது நினைவிருக்கட்டும், உங்களுடைய நண்பர்களில் எவராவது அல்லது வேறு யாராவது என்னைக் காண வேண்டுமானால், தனிப்பட்ட முறையில் ஏதோ ஒரு சிறு காரியத்தைக் குறித்து என்னோடேப் பேச விரும்பினால், அப்பொழுது அவர்கள் Butter 2 - 1519—என்ற தொலைப்பேசி எண்ணில் கூப்பிடலாம். நேர்முகப் பேட்டியும் அந்த இடத்தில் ஏற்பாடு செய்யப்படும். [தொலைப்பேசி எண் மாற்றப்பட்டுள்ளது.—ஆசி.] என்னால் அவர்களை அங்கே வீட்டைச் சுற்றியோ, இங்கே கூடாரத்தைச் சுற்றியோ வைத்துக்கொண்டுப் பேசமுடியாது, ஏனென்றால் நீங்கள் இங்கே உள்ளே வந்து…
நான் உண்மையாகவே அதிக நேரமாகப் பிரசங்கிக்கிறேன். நான் உங்களோடு அதிக நேரம் இல்லாதிருக்கிற காரணத்தால், நான் இங்கே தங்கியிருக்கிறேன். ஒவ்வொரு வார்த்தையையும் புரிய வைக்கும்படிக்கு என்னால் முடிந்தளவு உங்களைப் பிடித்து வைத்துக்கொண்டேன். ஏனென்றால் நண்பர்களே, நாம் இதைச் செய்யும்படியாய் பெற்றிருக்கிற ஒரே நேரம் இதுவேயாகும். இவை யாவும் வெகு சீக்கிரத்தில் முற்றுப் பெறப் போகின்றது. நாம் கீழேயுள்ள பள்ளத்தாக்கிற்குச் சென்றுகொண்டிருக்கிறோம். கடந்த வருடம் இங்கிருந்து, இப்பொழுது மரித்துப் போயிருக்கிறவர்களைப் பாருங்கள். புரிகிறதா? ஆகையால் நாம் கீழே பள்ளத்தாக்கிற்குச் சென்று கொண்டிருக்கிறோம். நாம் இப்பொழுது அதைச் செய்தாக வேண்டும். அது இப்பொழுதே செய்யப்பட்டாக வேண்டும். இப்பொழுது அந்தக் காரணத்தினால்தான் உங்களைப் பிடித்து வைத்துவிட்டேன்.
215 நீங்களோ, “அப்படியானால் அதற்கான, அதைக் குறித்த வேதவாக்கியம் எங்காகிலும் உள்ளதா?” என்று கேட்கலாம்.
ஆம், பவுல் ஓர் இரவிலே முழு இரவும் பிரசங்கித்தான். அப்பொழுது ஒரு மனிதன் கட்டிடத்தின் மேலிருந்து விழுந்து மரித்துப்போனான். எத்தனை பேர் அதை அறிவீர்கள்? முழு இரவுமே பிரசங்கித்தானே! அப்பொழுது பவுல் அங்கு சென்று, அவன் மீது தன்னுடைய சரீரத்தை வைத்து அணைத்துக்கொண்டபோது, அந்த நபருடைய இருதயம் துடிக்கத் துவங்கினபடியால், அவன் உயிர் பெற்றதை உணர்ந்து, “கலங்காதிருங்கள்”…என்று அவன் கூறினான். [ஒலிநாடாவில் காலி இடம்—ஆசி.]